1999 (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
1999
1999 திரைப்பட விள்ம்பரம்
1999 திரைப்பட விள்ம்பரம்
இயக்குனர் லெனின் எம். சிவம்
தயாரிப்பாளர் சபேசன் ஜெயராயசிங்கம், ஜெயா சுப்பிறமணியம்
கதை லெனின் எம். சிவம்
நடிப்பு

கே.எஸ்.பாலச்சந்திரன்
சுதன் மகாலிங்கம், திலிபன் சோமசேகரம், காண்டி கனா,

அம்பலவானர் கேதிஸ்வரன்,
இசையமைப்பு ராஜ் தில்லையம்பலம்
ஒளிப்பதிவு சபேசன் ஜெயராயசிங்கம்
திரைக்கதை லெனின் எம். சிவம்
கலையகம் கற்பனாலயா புரடக்சன், பகவான் புரடக்சன்
விநியோகம் கற்பனாலயா புரடக்சன்
வெளியீடு October 14, 2009 (கனடா)
கால நீளம் 101 min.
நாடு கனடா
மொழி தமிழ்

1999 கனடாவில் தயாராகிய தமிழ்த்திரைப்படம். 2009 ஆண்டு செப்டெம்பர் 30 இலிருந்து ஒக்டோபர் 15 வரை வான்கூவர் நகரில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் காண்பிக்கப்பட்ட முதலாவது புலம்பெயர் தமிழர்களின் திரைப்படம். இவ்விழாவில் மொத்தம் 600 திரைப்படங்கள் காண்பிக்கப்பட்டன. அவற்றில் அடங்கிய 19 கனேடிய திரைப்படங்களில் இதுவே ஒரேயொரு தமிழ்த்திரைப்படமாகும்.

இத்திரைப்படத்தை இனியவர்கள் திரைப்படத்தை இயக்கிய லெனின் எம்.சிவம் எழுதி இயக்கியிருந்தார். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பை சபேசன் ஜெயராஜசிங்கம் செய்திருக்கிறார்.


இதில் சுதன் மகாலிங்கம், லக்ஷி, திலீபன், காண்டி கணா, கேதீஸ்வ்ரன், மடோனா, கே.எஸ்.பாலச்சந்திரன் ஆகிய பலர் நடித்துள்ளார்கள்.

இத்திரைப்படத்தின் இசையை இலங்கையைச் சேர்ந்த ராஜ்குமார் தில்லையம்பலம் வழங்கியிருக்கிறார். படத்தொகுப்பை ஏ.அருள்சங்கர் செய்திருக்கிறார்.


விருதுகள்[தொகு]

 • சிறந்த திரைப்படமாக பார்வையாளர்கள் தெரிவு, CBC Reel Audience Choice Award, ReelWorld Film Festival in April, 2010
 • சிறந்த திரைப்படம், Best Film Award (Midnight Sun), Oslo Tamil Film Festival in February, 2010
 • சிறந்த முதல் 10 திரைப்படங்களில் ஒன்று, Top 10 Canadian Films, Vancouver International Film Festival in October, 2009
 • உத்தியோகபூர தெரிவு, Official Selection, Toronto TAMIL STUDIES CONFERENCE in May, 2010
 • சிறந்த திரைப்படம், Best Feature Film Award, Toronto Independent Art Film Society (IAFS) in June, 2010
 • உத்தியோகபூர்வ தெரிவு, Official Selection, University of Toronto Cinema Studies Student Union (CINSSU) in March, 2010
 • உத்தியோகபூர்வ தெரிவு, York University Centre for Asian Research (YCAR) in September, 2010
 • உத்தியோகபூர்வ தெரிவு, Official Selection, Toronto 2010 Moving Image Film Festival (MIFF) in October, 2010
 • உத்தியோகபூர்வ தெரிவு, Official Selection, Swiss South Indian Film Festival (SSIFF) in October, 2010
 • உத்தியோகபூர்வ தெரிவு, Official Selection, Ilankai Thamil Sangam (ITS) in November, 2010
 • உத்தியோகபூர்வ தெரிவு, Official Selection, Canadian Tamil Film Festival (CTFF) in January, 2011
 • உத்தியோகபூர்வ தெரிவு, Official Selection, London Happy Soul Festival (LHSF) in June, 2011
 • சிறந்த திரைப்படம், Best Feature Film Award, Chennai Ulagayutha International Tamil Film Festival (CUITFF) in July, 2011

கருத்துக்கள்[தொகு]

