2-அமினோபீனால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2-அமினோபீனால்
O-Aminophenol.svg
Space filling model of 2-aminophenol
Ball-and-stick model of 2-aminophenol
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2-அமினோபீனால் [1]
வேறு பெயர்கள்
ஆர்த்தோ அமினோபீனால்
-அமினோபீனால்
2-ஐதராக்சி அனிலின்
2-அமினோ-1-ஐதராக்சிபென்சீன்
இனங்காட்டிகள்
95-55-6 Yes check.svgY
ChEBI CHEBI:18112 Yes check.svgY
ChEMBL ChEMBL28319 Yes check.svgY
ChemSpider 5596 Yes check.svgY
DrugBank DB01726 Yes check.svgY
EC number 202-431-1
யேமல் -3D படிமங்கள் Image
Image
KEGG C01987 Yes check.svgY
பப்கெம் 5801
வே.ந.வி.ப எண் SJ4950000
UNII 23RH73DZ65 Yes check.svgY
UN number 2512
பண்புகள்
C6H7NO
வாய்ப்பாட்டு எடை 109.13 கி/மோல்
தோற்றம் வெண்மை செஞ்சாய்சதுரம் பட்டகம் ஊசிகள்
அடர்த்தி 1.328 கி/செ.மீ3
உருகுநிலை
குளீர்ந்த நீரில் சிறிதளவும் சூடான நீரில் நன்கும் கரைகிறது.
காடித்தன்மை எண் (pKa)
  • 4.78 (அமினோ; 20 °செல்சியசு, H2O)
  • 9.97 (பீனால்; 20 °செல்சியசு, H2O)[2]
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H302, H332, H341
P201, P202, P261, P264, P270, P271, P281, P301+312, P304+312, P304+340, P308+313, P312, P330, P405
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

2-அமினோபீனால் (2-Aminophenol) என்பது C6H7NO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மாற்றியன்களான 4-அமினோபீனால் மற்றும் 2-அமினோபீனால் இரண்டும் ஈரியல்பு மூலக்கூறுகளாகவும் ஒடுக்கும் முகவர்களாகவும் செயல்படுகின்றன. சாயங்களையும் பல்லினவளையச் சேர்மங்களையும் தயாரிப்பதில் 2-அமினோபீனால் ஒரு பயனுள்ள முகவராக இருக்கிறது. [3] 2-அமினோபீனால் ஒரு நீர் விரும்பியாகும். ஆல்ககால்களில் இது கரைகிறது. சூடான நீரிலிருந்து இதை மறுபடிகமாக்கலாம்.

தயாரிப்பு[தொகு]

தொடர்புடைய நைட்ரோபீனாலை ஒரு வினையூக்கியின் முன்னிலையில் ஐதரசனைப் பயன்படுத்தி ஒடுக்கினால் 2-அமினோபீனையும் 4-அமினோபீனையும் பேரளவில் தயாரிக்க இயலும். [[இரும்பு}இரும்பைக்]] கொண்டு நைட்ரோபீனாலை ஒடுக்கியும் இதை தயாரிக்க முடியும். [3]

2-அமினோபீனால் சேர்மம் அண்டையில் அமீன் மற்றும் ஐதராக்சில் குழுக்களை உள்ளடக்கிய உள் மற்றும் உள்ளிடை ஐதரசன் பிணைப்பை வெளிப்படுத்துகிறது. இதன் விளைவாக 2-அமினோபீனால் இதேபோன்ற மூலக்கூறு நிறை கொண்ட மற்ற சேர்மங்களுடன் ஒப்பிடும்போது ஒப்பீட்டளவில் அதிக உருகு நிலையைக் (174° செல்சியசு) கொண்டுள்ளது; எடுத்துக்காட்டாக 2-மெத்தில்பீனால் 31° செல்சியசு வெப்பநிலையில் உருகுகிறது. [4]

பயன்கள்[தொகு]

2-அமினோபீனால் பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. ஓர் ஒடுக்கும் முகவராக அட்டோமால் மற்றும் ஓர்டால் என்ற வர்த்தகப் பெயர்களில் சந்தைப் படுத்தப்படும் 2-அமினோபீனால் புகைப்படத் தொழிலில் கருப்பு-வெள்ளைப் புகைப்படங்களின் உருவேற்றத்தில் பெரிதும் பயன்படுகிறது. [3] சாயங்கள் தயாரிப்பில் ஓர் இடைநிலை விளைபொருளாக 2-அமினோபீனால் கிடைக்கிறது. ஒரு பீனால், நாப்தால் அல்லது பிற அரோமாட்டிக் அல்லது ஒத்ததிர்வு சாய இனங்களுடன் ஈரசோனியமாக்கல் மற்றும் இணைக்கப்படும் போது உலோக-ஒருங்கிணைப்பு சாயங்களை வழங்குவதில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். [5][6]

செப்பு அல்லது குரோமியத்தைப் பயன்படுத்தும் உலோக ஒருங்கிணைப்பு சாயங்கள் பொதுவாக மந்தமான வண்ணங்களை உருவாக்கப் பயன்படுகின்றன. இதற்கு முப்பல் ஈந்தணைவி சாயங்கள் பெரிதும் பயன்படுகின்றன. ஏனெனில் அவை இருபல் அல்லது ஒரு பல் எதிரிணைகளைக்காட்டிலும் அதிக நிலைப்புத்தன்மை கொண்டவையாகும்.

2-aminophenol diaz coup.png
2-aminophenol coord.png

அமினோ மற்றும் ஐதராக்சில் குழுக்கள் அண்மையில் இருப்பதால் 2-அமினோபீனால் விரைவாக பல்லினவளையங்களாக உருவாகிறது. பென்சாக்சசோல் போன்ற பல்லின வளையங்கள் உயிரியல் செயல்திறன் மிக்கவையாக மருந்து தொழிற்சாலைகளில் பயனுள்ளவையாக உள்ளன. :[3]

2-aminophenol cyclization.png

மேற்கோள்கள்[தொகு]

  1. Nomenclature of Organic Chemistry : IUPAC Recommendations and Preferred Names 2013 (Blue Book). Cambridge: The Royal Society of Chemistry. 2014. பக். 690. doi:10.1039/9781849733069-FP001. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-85404-182-4. 
  2. Haynes, William M., தொகுப்பாசிரியர் (2016). CRC Handbook of Chemistry and Physics (97th ). CRC Press. பக். 5–89. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1498754286. 
  3. 3.0 3.1 3.2 3.3 Mitchell, S.C. & Waring, R.H. "Aminophenols." In Ullmann’s Encyclopedia of Industrial Chemistry; 2002 Wiley-VCH, எஆசு:10.1002/14356007.a02_099.
  4. Reference Handbook of Fine Chemicals, Acros Organics Publishers, Fisher Scientific UK, (2007), www.acros.com
  5. Grychtol, K.; Mennicke, W. "Metal-Complex Dyes." In Ullmann’s Encyclopedia of Industrial Chemistry; 2002, Wiley-VCH, எஆசு:10.1002/14356007.a16_299
  6. Hunger, K.; Mischke, P.; Rieper, W.; Raue, R.; Kunde, K.; Engel, A. "Azo Dyes." In Ullmann’s Encyclopedia of Industrial Chemistry, 2002, Wiley-VCH, எஆசு:10.1002/14356007.a03_245
"https://ta.wikipedia.org/w/index.php?title=2-அமினோபீனால்&oldid=2967118" இருந்து மீள்விக்கப்பட்டது