2-எத்திலெக்சனாயிக்கு அமிலம்
| பெயர்கள் | |
|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2-எத்திலெக்சனாயிக்கு அமிலம்[1] | |
| இனங்காட்டிகள் | |
| 149-57-5 72377-05-0 எசு ஆடி எதிருரு 56006-48-5 ஆர் ஆடி எதிருரு | |
Beilstein Reference |
1750468 |
| ChEMBL | ChEMBL1162485 ChEMBL1162487 ChEMBL1162486 |
| ChemSpider | 8373 70431 ஆர் 119200 எசு |
| EC number | 205-743-6 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| ம.பா.த | 2-எத்திலெக்சனாயிக்+அமிலம் |
| பப்கெம் | 8697 78052 ஆர் 135309 எசு |
| வே.ந.வி.ப எண் | MO7700000 |
| |
| UNII | 01MU2J7VVZ |
| பண்புகள் | |
| C8H16O2 | |
| வாய்ப்பாட்டு எடை | 144.21 g·mol−1 |
| தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
| அடர்த்தி | 903 மி.கி மி.லி−1 |
| உருகுநிலை | −59.00 °C; −74.20 °F; 214.15 K |
| கொதிநிலை | 228.1 °C; 442.5 °F; 501.2 K |
| மட. P | 2.579 |
| ஆவியமுக்கம் | <1 பாசுக்கல் (25 °செல்சியசு) |
| காடித்தன்மை எண் (pKa) | 4.819 |
| காரத்தன்மை எண் (pKb) | 9.178 |
| ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.425 |
| வெப்பவேதியியல் | |
| Std enthalpy of formation ΔfH |
−635.1 கியூல் மோல்−1 |
| Std enthalpy of combustion ΔcH |
−4.8013 – 4.7979 மெகாயூல் மோல்−1 |
| தீங்குகள் | |
| GHS குறியீடு: | |
விளக்கப்படங்கள் |
|
குறியீட்டுச் சொல் |
அபாயம் |
இடர் அறிக்கைகள் |
H312, H318, H361 |
முன்னெச்சரிக்கை அறிக்கைகள் |
P280, P305+351+338 |
| தீப்பற்றும் வெப்பநிலை | 114 °C (237 °F; 387 K) |
Autoignition temperature |
371 °C (700 °F; 644 K) |
| வெடிபொருள் வரம்புகள் | 0.9–6.7% |
| Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose) |
|
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
2-எத்திலெக்சனாயிக்கு அமிலம் (2-Ethylhexanoic acid) என்பது CH3(CH2)3CH(C2H5)CO2H என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பொதுவாக இதை ஆக்டாயிக்கு அமிலம் என்று அழைக்கிறார்கள்.[2] ஒரு கார்பாக்சிலிக் அமிலமான இச்சேர்மம், முனைவற்ற கரிமக் கரைப்பான்களில் கரையக்கூடிய கொழுப்பில் கரையும் உலோக வழிப்பெறுதிகளைத் தயாரிக்க பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. 2-எத்திலெக்சனாயிக்கு அமிலம் ஒரு நிறமற்ற பிசுபிசுப்பு எண்ணெயாகும். ஒளியியல் ரீதியாக செயலற்ற தன்மையைக் கொண்ட சமத்திருப்பக் கலவையாக வழங்கப்படுகிறது.