 • "எனக்கு இந்த படம் மிகவும் நன்றாக பிடித்துள்ளது, அதன் உண்மைத்தன்மை என் மனத்தை நெகிள வைத்துள்ளது" -இயக்குனர் டீபா மேதா
 • "1999 உனர்வுபூர்பனாது, உண்மையானதும்.... 1999 கனேடிய திரைப்பட துறைக்கு ஒரு புதிய குரலை தந்துள்ளது" -வன்கூவர் சர்வதேச திரைப்பட விளா
 • "1999 பார்தவுடன் எனது மனம் கனமாக இருந்தது... கதை என்னை பாதித்துவிட்டது... கதை சொல்லும் முறையில் ஒரு புதிமையை பார்க்கிறேன்... அனைத்து தமிழர்களும் இப்படத்தை பார்க்க வேண்டும் என்று அசைப்படுகின்றேன்." -இயக்குனர் சசிகுமார்
 • "எனது இனத்தின் வலியை சென்ன இந்த படம் எனது மனதை ஆழமாக பாதித்து விட்டது... இப்படத்தில் இருந்து நான் எத்தனையோ கற்றுக்கொள்கின்றேன்..." -இயக்குனர் சமுத்திரக்கனி
 • "தலைமுறைகளைக் கடந்தும் பிரச்சனைகளை சந்திக்கிற ஒரு இனம் தனது சொந்தக் குரலில் பேசுவது வீர்யமானதும் தனித்துவமானதும் இல்லையா? அந்த வகையில் நான் 1999 சினிமாவையும் அதை இயக்கிய லெனினையும் மிகவும் பாராட்டி வரவேற்கிறேன்" -S. P. ஜனநாதன்
 • "இது ஒரு சாதாரண படமல்ல… அசாதாரண கதைக்களம், வித்தியாசமான நெறியாள்கை என தமிழுக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு படம். தமிழர்களின் இன்னொரு களத்தை இதில் பார்க்க முடியும்." - [என் வழி பத்திரிகை]
 • "பொதுவாக இம்மாதிரியான ஹாலிவுட் படங்களில் இருக்கும் அறமற்ற வன்முறைக் கொண்டாட்டங்களை நிராகரித்து, தமது சமூகத்தின் நெருக்கடியிலிருந்து இனிவரும் தலைமுறையை மீட்க வேண்டும் எனும் ஆத்மார்த்தமான வேட்கையை லெனின் இப்படத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார்." - திரைப்பட விமசகர் யமுனா ராஜேந்திரன்
 • "புலம்பெயர் வாழ்க்கைச் சூழலில் அன்பு என்னும் திசை மாறிய இளைஞனின் போக்கில் கதையை அமைத்து அதனூடே சொல்லும் நிஜங்கள் சுடுகின்றன. ஊரை இழந்து, உறவை இழந்து புலம்பெயர்ந்து போன நாம் அங்கே நிம்மதியான வாழ்வை எதிர்கொண்டோமா, நம் இனம் சபிக்கப்பட்ட இனமா என்ற ஆதங்கம் மனதில் பாரமாக ஒட்டிக்கொள்கின்றது. அதுவே "1999" படத்தின் உருவாக்கத்துக்குக் கிடைத்த பெரும் அங்கீகாரம்." -[கானா பிரபா]
 • "பல படங்களை பார்த்தபின்பு அன்றிரவே அப்படத்தை மறந்து விடுவோம். ஆனால் இப்படம் எனக்கு 2,3 நாட்களாக அடிக்கடி எனது ஞாபகத்துக்கு வந்து போய்க் கொண்டிருக்கிறது." -[கந்தப்பு]

கதைச் சுருக்கம்[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

1999 கனடாவில் வசிக்கும் மூன்று இலங்கைத் தமிழ் இளைஞர்கள் பற்றிய கதை. குமார் (திலிபன் சோமசேகரம்) ரொரன்ரோவின் ஈஸ்ட் சைட்டில் ஒரு குழுமத் தலைவன். பெற்றோரை இந்திய ராணுவத்திடம் கண்முன்னே பலி கொடுத்தவன். தம்பியையும் இழுத்துக்கொண்டு 18 வயதில் கனடா வந்தவன். அவனது தம்பி ஜீவனை (ஜெரோன் தனபாலசிங்கம்) அடித்த வெஸ்ட் சைட் குழுமத் தலைவன் 'மரநாய்' என்பவனைப் பகைத்துத் தானும் ஒரு குழுமத் தலைவனாக மாறியவன். குமாருக்கும், மரநாய்க்கும் பெரியவர்கள் சமாதானம் செய்து வைத்திருந்த 1999ம் வருடத்தின் பிற்பகுதியில் இந்த வன்முறைகளைவிட்டு ஒரு 'கஷ்டப்பட்ட பிள்ளை'யைத் திருமணம் செய்து குழந்தை குட்டியுடன் குடும்பமாக வாழும் வாழ்க்கைக்கு ஏங்குபவன்.

அன்பு (சுதன் மகாலிங்கம்) தகப்பனுடன் வசித்து வருபவன். தகப்பன் சுந்தரத்துக்கு (அம்பலவாணர் கேதீஸ்வரன்) இரண்டு வேலைகள். ஒன்று முழுநேர உழைப்பு. மற்றது அன்புவுடன் சண்டை போடுவது. அன்புவும் சரியாகப் படிக்காமல் சுற்றிக்கொண்டிருப்பவன். அவன் குமாருடைய குழுவில் சேர்ந்து 5 வருடங்களாகியும், தகப்பனுக்கு இப்போதுதான் அரசல் புரசலாகத் தெரியவருகிறது. அன்பு அம்மாவை ஈழப் பிரச்சினைகளில் பறிகொடுத்தவன். குமார் அண்ணாவுக்காக எதையும் செய்யத் தயாராயிருப்பவன். அன்பு இந்தக் குழுமங்களைவிட்டு விலகி நல்ல முறையில் படித்து முன்னுக்கு வரவேண்டும் என்பது அவனது தகப்பனின் ஆசை.

