உள்ளடக்கத்துக்குச் செல்

2,3-ஈரைதராக்சிபென்சாயிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2,3-ஈரைதராக்சிபென்சாயிக் அமிலம்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2,3-டைஐதராக்சிபென்சாயிக் அமிலம்
வேறு பெயர்கள்
ஐப்போகாலிக் அமிலம்; 2-பைரோகேட்டசுயிக் அமிலம்; o-பைரோகேட்டசுயிக் அமிலம்
இனங்காட்டிகள்
303-38-8 Y
Abbreviations 2,3-DHBA; 2,3-DHB
ChEBI CHEBI:18026 Y
ChEMBL ChEMBL1432 Y
ChemSpider 18 Y
DrugBank DB01672 Y
InChI
 • InChI=1S/C7H6O4/c8-5-3-1-2-4(6(5)9)7(10)11/h1-3,8-9H,(H,10,11) Y
  Key: GLDQAMYCGOIJDV-UHFFFAOYSA-N Y
 • InChI=1/C7H6O4/c8-5-3-1-2-4(6(5)9)7(10)11/h1-3,8-9H,(H,10,11)
  Key: GLDQAMYCGOIJDV-UHFFFAOYAE
யேமல் -3D படிமங்கள் Image
Image
KEGG C00196 Y
பப்கெம் 19
 • O=C(O)c1cccc(O)c1O
 • c1cc(c(c(c1)O)O)C(=O)O
பண்புகள்
C7H6O4
வாய்ப்பாட்டு எடை 154.12 g·mol−1
தோற்றம் நிறமற்ர திண்மம்
உருகுநிலை 204 முதல் 206 °C (399 முதல் 403 °F; 477 முதல் 479 K)
26 கி/லி 22 பாகை செல்சியசில்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

2,3- ஈரைதராக்சிபென்சாயிக் அமிலம் (2,3-Dihydroxybenzoic acid) என்பது C7H6O4 என்ற வேதி வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இயற்கை பீனால் எனக் கருதப்படும் இச்சேர்மம், பைலாந்தசு அசிடசு [1] என்றழைக்கப்படும் அருநெல்லி மற்றும் சால்வினியா மொலெசுடா எனப்படும் நீர்வாழ் பெரணியிலும்[2] 2,3- ஈரைதராக்சிபென்சாயிக் அமிலம் காணப்படுகிறது. பிளாகோர்டியா இன்னெர்மிசு எனப்படும் சீமைக்கொட்டைக்களா பழவகையிலும் இச்சேர்மம் அதிக அளவில் காணப்படுகிறது. ஈரைதராக்சிபென்சாயிக் அமிலம் என வகைப்படுத்தப்படும் இக்கரிமச்சேர்மம் நிறமற்ற திண்மமாக, ஏழுபடிநிலை வழிமுறையான சிக்கிமேட்டு வழிமுறையில் இயற்கையில் தோன்றுகிறது. மேலும், பல்வேறு சிடெரோபோர்களுடன் 2,3- ஈரைதராக்சிபென்சாயிக் அமிலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. சிடெரோபோர்கள் என்பவை வலிமையான இரும்பு கலப்புத்தொகுதி அயனிகளை பாக்டிரியாக்களுக்குள் ஈர்க்கும் மூலக்கூறுகளாகும். 2,3- ஈரைதராக்சிபென்சாயிக் அமிலத்தில் ஒரு கேட்டக்கால் தொகுதி இடம்பெற்றுள்ளது. புரோட்டான் நீக்கத்தின் போது இக்கேட்டக்கால் தொகுதி இரும்பு மையங்களை வலிமையாகப் பிணைக்கிறது. மற்றும் இப்பிணைப்பு இணைந்துள்ள கார்பாக்சிலிக் அமிலத் தொகுதி அமைடு இணைப்புகளுடன் பல்வேறு சாரங்களாக இனைந்துள்ளது. மூன்று ஈரைதராக்சிபென்சாயில் பதிலிகளைக் கொண்டுள்ள, பரவலாக அறியப்பட்ட எண்டரோசெலின் என்ற உயர் நாட்ட சிடெரோபோர், செரைனின் [3][4] டெப்சிபெப்டைடுடன் இணைக்கப்பட்டுள்ளது. இரும்பு-இடுக்கி பிணைப்பு மருந்தாகவும்[5] நுண்ணுயிர் கொல்லி பண்புகளுடனுடம்[6][7][8] இது பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. மனித ஆசுப்ரீன் [9] வளர்சிதை மாற்றத்தின் போது ஒரு விளைபொருளாகவும் 2,3- ஈரைதராக்சிபென்சாயிக் அமிலம் கிடைக்கிறது.மேற்கோள்கள்[தொகு]

 1. "An extract from the medicinal plant Phyllanthus acidus and its isolated compounds induce airway chloride secretion: A potential treatment for cystic fibrosis". Mol. Pharmacol. 71 (1): 366–76. January 2007. doi:10.1124/mol.106.025262. பப்மெட்:17065237. 
 2. Choudhary, M. I.; Naheed, N.; Abbaskhan, A.; Musharraf, S. G.; Siddiqui, H.; Atta-Ur-Rahman (2008). "Phenolic and other constituents of fresh water fern Salvinia molesta". Phytochemistry 69 (4): 1018–1023. doi:10.1016/j.phytochem.2007.10.028. பப்மெட்:18177906. 
 3. I. G. O'Brien; G. B. Cox; F. Gibson (1970). "Biologically active compounds containing 2,3-dihydroxybenzoic acid and serine formed by Escherichia coli". Biochimica et Biophysica Acta 201 (3): 453–60. doi:10.1016/0304-4165(70)90165-0. பப்மெட்:4908639. 
 4. Young, I. G.; Gibson, F. (1969). "Regulation of the enzymes involved in the biosynthesis of 2,3-dihydroxybenzoic acid in Aerobacter aerogenes and Escherichia coli". Biochimica et Biophysica Acta (BBA) - General Subjects 177 (3): 401–11. doi:10.1016/0304-4165(69)90302-X. பப்மெட்:4306838. 
 5. J. H. Graziano; R. W. Grady; A. Cerami (1974). "The identification of 2,3-dihroxybenzoic acid as a potentially useful iron-chelating drug". JPET 190 (3): 570–575. http://jpet.aspetjournals.org/content/190/3/570.short. 
 6. Shibumon George; Benny PJ; Sunny Kuriakose; Cincy George (2011). "Antibiotic activity of 2, 3-dihydroxybenzoic acid isolated from Flacourtia inermis fruit against multidrug resistant bacteria". Asian Journal of Pharmaceutical and Clinical Research 4 (1). 
 7. Benny PJ; George Shibumon; Kuriakose Sunny; George Cincy (2010). "2, 3-Dihydroxybenzoic Acid: An Effective Antifungal Agent Isolated from Flacourtia inermis Fruit". International Journal of Pharmaceutical and Clinical Research 2 (3): 101–105. 
 8. George Shibumon; Benny PJ; Kuriakose Sunny; George Cincy; Gopalakrishnan Sarala (2011). "Antiprotozoal activity of 2, 3-dihydroxybenzoic acid isolated from the fruit extracts of Flacourtia inermis Roxb". Medicinal Plants - International Journal of Phytomedicines and Related Industries 3 (3): 237–241. doi:10.5958/j.0975-4261.3.3.038. 
 9. Grootveld, M.; Halliwell, B. (1988). "2,3-Dihydroxybenzoic acid is a product of human aspirin metabolism". Biochemical Pharmacology 37 (2): 271–280. doi:10.1016/0006-2952(88)90729-0. பப்மெட்:3342084.