தயாரிப்பு
[தொகு]2-எத்திலெக்சனாயிக்கு அமிலம் தொழில்துறை ரீதியாக புரோப்பிலீனில் இருந்து தயாரிக்கப்படுகிறது. புரோப்பிலீன் ஐதரோபார்மைலேற்றம் செய்யப்பட்டு பியூட்டிரால்டிகைடு தயாரிக்கப்படுகிறது. இது ஆல்டால் ஒடுக்கம் செய்யப்பட்டு 2-எத்தில்யெக்சீனால் தயாரிக்கப்படுகிறது. பின்னர் இது ஐதரசனேற்றம் செய்யப்பட்டு 2-எத்தில்யெக்சனால் தயாரிக்கப்படுகிறது. இறுதியாக இந்த ஆல்டிகைடு ஆக்சிசனேற்றம் செய்யப்பட்டு 2-எத்திலெக்சனாயிக்கு அமிலம் என்ற கார்பாக்சிலிக் அமிலம் உருவாகிறது.[3]
உலோக எத்திலெக்சனோயேட்டுகள்
[தொகு]
2-எத்திலெக்சனாயிக்கு அமிலம் உலோக நேர்மின் அயனிகளுடன் சேர்ந்து வினைபுரிந்து விகிதவியல் அளவிலான அசிட்டேட்டு சேர்மங்களை உருவாக்குகிறது. இந்த எத்திலெக்சனோயேட்டு சேர்மங்கள் கரிம மற்றும் தொழில்துறை வேதியியல் தொகுப்பு வினைகளில் பயன்படுத்தப்படுகின்றன.[4] இவை பலபடியாக்கல் வினைகளில் வினையூக்கிகளாகவும், ஆக்சிசனேற்ற வினைகளுக்கு எண்ணெய் உலர்த்தும் முகவர்களாகவும் செயல்படுகின்றன.[5] இவை முனைவற்ற கரைப்பான்களில் அதிகம் கரையக்கூடியவையாகும். இந்த உலோக அணைவுகள் பெரும்பாலும் உப்புகள் என்று விவரிக்கப்படுகின்றன. இருப்பினும், அவை அயனி அல்ல, ஆனால் மின்னூட்ட-நடுநிலை ஒருங்கிணைப்பு சேர்மங்களாகும். இவற்றின் கட்டமைப்புகள் தொடர்புடைய அசிடேட்டுகளைப் போலவே இருக்கும்.
சில உலோக எத்திலெக்சனோயேட்டுகள்
[தொகு]- ஐதராக்சில் அலுமினியம் பிசு(2-எத்திலெக்சனோயேட்டு), தடிப்பாக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.
- வெள்ளீயம்(II) எத்திலெக்சனோயேட்டு, (CAS# 301-10-0), ஒரு வினையூக்கியாகப் பயன்படுகிறது.[6]
- கோபால்ட்டு(II) எத்திலெக்சனோயேட்டு, (CAS# 136-52-7), ஓர் உலர்த்தியாகப் பயன்படுகிறது.
- நிக்கல்(II) எத்திலெக்சனோயேட்டு, (CAS# 4454-16-4)[7]
பாதுகாப்பு
[தொகு]அழகுசாதனப் பொருட்களில் பயன்படுத்துவதற்கு 2-எத்திலெக்சனாயிக்கு அமிலம் ஐரோப்பிய ஒன்றியத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "2-ethylhexanoic acid - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 26 March 2005. Identification and Related Records. Retrieved 21 February 2012.
- ↑ Economic Impact Analysis of Proposed Test Rule for 2-ethylhexanoic Acid (final) (epa Contract No. 68-01-6630) (Report). Environmental Protection Agency, Washington, DC. Office of Toxic. 2000.
- ↑ Riemenschneider, Wilhelm (2005), "Carboxylic Acids, Aliphatic", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, doi:10.1002/14356007.a05_235
- ↑ Mishra, Shashank; Daniele, Stéphane; Hubert-Pfalzgraf, Liliane G. (2007). "Metal 2-Ethylhexanoates and Related Compounds as Useful Precursors in Materials Science". Chemical Society Reviews 36 (11): 1770–1787. doi:10.1039/B614334M. பப்மெட்:18213985. https://archive.org/details/sim_chemical-society-great-britain-chemical-society-reviews_2007-11_36_11/page/1770.
- ↑ Raju, Ravinder; Prasad, Kapa (2012). "Synthetic applications of 2-ethylhexanoic acid derived reagents". Tetrahedron 68 (5): 1341–1349. doi:10.1016/j.tet.2011.10.078.
- ↑ Coulembier, O.; Degee, P.; Hedrick, J. L.; Dubois, P. (2006). "Controlled Ring-Opening Polymerization to Biodegradable Aliphatic Polyester: Especially Poly(Β-Malic Acid) Derivatives". Prog. Polym. Sci. 31: 723–747. doi:10.1016/j.progpolymsci.2006.08.004.
- ↑ Burrows, Cynthia J.; Wey, Shiow-Jyi (2001). "Nickel(II) 2-Ethylhexanoate". Encyclopedia of Reagents for Organic Synthesis. doi:10.1002/047084289X.rn014m. ISBN 0-471-93623-5.