1987 வன்னியர் போராட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

1987 இல் வன்னியர் சாதியினருக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு கோரி வன்னியர் சாதி சங்கத்தினர் (பின்னாளில் பாட்டாளி மக்கள் கட்சி) போராட்டம் நடத்தினர். இப்போராட்டம் மரு. இராமதாசின் தலைமையில் நடைபெற்றது. இப்போராட்டத்தின் போது தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் சாலைகளின் இரு கரையிலும் இருந்த மரங்களை வெட்டி சாலைகளின் குறுக்கே போட்டு போக்குவரத்து மறிக்கப்பட்டது.தொடர்ச்சியாக நடந்த இப்போராட்டங்களின் விளைவாக 23 பேர் மத்திய துணை ராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்டனர். இப்போராட்டத்தின் விளைவாக 1989 இல் “மிகவும் பிற்படுத்தப்பட்டோர்” (MBC) என்ற பிரிவு ஏற்படுத்தப்பட்டு, அவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. [1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=1987_வன்னியர்_போராட்டம்&oldid=2082851" இருந்து மீள்விக்கப்பட்டது