1997 இரமாபாய் கொலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
1997 இரமாபாய் கொலைகள்
இந்தியாவில் சாதி தொடர்பான வன்முறை
நாள்11 சூலை 1997
இடம்இரமாபாய் குடியிருப்பு, மும்பை
19°04'26.9"N 72°55'10.6"E
முறைகவலர்கள் வன்முறை
முரண்பட்ட தரப்பினர்
சிறப்பு காவல்துறைப் பிரிவு
தலித் ஆதரவாளர்கள்
வழிநடத்தியோர்
மனோகர் கதம் (காவல் துணை ஆய்வாளர்)
இழப்புகள்
10 கொல்லப்பட்டனர், 26 காயம் பட்டனர்

1997 இரமாபாய் கொலைகள் (1997 Ramabai killings) என்பது 1997 சூலை 11 அன்று மும்பையில் உள்ள இரமாபாய் அம்பேத்கர் நகர் குடியிருப்பில் தலித் குடியிருப்பாளர்கள் படுகொலை செய்யப்பட்டதை குறிப்பதாகும். அம்பேத்கரின் சிலையை சேதப்படுத்தியவர்களை கண்டித்து நடத்தப்பட்ட ஒரு கூட்டத்தை நோக்கி மகாராஷ்டிர காவல்துறை சுட்டனர். இந்த சம்பவத்தில் 10 தலித்துகள் கொல்லப்பட்டனர் மேலும், 26 பேர் காயமடைந்தனர். [1]

துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டதாகக் கூறப்படும் காவல் துணை ஆய்வாளர் மனோகர் கதம் 2009 இல் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

தாக்குதல்கள்[தொகு]

இரமாபாய் அம்பேத்கர் நகர் என்பது மும்பை நகரில் முக்கியமாக தலித் நகரக் குடியிருப்பாகும். சூலை 11, 1997 அன்று, குடியிருப்புக்கு முன்னால் இருந்த அம்பேத்கரின் சிலை ஒன்றில் கழுத்தில் செருப்பு மாலை போடப்பட்டது கண்டறியப்பட்டது. குடியிருப்பாளர்கள் அருகிலுள்ள உள்ளூர் எண் 5, பந்த்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகார்தாரர்கள் அதற்கு பதிலாக பிரதான பந்த்நகர் காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டனர். இதனால் எதிர்ப்பாளர்கள் கூட்டம் உருவாகத் தொடங்கியது. காலை 7 மணியளவில் குடியிருப்பாளர்கள் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். [1]

மகாராட்டிர காவல்துறைக் குழு சில நிமிடங்கள் கழித்து வந்து, நேரடியாக கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. துப்பாக்கிச் சூடு 10–15 நிமிடங்கள் தொடர்ந்தது. போராட்டங்களில் ஈடுபடாத ஒரு பார்வையாளர் உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர். [1] ஆர்ப்பாட்டங்கள் பின்னர் வன்முறையில் வளர்ந்தன. ஏறக்குறைய 11:30 மணியளவில், ஒரு சொகுசு பேருந்து தீக்கிரையாகியது. இதற்கு பதிலளிக்கும் விதமாக சுமார் 25 காவல்துறை அதிகாரிகள் ரமாபாய் காலனியில் நுழைந்து கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி தடியடி நடத்தத் தொடங்கினர். அந்தநாள் முடிவில் 26 பேர் பலத்த காயமடைந்தனர். மேலும் உள்ளூர் காவல் நிலையம் எண் 5 போராட்டக்காரர்களால் அழிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் விமர்சகர்கள் அதிகப்படியான சக்தியைப் பயன்படுத்துவது தலித் எதிர்ப்பாளர்களுக்கு எதிரான சாதி அடிப்படையிலான தப்பெண்ணத்தால் தூண்டப்பட்டதாகக் கூறினர். காவலர் படையை வழிநடத்திய துணை ஆய்வாளர் சாதி அடிப்படையிலான பாகுபாடு சம்பந்தப்பட்ட பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டார். இந்த நிகழ்வில் எதிர்ப்பு தெரிவித்து தலித் ஆர்வலரும், கவிஞரும் கலைஞரான விலாசு கோக்ரே தற்கொலை செய்து கொண்டார். [2]

விசாரணை[தொகு]

படுகொலையைத் தொடர்ந்து, மகாராஷ்டிர அரசு நவம்பர் 1997 இல் இந்த விவகாரத்தை விசாரிக்க குண்டேவர் ஆணையத்தை நியமித்தது. [3] 1999 இல், ஆணையம் தனது அறிக்கையை வெளியிட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மனோகர் கதம் மீது அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, அது குற்றப் புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டது. இது 2006 இல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. 2009 ஆம் ஆண்டில், அமர்வு நீதிமன்றம் கதம் குற்றவாளி எனக் கண்டறிந்து அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இருப்பினும், இந்த தண்டனை பின்னர் உயர் நீதிமன்றத்தால் இரத்து செய்யப்பட்டு, அவரை பிணையில் விடுவித்தது. ஏப்ரல் 2011 இல், பேருந்தை தீ வைத்ததற்காக கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தின் போது அவர்கள் அங்கில்லை என்று நீதிமன்றம் கண்டறிந்தது. [4]

ஊடகங்களில்[தொகு]

இந்திய ஆவணப்படத் தயாரிப்பாளர் ஆனந்த் பட்வர்தன், விலாசு கோக்ரேவின் நண்பர், இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஜெய் பீம் காம்ரேட் என்ற பெயரில் ஒரு ஆவணப்படத்தை உருவாக்கினார். [5] குற்றம் சாட்டப்பட்ட காவலர்கள் சிறையில் அடைக்கப்படிருந்ததால் படப்பிடிப்புக்கு 14 ஆண்டுகள் ஆனதாகவும், குடியிருப்புவாசிகள் திரும்பவும் தங்கள் இல்லத்திற்கு திருமியதாகவும் பட்வர்தன் கூறினார். [6]

மேலும் காண்க[தொகு]

இந்தியாவில் ஜாதி தொடர்பான வன்முறைகள்

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Smita Narula; Human Rights Watch (Organization) (1999). Broken People: Caste Violence Against India's "untouchables".. Human Rights Watch. பக். 137. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-56432-228-9. https://books.google.com/books?id=Kd28Ay09adgC&pg=PA137. 
  2. Between Red And Blue, Outlook India, 1 January 2014 அன்று பார்க்கப்பட்டது
  3. "12 yrs on, life term to cop who ordered Ramabai Nagar firing".
  4. "Ramabai Nagar firing case: 8 rioters acquitted in Mumbai - Mumbai - DNA". Dnaindia.com.
  5. "India's Independent Weekly News Magazine". Tehelka. மூல முகவரியிலிருந்து 28 April 2012 அன்று பரணிடப்பட்டது.
  6. Priyanka Borpujari (2012-01-28). "Arts / Cinema : A film with a difference".
"https://ta.wikipedia.org/w/index.php?title=1997_இரமாபாய்_கொலைகள்&oldid=3091406" இருந்து மீள்விக்கப்பட்டது