அகிலன் (காண்டி கனா) ஒரு தீவிரமான மாணவன். வோட்டர்லூவில் படிக்கும் இவன் வார இறுதிகளில் தாத்தாவை (கே.எஸ்.பாலச்சந்திரன்) ஸ்கார்பரோ வந்து சந்திப்பதுண்டு. அதே வார இறுதிகளில் வன்னியில் தாய் தகப்பன் இல்லாத பிள்ளைகளைப் பராமரிக்க வீடுவீடாகப் போய் நிதி திரட்டுவது இவன் வேலை. 2001ம் ஆண்டுக்கு முன் 200 பிள்ளைகளைத் தத்தெடுப்பது இவனது இலக்கு. இப்போது இவன் பொறுப்பில் 30 பிள்ளைகள். இவனும் பெற்றோரைப் போரிடம் பறிகொடுத்தவன்.

அன்புவும் அகிலனும் பாடசாலைக்காலத் தோழர்கள். இப்போது கொஞ்சம் விலகியிருக்கிறார்கள். இருவரும் பழகுவது தாமரையிலைத் தண்ணீராக. இவர்கள் இருவரும் ஒருதலையாக பாடசாலைக்கால ஏஞ்சல் கீதாவை (லக்ஷ்சி) காதலிக்கிறார்கள். அவளது பிறந்தநாளன்று காதலைச் சொல்ல இருவருமே திட்டமிட்டிருக்கிறார்கள். இருவருக்கும் மற்றவரும் கீதாவைக் காதலிப்பது தெரிந்திருக்கிறது. கீதா யாரை விரும்பினாலும் மற்றவர் ஒதுங்கிக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள்.

குமாருக்கு அவன் நினைத்த வாழ்வு கிடைத்ததா? அன்பு திருந்தி தந்தையின் விருப்பப்படி வாழ்ந்தானா? அகிலனது இலட்சியங்கள் நிறைவேறியதா? அன்புவும் அகிலனும் கீதாவிடம் காதல் சொன்னார்களா? கீதா யாரை விரும்பினாள்? இது போன்ற கேள்விகளுக்கு திரையில் பதில் சொல்லியிருக்கிறார்கள்.

1999 திரைப்படத்தை பற்றி இயக்குனர் S. P. ஜனநாதன்[தொகு]

ஆதவன் பத்திரிகை - சித்திரை 2010

‘‘1999 சினிமாவை நார்வேயில் வைத்துப் பார்த்தேன். லெனின் எம் சிவம் இயக்கிய அந்தப் படம் ஈழத்தமிழரின் சினிமா உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றும். தமிழ் சினிமா என்றால் அது கோடம்பாகத்தில் மட்டுமல்ல உலகெங்கிலும் எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் உருவாகக் கூடியது என்பதை உணர்த்தியது அந்தப் படம். கதை ரீதியாகவும் சரி தொழில் நுட்ப ரீதியாகவும் சரி 1999 படம் தரமாக இருக்கிறது. கதை சொல்வதில் புதுமையும் தொழில் நுட்பத்தை கையாள்வதில் தேர்ச்சியும் பெற்றிருக்கிறது அந்த சினிமா. தவிறவும் இம்மாதிரி உலகின் பல் வேறு இடங்களிலும் இம்மாதிரி படங்களை உருவாக்குவது அந்த மக்களின் கலாசார வாழ்வியல் தொடர்பான தேவைகள் சார்ந்ததும் கூட. தலைமுறைகளைக் கடந்தும் பிரச்சனைகளை சந்திக்கிற ஒரு இனம் தனது சொந்தக் குரலில் பேசுவது வீர்யமானதும் தனித்துவமானதும் இல்லையா? அந்த வகையில் நான் 1999 சினிமாவையும் அதை இயக்கிய லெனினையும் மிகவும் பாராட்டி வரவேற்கிறேன்"

1999 திரைப்படத்தை பற்றி திரைப்பட விமசகர் யமுனா ராஜேந்திரன்[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

பிற ஈழ கேங்க்ஸ்டர் படங்களிலிருந்து பல விதங்களில் லெனின் எம். சிவத்தின் 1999; திரைப்படம் வித்தியாசப்படுகிறது. வரலாற்று ரீதியில் கனடாவின் கேங்க்ஸ்டர் குழுக்களுக்கு இடையில் அந்தச் சமூகத்தின் தலைவர்களால் உருவாக்கப்பட்ட 1999 ஆம் ஆண்டு சமாதான உடன்படிக்கை ஒன்று அமலிலிருந்த காலத்தில் நடைபெறுவதாக இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திரைப்படத்திற்கென குறிப்பிட்ட குழக்களில் செயல்பட்டவர்கள், அவர்களது உறவினர்கள், மரணமுற்றவர்களது உறவுகள், தமிழ் சமூகத் தலைவர்கள் போன்றவர்களைச் சந்தித்த கள ஆய்வின் பின் அதன் அடிப்படையில் லெனினிது திரைக்கதை உருவாகி இருக்கிறது.

