உள்ளடக்கத்துக்குச் செல்

1986 காஷ்மீர் கலவரங்கள்

ஆள்கூறுகள்: 34°02′00″N 74°40′00″E / 34.0333°N 74.6667°E / 34.0333; 74.6667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1986 காஷ்மீர் கலவரங்கள்/1986 அனந்தநாக் கலவரங்கள்
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம்
இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீர் பள்ளத்தாக்கின் (பச்சை நிறம்) வரைபடம்
இடம்அனந்தநாக் மாவட்டம், காஷ்மீர் பள்ளத்தாக்கு, சம்மு காசுமீர் மாநிலம், இந்தியா
ஆள்கூறுகள்34°02′00″N 74°40′00″E / 34.0333°N 74.6667°E / 34.0333; 74.6667
நாள்பிப்ரவரி 1986 – மார்ச் 1986[1]
தாக்குதலுக்கு
உள்ளானோர்
இந்து காஷ்மீர பண்டிதர்கள்
தாக்குதல்
வகை
விடுகளுக்கு தீ வைப்பு. கலவரம், நாசவேலை, கொள்ளையடித்தல்[2][3]
இறப்பு(கள்)அறியப்படவில்லை
தாக்கியோர்காஷ்மீர் தீவிரவாத முஸ்லிம்கள்

1986 காஷ்மீர் கலவரங்கள் அல்லது 1986 அனந்தநாக் கலவரங்கள் (1986 Kashmir Riots Or 1986 Anantnag Riots) இந்திய நிர்வாகத்தில் உள்ள சம்மு காசுமீர் மாநிலம், காஷ்மீர் பள்ளத்தாக்கு, குறிப்பாக அனந்தநாக் மாவட்டத்தில் வாழ்ந்து கொண்டிருந்த இந்து காஷ்மீர பண்டிதர்கள் மீது காஷ்மீர் தீவிரவாத முஸ்லீம்களால் 1986ம் ஆண்டில் நடத்தப்பட்ட தாக்குதல்களைக் குறிக்கிறது[4]. இத்தாக்குதல்களில் காஷ்மீர் பண்டிதர்களில் வீடுகள் தீ வைக்கப்பட்டதுடன், அவர்களின் சொத்துக்களை கொள்ளையடித்ததனர். இக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான காஷ்மீர இந்து பண்டிதர்கள் தாங்கள் சொந்த நாட்டில் ஜம்மு, தில்லி, சண்டிகர் போன்ற நகரங்களில் புலம்பெயர்ந்து அகதிகளாக முகாம்களில் வாழவேண்டியதாயிற்று.

பின்னணி

[தொகு]

1950 ஜம்மு காஷ்மீர் தனியார் தோட்டங்கள் ஒழிப்பு சட்டத்தால், ஆயிரக்கணக்கான காஷ்மீர இந்து பண்டிதர்கள் தங்களது தோட்டங்களை அரசிடம் இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டனர்.[4]1982ஆம் ஆண்டில் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் சேக் அப்துல்லாவின் மறைவிற்குப் பின், அவரது மகன் பாரூக் அப்துல்லா முதலமைச்சர் ஆனார். முப்தி முகமது சயீத் மக்கள் ஜனநாயகக் கட்சியை துவக்கினார்.[5]

1986ம் ஆண்டுகளின் துவக்கத்தில் குலாம் முஹம்மது ஷா என்பவர் ஜம்முவில் இருந்த மாநில அரசின் குளிர்காலத் தலைமையகத்தில் இருந்த பழமையான இந்துக் கோயிலை இடித்து, அதே இடத்தில் ஒரு மசூதியை கட்ட முயன்றார். இம்முயற்சிக்கு ஜம்மு வாழ் இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் பிப்ரவரி 1986ல் குலாம் முகமது ஷா காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் சென்று, இந்துக்களால் இசுலாமுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறி, இசுலாமியர்களை இந்துக்களுக்கு எதிராகத் தூண்டினார். இதனால் காஷ்மீர் பள்ளத்தாக்கின் இந்துக்களின் கடைகள், கோயில்கள் அடித்து நொறுக்கப்பட்டது. இக்கலவரத்தின் போது 2,000க்கும் மேற்பட்ட இந்துக்கள் பலியானர்கள்.[6]

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் 8 நகரங்களில் ஊரடங்கு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டது.[7]காஷ்மீர் தீவிரவாத முஸ்லிம்கள் அனந்தநாக், சோப்பூர், லுக் பவன், சலார் பதேபூர் மற்றும் அக்குரா போன்ற இடங்களில் இருந்த இந்துக் கோயில்களை தீயிட்டு எரித்து அழித்தனர்.[4][2][3]

கலவரத்தில் அனந்தநாக் நகரத்தின் இந்து காஷ்மீரப் பண்டிதர்களின் வீடுகள், கடைகள், கோயில்கள் குறிவைத்து இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.[5]இதனால் ஆயிரக்கணக்கான இந்துக்கள் அனந்தநாக் நகரத்தை விட்டு வெளியேறி ஜம்மு, உதம்பூர், தில்லி, சண்டிகர் போன்ற நகரங்களில் அகதிகளாக வெளியேறினர். இதனையும் காண்க==

மேற்கோள்கள்

[தொகு]
  1. Koul, Bill K. (10 September 2020). The Exiled Pandits of Kashmir Will They Ever Return Home?. Springer Singapore. p. 214. ISBN 9789811565373.
  2. 2.0 2.1 Tikoo, Colonel Tej K (2013). Kashmir: Its Aborigines and Their Exodus. Lancer Publishers LLC. pp. 397–. ISBN 978-1-935501-58-9.
  3. 3.0 3.1 Aiyar, Mani Shankar (2006), Confessions of a Secular Fundamentalist, Penguin Books India, pp. 148–, ISBN 978-0-14-306205-9
  4. 4.0 4.1 4.2 Pandit, Bansi (2008). Explore Kashmiri Pandits. Dharma Publications. p. 48-49. ISBN 9780963479860.
  5. 5.0 5.1 "Explained: The Kashmir Pandit tragedy". The Indian Express. January 24, 2020. Retrieved March 8, 2022. {{cite web}}: |archive-date= requires |archive-url= (help); Unknown parameter |archive-u rl= ignored (help)CS1 maint: url-status (link)
  6. Verma, P. S. (1994). Jammu and Kashmir at the Political Crossroads. Vikas Publishing House. p. 214. ISBN 9780706976205.
  7. "Hindu-Moslem riots reported in Kashmir, Calcutta". AP News. February 22, 1986. Archived from the original on 6 October 2020. Retrieved March 7, 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=1986_காஷ்மீர்_கலவரங்கள்&oldid=4450743" இலிருந்து மீள்விக்கப்பட்டது