2-அமினோதயோபீனால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2-அமினோதயோபீனால்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2-அமினோபென்சீன்-1-தயோல்
வேறு பெயர்கள்
2-அமினோபென்சீன்தயோல், ஆர்த்தோ-அமினோபென்சீன்தயோல், 1-அமினோ-2-மெர்காப்டோபென்சீன், 2-அமினோ-1-மெர்காப்டோபென்சீன், 2-மெர்காப்டோ அனிலின், ஆர்த்தோ-அமினோபென்சீன்தயோல், ஆர்த்தோ-அமினோதயோபீனால், ஆர்த்தோ-மெர்காப்டோ அனிலின்
இனங்காட்டிகள்
137-07-5
ChemSpider 21111815
EC number 205-277-3
InChI
  • InChI=1S/C6H7NS/c7-5-3-1-2-4-6(5)8/h1-4,8H,7H2
    Key: VRVRGVPWCUEOGV-UHFFFAOYSA-N
  • InChI=1/C6H7NS/c7-5-3-1-2-4-6(5)8/h1-4,8H,7H2
    Key: VRVRGVPWCUEOGV-UHFFFAOYAG
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 8713
SMILES
  • c1ccc(c(c1)N)S
பண்புகள்
C6H7NS
வாய்ப்பாட்டு எடை 125.19 g·mol−1
தோற்றம் நிறமற்றது (மாசடைந்த மாதிரி நிறத்துடன் இருக்கும்.)
அடர்த்தி 1.200 கி/செ.மீ3
உருகுநிலை 26 °C (79 °F; 299 K)
கொதிநிலை 234 °C (453 °F; 507 K)
low
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

2-அமினோதயோபீனால் (2-Aminothiophenol) என்பது C6H4(SH)(NH2) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கரிம கந்தகச் சேர்மமான இது நிறமற்று எண்ணெய்த் தன்மை கொண்ட ஒரு திண்மமாக காணப்படுகிறது. மாசடைந்த 2-அமினோதயோபீனால் மாதிரிகள் அடர் நிறங்களில் காணப்படுவதுண்டு. தண்ணீரிலும் கரிமக் கரைப்பான்களிலும் இது கரையும். பென்சோதயசோல்கள் தயாரிப்பதற்கு ஒரு முன்னோடிச் சேர்மமாக 2-அமினோதயோபீனால் கருதப்படுகிறது. பென்சோதயசோல்கள் சில உயிரிமுனைப்பு கொண்டவையாகவும் அல்லது சாயங்களாகவும் செயல்படுகின்றன. 3- அமினோதயோபீனால், 4- அமினோதயோபீனால் இரண்டும் இதனுடைய மாற்றியன்களாகும்.

2-அமினோதயோபீனால் இரண்டு படிநிலைகளில் தயாரிக்கப்படுகிறது. அனிலினுடன் கார்பன் டைசல்பைடைச் சேர்த்து மெர்காப்டோபென்சோதயசோல் தயாரிக்கப்படுகிறது. [1] பின்னர் இது நீராற்பகுப்பு வினைக்கு உட்படுத்தப்பட்டு 2-அமினோதயோபீனால் தயாரிக்கப்படுகிறது. 2-நைட்ரோபென்சீன்சல்போனைல் குளோரைடை துத்தநாக ஒடுக்க வினைக்கு உட்படுத்தியும் இதைத் தயாரிக்கலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Chedekel, Miles R.; Sharp, Dale E.; Jeffery, Gary A. "Synthesis of o-aminothiophenols" Synthetic Communications 1980, volume 10, pp. 167-73. எஆசு:10.1080/00397918008064218
"https://ta.wikipedia.org/w/index.php?title=2-அமினோதயோபீனால்&oldid=2966786" இலிருந்து மீள்விக்கப்பட்டது