இரண்டு குழுக்களுக்கிடையில் சமாதான ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கிறது. இரு குழுக்களைச் சார்ந்தவர்கள் ஒரு ஆளரவமற்ற தெருவில் சந்திக்கிறார்கள். ஓரு குழவினர் பிறிதொரு குழு ஒறுப்பினன் ஒருவனைத் தமது எல்லைக்குள் அவன் வந்துவிட்டதாகவும், ஒப்பந்தம் இல்லாவிட்டால் அவனைக் கொன்றிருப்போம் எனவும் மிரட்டுகிறார்கள். இதே ஒப்பந்தம் இல்லாவிட்டால் உமது தலைவன் கொல்லப்பட்டிருப்பான் என பிறிதொரு குழவினன் சவால் விடுகிறான். இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் தலைவனின் சகோதரன் காரிலிருந்து இறங்கி சவால்விட்ட பிற குழவினனை சுட்டுக் கொல்கிறான். 1999 படம் இப்படித்தான் துவங்குகிறது.

திரைப்படத்தில் மூன்று கதா பாத்திரங்கள் பிரதானமாகக் காட்சி அமைப்புக்குள் வருகிறார்கள். இவர்களுக்கிடையிலான ஊடாட்டமாகவே திரைக்கதை நகர்கிறது. இவர்களன்றி காட்சி அமைப்புக்குள் வராத இரு முக்கியமான கதா பாத்திரங்கள் உண்டு. ஒன்று பிரதானமான குழவின் தலைவன். பிறிதொன்று மருத்துவக் கல்லூரி மாணவியான பெண். மூவரில், கொலை செய்தவனின் சகோதரனும் குழத்தலைவனுமான குமார், பிறிதொருவன் அவனது விசுவாசியும் நண்பனுமான அன்பு. பிறதொருவன் அன்புவின் நண்பனும், கல்லாரி மாணவனும், பெற்றோரை இழந்தவனும், கீதாவைக் காதலிப்பவனும் ஆன அகிலன். அன்புவும்; கீதாவைக் காதலிக்கிறான். கீதா யாரைக் காதலிக்கிறாள் என்பது படத்தின் இறுதி வரையிலும் சொல்லப்படுவதில்லை. அவள் காட்சிக்குள் வருவதும் இல்லை.

தான் வன்முறை வாழ்விலிருந்து வெளியேறி, டொரான்டாவிலிருந்து வெளியேறிவிட நினைத்துக் கொண்டிருக்கும் குமார் தனது தம்பியின் நடத்தையால் குழுப்பமடைகிறான். இதிலிருந்து தப்பி வெளியேறுவதற்காக குற்றத்தை அன்புவின் மீது போட்டுவிட்டு, தாங்கள் டொரன்டோவை விட்டுவெளியேறலாம் என்கிறான் குழ நண்பன். தம்பியின் மீது கொண்ட பாசத்தில், குற்றவுணர்வுடன் தனது சகாவான அன்புவை போலீசில் மாட்டிவைத்துவிட்டு வெளியேற முடிவெடுக்கிறான் குமார். இதனை அறிந்து கொள்ளும் அன்பு நடந்தது அனைத்தையும் போலீசுக்கு அறிவித்துவிட்டுத் தான் டொரான்டோவை விட்டு வெளியேற முடிவெடுக்கிறான். எல்லாமும் திட்டமிட்டபடி நடக்கிறது.

அகிலனையும்; அன்புவையும் இணைக்கிற பல விடயங்கள் படத்தில் இருக்கிறது. இருவரும் பாடசாலை நண்பர்கள். அகிலன்; நாட்டிலுள்ள அனாதை மாணவர்களுக்கு நிதி திரட்டுகிற, கல்யாண வாழ்வைத் திட்டமிடுகிற, கல்லூரியில் படிக்கிற, தனது தாத்தாவைப் பராமறிக்கிற, உதாரணமான தமிழ் சமூக உறுப்பினன். இவனை ஒப்பிட்டு, அன்புவுக்கு அவனது தந்தை நிறைய உபதேசங்கள் செய்வதால் அன்புவுக்கு அகிலன் மீது ஒவ்வாமை; உண்டு. கீதாவை அவனும் காதலிப்பதால் ஒவ்வாமைக்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அகிலனும்; அன்புவம் சந்தித்துக்; கொள்ளும் தேநீர்;க்கடை ஒன்றும் உண்டு. பெரும்பாலும் அன்புவும்; அவனது பிற இரு நண்பர்களும் அமரும், கடையின் வலது மூலையிலுள்ள மூன்று நாற்காலிகள் கொண்ட மேசையில்தான் அகிலனும் அவனது பிற நண்பர்களும் அமர்வது வழக்கம்.

