1999 குல்னா பள்ளிவாசல் குண்டுவெடிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1999 குல்னா பள்ளிவாசல் குண்டு வெடிப்பு
1999 Khulna mosque bombing
இடம்குல்னா, வங்காளதேசம்
நாள்8 அக்டோபர் 1999 (ஒ.ச.நே + 06:00)
தாக்குதலுக்கு
உள்ளானோர்
அகமதியா
தாக்குதல்
வகை
தீவிரவாதம், குண்டு வெடிப்பு, பொதுமக்கள் படுகொலை
இறப்பு(கள்)8
காயமடைந்தோர்30
தாக்கியோர்அர்கத்து-உல்-சிகாத்து-அல்-இசுலாமி

1999 குல்னா பள்ளிவாசல் குண்டு வெடிப்பு (1999 Khulna mosque bombing) வங்காளதேசத்தின் குல்னா மாவட்டத்தின் தலைநகரமான குல்னா நகரில் நிகழ்ந்த ஒரு பயங்கரவாத குண்டு வெடிப்பு தாக்குதல் ஆகும். குல்னா நகரில் உள்ள அகமதிய பள்ளிவாசலில் 1999 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8 ஆம் தேதியன்று இக்குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. குண்டுவெடிப்பில் 8 பேர் இறந்தனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர். [1] [2] 1999 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் தேதியன்று வங்காளதேச இராணுவம் டாக்காவில் உள்ள அகமதியா தூதுக் குழுவின் தலைமையக வளாகத்திலிருந்து வெடிகுண்டு தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு ஒரு வெடிகுண்டை அகற்றியது. டாக்காவின் மிர்பூரில் உள்ள இயன்னத்துல் பெர்தௌசு அகமதியா பள்ளிவாசலில் இருந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு வெடிகுண்டு மீட்கப்பட்டது. [3] [4]

பின்னணி[தொகு]

அகமதியா இசுலாத்தின் ஒரு சிறிய பிரிவாகும். பல பழமைவாத முசுலீம்கள் இவர்களை மதவெறியாக கருதுகின்றனர். வங்காளதேசத்தில் சுமார் 100,000 அகமதியாக்கள் உள்ளனர், அங்கு 90 % மக்கள் இசுலாத்தை பின்பற்றுகிறார்கள். [5]

தாக்குதல்[தொகு]

1999 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8 ஆம் தேதியன்று தெற்கு வங்காளதேசத்தின் குலானாவில் உள்ள அகமதியா பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது போது தொலையியக்கி கருவி மூலம் வெடிகுண்டை வெடிக்கச் செய்து 8 பேர் கொல்லப்பட்டனர். [6] [7] [8]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ahsan, Shamim. "The Blame Game Goes on". http://archive.thedailystar.net/magazine/2004/03/02/coverstory.htm. பார்த்த நாள்: 26 November 2016. 
  2. Siddiqui, Tasneem. Freedom of religion in Bangladesh. https://books.google.com/books?id=adtPAQAAIAAJ&q=1999++A+bomb+blast+at+Ahmadiyya+Masjid+in+Khulna&dq=1999++A+bomb+blast+at+Ahmadiyya+Masjid+in+Khulna&hl=en&sa=X&ved=0ahUKEwimwqm0isfQAhXE4SYKHRGXBcwQ6AEIHTAA. பார்த்த நாள்: 26 November 2016. 
  3. Canada, Immigration and Refugee Board of (4 July 2000). "Treatment of Ahmadis in Dhaka; reports of attacks, especially by the Khatme Nabuyat [Khatm-e-Nabuwwat]; police response (1995-2000) [BGD34714.E]". www.ecoi.net. 26 November 2016 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Bangladesh Army Disarms Mosque Bomb". Archived from the original on 27 நவம்பர் 2016. https://web.archive.org/web/20161127023425/http://www.washingtonpost.com/wp-srv/aponline/19991010/aponline090848_000.htm. பார்த்த நாள்: 26 November 2016. 
  5. Manik, Julfikar Ali (25 December 2015). "Suicide Bomber Strikes at Ahmadi Mosque in Bangladesh". https://www.nytimes.com/2015/12/26/world/asia/bangladesh-suicide-bombing.html. பார்த்த நாள்: 26 November 2016. 
  6. "It's suicide bombing". http://www.thedailystar.net/frontpage/its-suicide-bombing-192931. பார்த்த நாள்: 26 November 2016. 
  7. "135 killed, over 1,000 in bomb attacks in 6 years". http://bdnews24.com/bangladesh/2005/08/16/135-killed-over-1000-in-bomb-attacks-in-6-years-update. பார்த்த நாள்: 26 November 2016. 
  8. (in en) State of Human Rights ..., Bangladesh. Bangladesh Manobadhikar Samonnoy Parishad. பக். 156. https://books.google.com/books?id=qHWFAAAAMAAJ&q=1999++A+bomb+blast+at+Ahmadiyya+Masjid+in+Khulna&dq=1999++A+bomb+blast+at+Ahmadiyya+Masjid+in+Khulna&hl=en&sa=X&ved=0ahUKEwimwqm0isfQAhXE4SYKHRGXBcwQ6AEIIzAB. பார்த்த நாள்: 26 November 2016.