2,4,6-முப்புரோமோபீனால்
|
| |||
| பெயர்கள் | |||
|---|---|---|---|
| ஐயூபிஏசி பெயர்
2,4,6-டிரைபுரோமோபீனால் | |||
| வேறு பெயர்கள்
முபுரோமோபீனால்; 2,4,6- மு.பு.பீ;மு.பு.பீ | |||
| இனங்காட்டிகள் | |||
| 118-79-6 | |||
| ChEBI | CHEBI:47696 | ||
| ChEMBL | ChEMBL220087 | ||
| ChemSpider | 1438 | ||
| DrugBank | DB02417 | ||
| யேமல் -3D படிமங்கள் | Image | ||
| KEGG | C14454 | ||
| பப்கெம் | 1483 | ||
| |||
| பண்புகள் | |||
| C6H3Br3O | |||
| வாய்ப்பாட்டு எடை | 330.80 g·mol−1 | ||
| தோற்றம் | வெண்மைநிற ஊசிகள் அல்லது பட்டகங்கள்[1] | ||
| உருகுநிலை | 95.5 °C (203.9 °F; 368.6 K)[1] | ||
| கொதிநிலை | 244 °C (471 °F; 517 K)[2] 286 °C[1] | ||
| சிறிதளவு கரையும்[1] 59-61 mg/L[3] | |||
| தீங்குகள் | |||
| GHS குறியீடு: | |||
விளக்கப்படங்கள் |
|||
| Lethal dose or concentration (LD, LC): | |||
LD50 (Median dose) |
2000 mg/kg (rat, oral)[1] | ||
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |||
2,4,6-முப்புரோமோபீனால் (2,4,6-Tribromophenol) என்பது C6H3Br3O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட பீனாலின் புரோமினேற்ற வழிப்பொருளாகும். பூஞ்சைக் கொல்லியாகவும், மரப்பாதுகாப்புப் பூச்சாகவும், தீத்தணிப்பிகள் தயாரிப்பின் பொழுது இடைநிலைப் பொருளாகவும் இது பயன்படுத்தப்படுகிறது.
பெருங்கடலின் அடிப்பகுதி படிவுகளில், கடல்வாழ் விலங்குகளின் [5] வளர்சிதை மாற்றத்தில் இயற்கையாக 2,4,6-முப்புரோமோபீனால் காணப்படுகிறது என்றாலும் வர்த்தகத்திற்காக தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுகிறது. 2001 ஆம் ஆண்டில் ஆண்டுக்கு 2500 டன்கள் சப்பானிலும், உலகளவில் ஆண்டுக்கு 9500 டன்களும் தயாரிக்க திட்டமிடப்பட்டிருந்தது. தனிமநிலை புரோமினுடன் பீனாலைச் சேர்த்து கட்டுப்படுத்தப்பட்ட வினை மூலம் 2,4,6-முப்புரோமோபீனாலைத் தயாரிக்க முடியும் :[2]
பயன்கள்
[தொகு]புரோமினேற்ற இப்பாக்சி பிசின் [3] போன்ற தீத்தணிப்புப் பொருள் தயாரிப்பில், 2,4,6-முப்புரோமோபீனாலை இடைநிலையாகப் பயன்படுத்துவது இதனுடைய முதன்மையான பயனாகும். சோடியம் ஐதராக்சைடுடன் வினைபுரிந்து பூஞ்சைக் கொல்லிகள் மற்றும் மரப்பாதுகாப்புப் பொருள்களாகப் பயன்படும் சோடியம் உப்புகளாகவும் இது உருவாகிறது.
பிசுமத் உப்பு
[தொகு]காயங்களுக்கு மருந்தான செரோபார்மில் செயல்திறன்மிக்க பகுதிப்பொருளாக பிசுமத் உப்பு செயல்படுகிறது [6].
வளர்சிதை மாற்றம்
[தொகு]நுண்ணுயிரி வளர்சிதை மாற்றத்தில் முப்புரோமோ பீனாலுடன் சேர்க்கப்பட்ட பொருட்கள் சூடுபடுத்தும்போது ஊசிப்போன நாற்றமடிக்கும் 2,4,6-முப்புரோமோவனைசோலை உற்பத்தி செய்கின்றன.[7] பைசர் மற்றும் யான்சன் அண்ட் யான்சன் மருந்தியல் நிறுவனங்கள், 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் காசநோய் சிகிச்சைக்குப் பயன்படும் முப்புரோமோவனைசோல் நெடியுடைய சில பொருட்களைத் தயாரித்தன [8][9][10][11].
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 4 5 "3851: Tribromophenol" in Gardner's Commercially Important Chemicals: Synonyms, Trade Names, and Properties, G. W. A. Milne (Editor), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-471-73518-2, page 632
- 1 2 Merck Index, 11th Edition, 9526
- 1 2 Concise International Chemical Assessment Document 66: 2,4,6-Tribromophenol and Other Simple Brominated Phenols, International Programme on Chemical Safety
- ↑ Sigma-Aldrich Co., 2,4,6-Tribromophenol. Retrieved on 2022-02-17.
- ↑ "Polychaete indicator species as a source of natural halogenated organic compounds in marine sediments". Environmental Toxicology and Chemistry 20 (4): 738–747. 2001. doi:10.1002/etc.5620200407. பப்மெட்:11345448. https://archive.org/details/sim_environmental-toxicology-and-chemistry_2001-04_20_4/page/738.
- ↑ http://www.nlm.nih.gov/cgi/mesh/2008/MB_cgi?field=uid&term=C004554
- ↑ Frank B. Whitfield; Jodie L. Hill; Kevin J. Shaw (1997). "2,4,6-Tribromoanisole: a Potential Cause of Mustiness in Packaged Food". J. Agric. Food Chem. 45 (3): 889–893. doi:10.1021/jf960587u.
- ↑ 38,000 more bottles of Lipitor recalled over odor complaints, CNN.com, October 30, 2010
- ↑ Lipitor (atorvastatin) 40 mg: Recall Specific Bottles, drugs.com, Dec 23, 2010
- ↑ Tylenol Recall Expands, WebMD Health News, January 18, 2010
- ↑ McNeil Consumer Healthcare Announces Voluntary Recall Of One Product Lot Of TYLENOL® Extra Strength Caplets 225 Count Distributed In The U.S.