படம் இவ்வாறாக முடிகிறது. அன்புதான் கொலை செய்தது என குமார் அறிவித்தததால் காவல்துறை அன்புவைத் தேடுகிறது. அன்புதான் கொலை செய்தது எனப் பரவலாக அறியப்பட்டதால் அன்புவைக் கொல்ல பிறிதொரு குழுத் தலைவன் மரனையின் ஆட்களும் அன்புவைத் தேடித்திரிகிறார்கள். அன்பு இருவரிடமிருந்தும் தப்பி குமாரின் சகோதரன்தான் கொலையாளி என்பதை போலீசுக்கு அறிவித்துவிட்டு, வீட்டை நோக்கி வரும்; வழியில், தேநீர் வீடுதியில் துப்பாக்கிப் பிரயோகம் நடந்திருப்பதை அறிந்து அங்கு விரைகிறான். அங்கு கொல்லப்பட்;டுக் கிடப்பவர்கள் அகிலனும்; அவனது இரு அப்பாவி நண்பர்களும் என்பதையும், அவர்கள் தாங்கள் வழக்கமாக அமரும் அதே மூன்று நாற்காலி மேசையில் அமர்ந்திருந்ததார்கள் என்பதும், தானெனக் கருதியே அவர்கள் மரனையின்; ஆட்களால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதனையும் அறிந்து அழுது வெடிக்கிறான் அன்பு. ஓரு தருணத்தில் அவனது தந்தையைக் காத்த, அவனது நண்பன் அகிலன,; அன்புவின் நடத்தையால்;; தவறாகக் கொல்லப்பட்டதை நினைத்து அதிர்ந்தபடி தனது வீடு நோக்கி ஓடுகிறான். தந்தையிடம் தான் அகிலனைக்; காப்பாற்றி இருக்க முடியும் எனப் புலம்பி அழுகிறான்.

இனியும் டொரன்டோவில் நான் இருக்கவிரும்பவில்லை. நாம் எங்கேயாவது தூரத்திற்குப் போய்விடுவோம் அப்பா என்கிறான் அன்பு. அடுத்த நாள் காலை, தான் காதலி கீதாவைச் சந்திக்க வருகிறேன் என்று சொன்னதையும் நிராகரித்துவிட்டு தந்தையுடன் டொரன்டொவை விட்டு அன்பு வெளியேறுவதுடன் படம் முடிகிறது.

படத்தினை வெகுஜனத் திரைப்படமாக ஆக்கியிருக்கக் கூடிய, முன்பு தான் திட்டமிட்ட அகிலனுக்கும்; கீதாவுக்கும் இடையிலான காதல் பாடலை லெனின் சிவம் அகற்றியதன் மூலம் படம் ஒரு பெரும் விபத்திலிருந்து தப்பியிருக்கிறது. கீதா தொடர்பான அந்த நிச்சயமின்மை அன்புவுக்கும் அகிலனுக்கும்; இடையிலான நட்பின் மகத்துவத்தை இன்னும் ஆழப்படுத்துகிறது. காதல் என்பது தமது வாழ்வின் திருப்பத்தில் இருக்கும் இளைஞர்களை ஒருவகையில் திசைமாற்றுகிறது என்பதையும் படம் ஒரு வகையில் கோடிட்டுக் காட்டுகிறது. மரபான தமிழ் சினிமா ஆகிவிடுவதற்கான எத்தனையோ வாய்ப்புக்களை லெனின் கடந்து சென்றிருக்கிறார். அகிலனை காவிய நாயகனாக ஆக்கியிருக்க முடியும். தத்துவங்களை உதிர்த்திருக்க முடியும். சில காட்சிகள் அப்படி இருக்கவே செய்கின்றன. என்றாலும் மூன்று பாத்திரங்களின் சமநிலையை அது குலைத்துவிடவில்லை.

இரத்தத்தையும் வன்முறையையும் கொண்டாடி இருக்க முடியும். லெனின் அதனைச் செய்யவில்லை. கதைக்கும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் வலிக்கும் நேர்மையாக இருந்திருக்கிறார் லெனின். சில காட்சி அமைப்புக்களிலும் வசன இடைவெளிகளிலும் பாத்திரங்கள் இன்னும் முதிர்ச்சியைக் காண்பித்திருக்க முடியும். குறிப்பாக குமார் செய்த துரோகம் பற்றி நீ;;ர்க்கரையில் நின்றபடி நண்பர்கள் விவாதிக்கும் இடம் செயற்கைத்தன்மையைத் தொடுகிறது. படத்தின் மிகப் பெரிய பலம் அன்பு குமார் அகிலன் போன்றோரின் பாத்திரப் படைப்பும், அவர்கள் சந்திக்கும் தருணங்களிலான படத் தொகுப்பும். லெனின் மிக நேர்த்தியாக இதனைச் செய்திருக்கிறார். பொதுவாக இம்மாதிரியான ஹாலிவுட் படங்களில் இருக்கும் அறமற்ற வன்முறைக் கொண்டாட்டங்களை நிராகரித்து, தமது சமூகத்தின் நெருக்கடியிலிருந்து இனிவரும் தலைமுறையை மீட்க வேண்டும் எனும் ஆத்மார்த்தமான வேட்கையை லெனின் இப்படத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார்.


பின்புலம்[தொகு]

