உள்ளடக்கத்துக்குச் செல்

2-ஐதராக்சி பியூட்டைரிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2-ஐதராக்சி பியூட்டைரிக் அமிலம்
2-ஐதராக்சிபியூட்டனாயிக் அமில மூலக்கூறு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2-ஐதராக்சிபியூட்டனாயிக் அமிலம்
வேறு பெயர்கள்
ஆல்பாஐதராக்சிபியூட்டைரேட்டு
இனங்காட்டிகள்
565-70-8 N
ChEBI CHEBI:1148 Y
ChEMBL ChEMBL567588 Y
ChemSpider 10792 Y
InChI
  • InChI=1S/C4H8O3/c1-2-3(5)4(6)7/h3,5H,2H2,1H3,(H,6,7) Y
    Key: AFENDNXGAFYKQO-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C4H8O3/c1-2-3(5)4(6)7/h3,5H,2H2,1H3,(H,6,7)
    Key: AFENDNXGAFYKQO-UHFFFAOYAH
யேமல் -3D படிமங்கள் Image
Image
ம.பா.த 2-hydroxybutyric+acid
பப்கெம் 11266
  • CCC(O)C(=O)O
  • O=C(O)C(O)CC
பண்புகள்
C4H8O3
வாய்ப்பாட்டு எடை 104.11 g·mol−1
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் ஐதராக்சிபியூட்டைரேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

2-ஐதராக்சி பியூட்டைரிக் அமிலம் (2-Hydroxybutyric acid) என்பது C4H8O3 என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இந்த ஐதராக்சிபியூட்டைரிக் அமிலத்தை ஆல்பா- ஐதராக்சி பியூட்டரேட்டு மற்றும் α- ஐதராக்சி பியூட்டரேட்டு என்ற பெயர்களாலும் அழைப்பர். இச்சேர்மத்தில் உள்ள கார்பாக்சில் குழுவிற்கு அடுத்து இடம்பெற்றுள்ள கார்பனுடன் ஐதராக்சில் குழு சேர்ந்திருக்கிறது. டி-2- ஐதராக்சி பியூட்டைரிக் அமிலம், எல்-2- ஐதராக்சி பியூட்டைரிக் அமிலம் என்ற இரண்டு எதிருருக்களைப் பெற்றுள்ள ஒரு நாற்தொகுதிச் சேர்மமாகவும் இது கருதப்படுகிறது.

2-ஐதராக்சிபியூட்டைரிக் அமிலத்தின் இணை காரமான 2-ஐதராக்சிபியூட்டைரேட்டு எல்-திரியோனின் சிதைமாற்றம் செய்யும் அல்லது குளூட்டாதயோன் தயாரிக்கும் பாலூட்டிகளின் தசைகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. ஆக்சிசனேற்ற அழுத்தம் அல்லது நச்சேற்ற நீக்கத் தேவைகளால் குளூட்டாதயோன் தயாரிக்கும் வேகம் அதிகரிக்கிறது. இத்தகைய வளர்சிதை மாற்ற அழுத்த நிபந்தனைகளால் குளூட்டாதயோன் தயாரிப்புக்குத் தேவையான எல்-சிசுட்டின் வழங்கல் கட்டுபடுத்தப்படுகிறது. எனவே மெத்தியோனின் தயாரிக்கும் மெத்திலேற்ற மாற்ற வழிமுறையிலிருந்து சிசுட்டாதயோனின் தயாரிக்கும் சல்பியுரேற்ற மாற்ற வழிமுறைக்கு ஓமோசிசுட்டின் திசைதிருப்பப்படுகிறது. சிசுட்டாதயோனின் சிசுட்டினாக பிளவுபடும்போது உடன்விளை பொருளாக 2-ஐதராக்சிபியூட்டைரேட்டு வெளிவிடப்படுகிறது.

α-ஐதராக்சிபியூட்டைரேட்டு நீரிழிவு இல்லாத உயிரினங்களில் இன்சுலின் தடை காட்டியாக பயன் படுத்தப்படுகிறது[1]. குளுக்கோசு ஏற்புத்திறன் மோசமாதலை முன்கனிக்கவும் α-ஐதராக்சிபியூட்டைரேட்டு பயன்படுத்தப்படுகிறது[2] .

மேற்கோள்கள்

[தொகு]