1988 தர்பாங் பாறை சரிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1988 தர்பாங் பாறை சரிவு (1988 Darbang rockslide) நேபாளத்தின் தர்பாங் பகுதியில் 1988 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி இரவு 11 மணியளவில் ஏற்பட்டது. பெரிய பாறை சரிவாக நிகழ்ந்த இந்த நிலச்சரிவில் 109 பேர் பலியாகினர் மற்றும் ஆற்றின் வலது கரையில் உள்ள அனைத்து வீடுகளும் புதைந்தன. கடல் மட்டத்திலிருந்து 1750 முதல் 1000 மீ உயரத்தில் 500 மீ அகலம், 750 மீ உயரம் கொண்ட சுமார் 5 மில்லியன் கன மீட்டர்கள் என நிலச்சரிவின் அளவு மதிப்பிடப்பட்டது. இந்த இடிபாடுகள் மியாக்டி ஆற்றில் மூன்று மணி நேரம் மூழ்கின. ஆற்றின் கீழ்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் இடிபாடுகள் படிப்படியாக அரிக்கப்பட்டன.[1][2]

சரிவுக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. ஏனெனில் நிலச்சரிவு ஏற்பட்ட காலத்தில் அப்பகுதியில் மழையோ நிலநடுக்கமோ இல்லை. இருப்பினும், ஒரு மாதத்திற்கு முன்னதாக, கிழக்கு நேபாளத்தில் 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 62 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்ற நிலச்சரிவில் இதே பகுதியில் சுமார் 500 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Yagi, Hiroshi; Maruo, Yuji; Saijo, Kiyoshi; Nakamura, Saburo (1990). "The Sept. 1988 large landslide in the vicinity of MCT, Darbang, Nepal". Landslides 26 (4): 45–49. பன்னாட்டுத் தர தொடர் எண்:0285-2926. 
  2. Ibetsberger, Horst J; Weidinger, Johannes T (2000). "Role of extreme meteorological anomalies in initiating the Darbang Landslide, Dhaulagiri Himal, Western Nepal". Journal of Nepal Geological Society 21: 35–40. பன்னாட்டுத் தர தொடர் எண்:2676-1378. 
  3. Upreti, Biswa Nath; Dhital, MR (1996). Landslide studies and management in Nepal. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=1988_தர்பாங்_பாறை_சரிவு&oldid=3396208" இலிருந்து மீள்விக்கப்பட்டது