1983 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற இனக்கலவரங்களை அடுத்து ஏராளமான இலங்கைத் தமிழர்கள் தமது உயிரைக் காப்பாற்றும் பொருட்டு நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் கனடாவினை, அதிலும் டொரன்டோவினை தமது இரண்டாவது இல்லமாக ஏற்றுக்கொண்டனர். 80 ஆம் ஆண்டுகளின் இறுதியிலும், 90 ஆம் ஆண்டுகளின் ஆரம்ப காலகட்டத்திலும் டொரன்டோ நகரானது, இடம்பெயர்ந்த ஏராளமான தமிழர்களின் குடியேற்றங்களை சந்தித்ததுடன், தமிழர்கள் ஓரினமாக பரந்து வாழும் பெருநிலப்பரப்பாகவும் மாறியது. இவ்வாறு இடம்பெயர்ந்த இவர்கள், புதிய சூழ்நிலைகளுக்கு முகம்கொடுப்பதில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டனர். போரினால் நாட்டை விட்டு வெளியேறினாலும், அது கொடுத்த வடுக்கள், நாட்டில் விட்டுவந்த மனம்சார்ந்த எச்சங்கள் இவர்களை இந்தப் புதிய வாழ்க்கையுடன் ஒத்துப்போவதில் பல சிரமங்களை கொடுத்தது. இதிலும் முக்கியமாக இளைஞர்கள், இரண்டு முற்றிலும் மாறுபட்ட வௌ;வேறு கலாசாரங்களுக்கிடையில் சிக்குண்டு சிரமப்பட்டனர். இவர்களில் பலர், நாட்டை விட்டு, தமது சொந்தங்களை விட்டு, சொத்துகளை விட்டு, சுகங்களை விட்டு புதியதொரு நாட்டிற்கு வந்து தமது உறவினர்கள் நண்பர்களுடன் ஏராளமான மனக்காயங்களுடன் வாழ்ந்து வந்தனர். (இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்). மனரீதியான அழுத்தங்களை எதிர்கொண்ட இந்த இளைஞர்களில் பலர், தமக்கு ஏதோ ஒரு வகையிலான முக்கியத்துவத்தையும், ஒருவித அரவணைப்பு உணர்வினையும் வழங்கும் குழக்கள் பலவற்றில் இணைந்து கொண்டனர். ஆரம்ப காலங்களில் தமது நேரத்தினைப் போக்குவதற்காக, பேசிக் சிரிப்பதற்காக என்று ஆரம்பிக்கப்பட்ட இந்தக் குழக்கள் சிறிது காலம் சென்றதும் வன்முறை சார்ந்த பலமிக்க குழக்களாக உருமாற்றம் பெற்றன. இவ்வாறு தோற்றம்பெற்ற இந்தக் குழுக்கள் 90 ஆம் ஆண்டுகளின் இறுதிக் காலகட்டத்தில் டொரன்டோ நகருக்கும், இவர்கள் சார்ந்த சமூகத்திற்கும், ஏன் தங்களுக்குமே ஒரு தீராத பிரச்சனையாக உருவெடுத்தன.

1999 பற்றி[தொகு]

1999 திரைப்படமானது, போர் வழங்கிய வடுக்களைத் தாங்கியவாறு மனதில் வலியுடன் வாழும் எம் தமிழ் இளைஞர்களின் மனவுணர்வுகளை தௌ;ளத்தெளிவாக எடுத்தியம்புகிறது. ஊர் விட்டு உறவு விட்டு நண்பர் விட்டு நாடு விட்டு தனிமையில் வாழும் எம் மண்ணின் மைந்தர்கள் அதிலும் தாயின் அரவணைப்போடு வளர வேண்டிய வயதில் தாமாகவே தன்னிச்சையாக வளரும் இளம் பருவத்தினர் கனடாவின் வாழ்க்கைச் சூழ்நிலையோடு ஒத்திசைந்து போவதற்கு எவ்வாறான பிரயாசைகளை எடுத்தனர், எப்படியான சவால்களை எதிர்கொண்டனர் என்பது பற்றிய முழமையான ஆய்வு ஆவணமாக இத் திரைப்படம் திகழ்கிறது. எதிரும் புதிருமான இரண்டு கலாசார சூழ்நிலைகளுக்கிடையில் சிக்குண்ட இளைஞர்களின் கதை இது. அம்மா அப்பா இன்றி உறவினர்களின் வீடுகளிலும், நண்பர்களுடனும் வாழ்ந்த இவர்களுக்கு அவர்களை வழிநடத்தி நல்வழி காட்டுவதற்கான பெரியவர்கள் யாரும் அருகில் இல்லை, பாடசாலை, வேலை வாழ்க்கை இவற்றினை எவ்வாறு தளம்பலற்று கொண்டு செல்வது என்பது பற்றித் தெரியாத பருவம். இவ்வாறான காரணங்களினால் தடம் புரண்ட இவர்கள் தமது மனதுக்கு வடிகாலாக தேடிச்சென்ற இடம் தான் சில சிறு குழுக்கள். இந்தக் குழுக்கள் இவர்களுக்குத் தேவையான அன்பையும், ஆறுதலையும் அரவணைப்பையும் இந்தக் குழக்கள் வழங்கின. இந்தக் குழவில் இணைந்து கொண்ட அனேகமானவர்களுக்கு, இதனை விட்டு நீங்கிச் செல்வது என்பது, அவர்க்ள அதில் இணைந்து கொண்டதனை விட மிகுந்த சிரமமான காரியமாக அமைந்தது. இந்த குழக்கள், அவற்றில் தங்கிவாழும் வாலிபர்கள், அவர்களின் வாழ்க்கை, நாகரீகம், நடத்தை போன்றன சம்பந்தமான கதைக்களத்தினைச் சுற்றிப் பின்னப்பட்டதாகவே 1999 கதைக்களம் அமைந்துள்ளது

நடிகர்கள்[தொகு]

