2,4-ஈரமினோதொலுயீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2,4-ஈரமினோதொலுயீன்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
4-மெத்தில்பென்சீன்-1,3-டையமீன்
வேறு பெயர்கள்
2,4-தொலுயீன்டையமீன்
இனங்காட்டிகள்
95-80-7
ChemSpider 6991
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 7261
SMILES
  • CC1=C(C=C(C=C1)N)N
பண்புகள்
C7H10N2
வாய்ப்பாட்டு எடை 122.17 g·mol−1
தோற்றம் வெண் திண்மம்
அடர்த்தி 1.521 கிராம்/செ.மீ3
உருகுநிலை 97 முதல் 99 °C (207 முதல் 210 °F; 370 முதல் 372 K)
கொதிநிலை 283 முதல் 285 °C (541 முதல் 545 °F; 556 முதல் 558 K)
தீங்குகள்
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
இல்லை[1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
Ca[1]
உடனடி அபாயம்
Ca [N.D.][1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

2,4-ஈரமினோதொலுயீன் (2,4-Diaminotoluene) என்பது C6H3(NH2)2CH3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதை 2,4- டையமினோதொலுயீன் என்ற பெயராலும் இதை அழைக்கலாம். இதே மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஆறு மாற்றியங்களில் 2,4-ஈரமினோதொலுயீன் சேர்மமும் ஒன்றாகும். தூய்மையான நிலையில் இச்சேர்மம் வெண்மை நிறத்துடன் காணப்படுகிறது. வர்த்தக மாதிரிகள் மஞ்சள், பழுப்பு நிறங்களுடன் காணப்படுகின்றன, 2,4-இருநைட்ரோதொலுயீனை நிக்கல் வினையூக்கியைப் பயன்படுத்தி ஐதரசனேற்றம் செய்து இதைத் தயாரிக்கலாம். வர்த்தக மாதிரிகள் பெரும்பாலும் 20% 2,6-மாற்றியத்தைப் பெற்றுள்ளன[2]. பாலியூரித்தேன் தயாரிக்க உதவும் முன்னோடிச் சேர்மமான தொலுயீன் டையைசோசயனேட்டு என்ற சேர்மத்தைத் தயாரிப்பில் 2,4-ஈரமினோதொலுயீன் ஒரு முன்னோடிச் சேர்மமாக விளங்குகிறது.

பென்சீன்டையசோனியம் குளோரைடுடன் இது வினைபுரிவதால் நேர்மின் அசோ சாயம் அடிப்படை ஆரஞ்சு 1 உருவாகிறது. அசிட்டால்டிகைடுடன் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்துவதால் அடிப்படை மஞ்சள் 9 என்ற அக்ரிடீன் சாயம் உருவாகிறது [3]

அக்ரிடின் சாயமான அடிப்படை மஞ்சள் 9 தயாரிப்பு

.


மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0620". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  2. Robert A. Smiley "Phenylene- and Toluenediamines" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, 2002, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a19_405
  3. Thomas Gessner and Udo Mayer "Triarylmethane and Diarylmethane Dyes" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2002, Wiley-VCH, Weinheim.எஆசு:10.1002/14356007.a27_179
"https://ta.wikipedia.org/w/index.php?title=2,4-ஈரமினோதொலுயீன்&oldid=2559312" இலிருந்து மீள்விக்கப்பட்டது