2-அமினோபென்சால்டிகைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2-அமினோபென்சால்டிகைடு
2-Aminobenzaldehyde.svg
பெயர்கள்
வேறு பெயர்கள்
ஆர்த்தோ-அமினோபென்சால்டிகைடு, பார்மைலனிலீன்
இனங்காட்டிகள்
529-23-7
ChemSpider 61553
EC number 208-454-3
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 68255
பண்புகள்
C7H7NO
வாய்ப்பாட்டு எடை 121.14 g·mol−1
தோற்றம் மஞ்சள் திண்மம்
உருகுநிலை
கரையும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

2-அமினோபென்சால்டிகைடு (2-Aminobenzaldehyde) என்பது C6H4(NH2)CHO என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அமினோபென்சால்டிகைடின் மூன்று மாற்றியன்களில் இதுவும் ஒன்றாகும். தண்ணீரில் கரையக்கூடிய இச்சேர்மம் மஞ்சள் நிறத்துடன் குறைந்த உருகுநிலை கொண்ட திண்மமாக உள்ளது.

2-நைட்ரோபென்சால்டிகைடுடன் இரும்பு[1] அல்லது இரும்பு(II) சல்பேட்டு[2] சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்துவதால் 2-அமினோபென்சால்டிகைடு தயாரிக்கப்படுகிறது. இச்சேர்மம் இதனுடன் சேர்ந்தே நிலைத்தன்மையற்று காணப்படுகிறது.

குயினோலின்களை பிரைடுலேண்டர் தொகுப்பு முறையில் தயாரிக்க இச்சேர்மம் பயன்படுகிறது.

பிரைடுலேண்டர் தொகுப்பு வினை

ஈந்தணைவி வினைகளில் இது முப்படி, நாற்படி ஒடுக்க விளைபொருட்களாகவும் உருவாகிறது. இவை ஈந்தனைவிகளாக ஆராயப்படுகின்றன

2-அமினோபென்சால்டிகைடின் முப்படியாக்க வினையில் உருவாகும் ஈந்தணைவியின் கட்டமைப்பு[3]

.

மேற்கோள்கள்[தொகு]

  1. Chen Zhang; Chandra Kanta De; Daniel Seidel (2012). "o-Aminobenzaldehyde, Redox-Neutral Aminal Formation and Synthesis of Deoxyvasicinone". Org. Synth. 89: 274. doi:10.15227/orgsyn.089.0274. 
  2. Lee Irvin Smith; J. W. Opie (1948). "o-Aminobenzaldehyde". Org. Synth. 28: 11. doi:10.15227/orgsyn.028.0011. 
  3. Fleischer; E. B.; Klem, E. (1965). "The Structure of a Self-Condensation Product of o-Aminobenzaldehyde in the Presence of Nickel Ions". Inorganic Chemistry 4: 637-642. doi:10.1021/ic50027a008.