 • அன்புவாக சுதன் மகாலிங்கம்
 • குமாராக திலிபன் சோமசேகரம்
 • அகிலனாக காண்டி கனா
 • சுந்தரமாக அம்பலவானர் கேதிஸ்வரன்
 • தாத்தாவாக கே.எஸ்.பாலச்சந்திரன்
 • கீத்தாவாக லக்ஸி
 • உடும்பனாக மடோனா அல்போன்ஸ்
 • மதனாக வின்ஸ் ஜெறாட்
 • மொட்டயனாக தேவா கஸ்பெசன்
 • கண்ணனாக கோபிராஜ் திருச்செல்வம்
 • நந்தனாக அஜித் நாகராயா
 • ஜீவனாக ஜெறோன் தனபாலசிங்கம்
 • ஆவியாக சுதா சான்
 • சத்தியாக அனோயன் தவராயா
 • முறலியாக மனோஜ் ராயனன்
 • சூனனாக சதீஸ் ஏகாம்பரம்
 • மரனாயின் தம்பியாக விஷ்னுமதன் வில்வராயா
 • சுகந்தனாக தவக்குமார் கேதரநாதன்
 • கிருபனாக லதீபன் தர்மநாதன்
 • செல்வி அக்காவாக பத்மினி ராயனன்
 • Taxi Driver ஆக சுகுணதாஸ் மகேந்திரறாயா

சக கலைஞர்கள்[தொகு]

 • திரைக் கதை, இயக்கம்: லெனின் எம். சிவம்
 • தயாரிப்பு: சபேசன் ஜெயராயசிங்கம்
 • இசை: ராஜ் தில்லையம்பலம்
 • கமரா: சபேசன் ஜெயராயசிங்கம்
 • பட தொகுப்பு: அருள்ஷங்கர்
 • தயாரிப்பு மேற்பார்வையாளர்: ரமேஸ் செல்லத்துரை
 • உதவி இயக்குணர்கள்: வின்ஸ் ஜெறாட், சுதா சான்
 • ஒலியாக்கம்: மைக்கல் மோகனறூபன்
 • தொடக்க பாட்டு: Lyrically Strapped
 • இணை தயாரிப்பாளர்கள்: ஜெயகுமார் சுப்பிரமணியம், காண்டி கானா, மாலினி பொன்னம்பலம்
 • உதவி இசையம்பாளர்: புனிதகுமார்
 • நடனம்: LLS Entertainment
 • கலை: பாலேஸ் கந்தையா
 • பாடல் ஒலியாக்கம்: மைக்கல் மோகனறூபன், ராகேஸ் (சென்னை)
 • உடை: யான்சி நந்தகுமார், நிவேதா குணறட்னம்
 • அலங்காரம்: வான்மதி மதியாபரணம், சூரியகுமாரி மயில்வாகனம்
 • சண்டைப்பயிற்சி: முகுந்தன் மதியாபரணம்

செவ்விகள்[தொகு]

விமர்சனங்கள்[தொகு]

உரையாடல்கள்[தொகு]

 • eFilmCritic VIFF09 Interview eFilmCritic இன் இயக்குனர் லெனின் எம். சிவத்துடனான உரையாடல்

பாடல்கள்[தொகு]

திரு. ராஜ் தில்லையம்பலத்தால் இசையமைக்கப்பட்டது..

1999
Soundtrack :ராஜ் தில்லையம்பலம்
வெளியீடு 2009
இசைப் பாணி Feature film soundtrack
இசைத் தயாரிப்பாளர் லெனின் எம். சிவம்
Track # பாடல் பாடகர்கள் கவிஞர்
1 "மொழி" எஸ். பி. பாலசுப்பிரமணியம் சுதர்ஷன்
2 "ஏஞ்சல்" கார்த்திக் / Lyrically Strapped ராஜ் தில்லையம்பலம்
3 "மலரே" திப்பு / ஹரிணி சுதர்ஷன்
4 "Struggle" Lyrically Strapped Lyrically Strapped
5 "நெஞ்சத்தை" திப்பு / பிரசாந்தி ராஜ் தில்லையம்பலம்
6 Angel Remix Lyrically Strapped Lyrically Strapped
7 1999 Theme Instrumental Instrumental


சக கலைஞர்கள் (இசை)[தொகு]
 • புல்லாங்குழல்: பிரியந்தா
 • கிற்ரார்: மகிந்தா பாண்டார
 • பேஸ்: மொகனறுபன், செலுக்கா
 • வயலின்: DD குணசேனா
 • மற்றய வாத்தியங்கள்: ரத்னம் ரத்னதுரை, புனிதகுமார்
மொழி பாடல் வரிகள் (சுதர்ஸன்)[தொகு]

மொழியின்றி விரிகின்ற என் கீதம்
வழிகின்ற இளங்காதல் சங்கீதம்
இமையோரம் இதழாலே இசை சொல்வேன் இளமானே இனிக்கின்ற துயர் நீக்க வா
எந்தன் ஆசை சொல்லும் ஓசை காதல் பாஷை
உந்தன் ஆசை சொல்லும் ஓசை என்ன பாஷை

நிலவொன்று பொழிகின்ற நிறம் கண்டு நீலம் மீது நிஜமாக நீ வந்து ஏன் தோன்றினாய்
கண் வீணை காதல் இசை மீட்ட
பண் தேனைப் பதமாக்கி நான் ஊற்ற
துளிர் விட்ட ராகங்கள் சுகம் கொட்டும் நேரங்கள் சுவை ஊற்றும் வாழ்வுக்கு வரமாகுமோ
கண்ணே கீதா கீதம் தா தா

