2,5-சைலிடின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2,5-சைலிடின்
2,5-Xylidin.svg
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2,5-டைமெத்தில்பென்சீன்-1-அமீன்
வேறு பெயர்கள்
2,5-டைமெத்திலனிலின், 2,5-டைமெத்தில்பீனைலமீன், 2,5-டைமெத்தில்பென்சீனமீன்
இனங்காட்டிகள்
95-78-3 Yes check.svgY
ChEBI CHEBI:518305 N
ChEMBL ChEMBL249120 N
ChemSpider 6989 Yes check.svgY
DrugBank DB02163 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
பண்புகள்
C8H11N
உருகுநிலை
கொதிநிலை 218 °C (424 °F; 491 K)
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 97
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

2,5-சைலிடின் (2,5-Xylidine) என்பது C6H3(CH3)2NH2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். சைலிடினின்களின் மூலக்கூற்று வாய்ப்பாடும் வேறுபட்ட கட்டமைப்பும் கொண்ட பல்வேறு மாற்றியன்களில் 2,5-சைலிடினும் ஒரு வகை மாற்றியனாகும். நிறமற்ற பாகுத்தன்மை கொண்ட நீர்மமாக இது காணப்படுகிறது. மஞ்சள் கரைப்பான் 30, சிவப்புக் கரைப்பான் 22, அமிலச் சிவப்பு 65, சிவப்புக் கரைப்பான் 26 உள்ளிட்ட வேதிச் சேர்மங்கள் வர்த்தக முக்கியத்துவம் கொண்ட சில 2,5-சைலிடின் வழிப்பெறுதிகளாகும். [1]

வர்த்தக முக்கியத்துவம் பெற்ற சாயம் சிவப்புக் கரைப்பான் 26 2,5-சைலிடினிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

தயாரிப்பு[தொகு]

பல சைலிடின்கள் தயாரிக்கப்பட்டுவதைப் போலவே இதுவும் தொடர்புடைய சைலினை நைட்ரோயேற்றம் செய்து தொடர்ந்து நைட்ரோசைலினை ஒடுக்கம் செய்வதன் மூலமாக தயாரிக்கப்படுகிறது. ஒடுக்க வினை HCl/Fe பயன்பாடு மூலம் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் வழக்கமாக இவ்வொடுக்க வினை வினையூக்க ஐதரசனேற்றம் வழியாக நிகழ்த்தப்படும்.

Me2C6H4 + HNO3 → Me2C6H3NO2 + H2O
Me2C6H3NO2 + 3 H2 → Me2C6H3NH2 + 3H2O

பாதுகாப்பு[தொகு]

2,5-சைலிடின் ஒரு மரபு மாற்றியாகவும் கட்டியைத் தூண்டும் வேதிப்பொருளாகவும் செயல்படுகிறது. சைலிடின்களின் உயிர் கொல்லும் அளவு எலிகளுக்கு வாய்வழியாகக் கொடுக்கும்போது 0.1 முதல் 1 கிராம்/கிலோகிராம் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. M. Meyer (2012). "Xylidines". Ullmann's Encylclopedia of Industrial Chemistry. Wiley-VCH. DOI:10.1002/14356007.a28_455. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=2,5-சைலிடின்&oldid=2965990" இருந்து மீள்விக்கப்பட்டது