வாழ்வென்ற மலர்மீது வழிகின்ற அழகாகி வலம் வந்து என் வாழ்வில் கரம்பற்றுவாய்
உயிர் சேரும் ஒரு இருள்நேரம்
பயிராகி மெய்யொன்று உயிர் பூக்கும்
கவிபேசி நான் ஒட்ட காதோரம் தேன் சொட்ட கனவொன்று உன்னாலே நனவாகுமோ
உள்ளம் தந்தேன் உள்ளே வா வா

மலரே பாடல் வரிகள் (சுதர்ஸன்)[தொகு]

மலரே என் காதலை கூற உன் இதழ் தருவாயா?
மழையே மன வலிகளில் தூவ துமி கொண்டு வருவாயா?

கண்ணில் கண்ணை ஊற்றி காதலின் கவிதை பேச
உயிரில் ஜோதி ஒளிரும் நாளும் வந்து பூக்குமா?

மோகம் கொள்ளாதே முள்ளில் சிக்காதே
காதல் நிலத்தின் மீது என்தன் கால்கள் பதியாதே

மானே என் காதலை சொல்வேன் மறுமொழி தருவாயா?
மடியில் உன்பார்வையில் சாகும் பிறவிகள் அருள்வாயா?
இதயத்திலே இது ஒருதலை காதல்
இணைவதிலே வரும் இருவரின் கூடல்
வளையல்கள் போட்டிடும் வானவில் கையில் வந்திடும் நாளெதுவோ?

மாலைமலர் நானே, மாலை அது விணே
நேசம் கொண்டு நேரே வந்தால் நீங்கிச் செல்வேனே

உலகம் நான் உன்னில் என்பேன் உனக்கது தெரிகிறதா?
கலகம் செய்தும் காதலைப் பெறுவேன் காண்ணே புறிகிறதா?
சில்மிஸமோ உன் சித்திர விளிதான்
கொல்விஸமோ உயிர் பறிப்பதும் அதுதான்
வசந்தத்தில் ஆயிரம் வர்ணங்கள் பூசிய வாழ்க்கைன் வசம் வருமா?

காதல் கொள்ளாதே, கனவில் உருகாதே
சேலைக்கிளின் சோலைதன்னை சேர நினைக்காதே

நெஞ்சத்தை பாடல் வரிகள் (ராஜ் தில்லையம்பலம்)[தொகு]

நெஞ்சத்தை அள்ளிவிட்ட காற்றே
என்னிடம் என்ன கேட்கிறாய்
உள்ளத்தை பூட்டி வைத்த போதும்
தாழ்ப்பாளை நீக்கி செல்கிறாய்

நீ வந்து செல்லச் செல்ல
விழி அம்பு விட்டுக் கொல்ல
என்னோடு ஆசை மோதும்
என் ஜீவன் தோற்றுப் போகும்
ஆசையில் மெல்ல மெல்ல முழ்கும்

பூவிங்கு வண்டைத்தேடி வந்ததென்ன சொல்லம்மா
மீனொன்று தூண்டிலுக்கு தூண்டில் போட்டதென்னம்மா
கண்ணோடுன் அழகைக்காட்டிக் கண்ணுள் நுழைந்ததேனம்மா
பண்பாடும் கன்னிப்பேச்சில் என்னை இழந்தேன் நானம்மா
துள்ளும் விழிகளின் மின்சாரம்
என்னைத் தூக்கி பந்தாட
கூந்தல் வருடி வந்த தென்றல்
என்னை மயக்கித் தாலாட்ட
நடந்தாலே பாடல் பிறக்கும்
சிரித்தாலே பூக்கள் உதிரும்
தூக்கத்தில் கனவும் மயங்கும்
விழித்தால்தான் பகலும் விடியும்
ம்மென்றால் பூமி நின்று கேட்க்கும்

விண்மீன்கள் கண்சிமிட்டிச் சொல்லும் ஒலி காதல்தான்
உன்தேகம் தொட்டுச் செல்லும் தென்றல் சொல்லும் காதல்தான்
இந்த ஜோடிக் கண்களிலே
சொல்வேனொரு மௌனமொழி
உன்பார்வை என்மீது இதமாக மோத
என்நெஞ்சு அலைமோதித் தவிக்கின்றதே
உன்தோளில் சுகமாக தலைவைத்துத் தூங்கும்
கனவொன்று நனவாக நாளாகுமோ
நீ வந்து செல்லச் செல்ல
விழி அம்பு விட்டுக் கொல்ல
என்னோடு ஆசை மோதும்
என் ஜீவன் தோற்றுப் போகும்
காதலில் மெல்ல மெல்ல முழ்கும்
நெஞ்சத்தை அள்ளிவிட்ட காற்று
உன்னிடம் அன்பை கேட்குமே
உன்நெஞ்சை என் இதயக் கூட்டில்
தாழ்ப்பாளை வைத்துப் பூட்டினேன்

இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=1999_(திரைப்படம்)&oldid=1570404" இருந்து மீள்விக்கப்பட்டது