1985 எல்சிங்கி கந்தகம் உமிழ்வுக் குறைப்பு ஒப்பந்தம்
1985 எல்சிங்கி கந்தகம் உமிழ்வுக் குறைப்பு ஒப்பந்தம் (1985 Helsinki Protocol on the Reduction of Sulphur Emissions) என்பது ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகள் இணைந்து கந்தக டையாக்சைடு (SO₂) உமிழ்வைக் குறைப்பதற்காக மேற்கொண்ட முக்கியமான பன்னாட்டுச் சுற்றுச்சூழல் ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தம் 1985 ஆம் ஆண்டு சூலை மாதம் 8 ஆம் தேதியன்று பின்லாந்தின் எல்சிங்கி நகரில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 'நீண்ட தூர எல்லை தாண்டிய காற்று மாசுபாடு குறித்த 1979-ஆம் ஆண்டு உடன்படிக்கையின் ஒரு பகுதியாக 1985-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த ஒப்பந்தம் 1993-ஆம் ஆண்டிற்குள் கந்தக உமிழ்வுகள் அல்லது அவற்றின் எல்லை தாண்டிய பரவலைக் குறைந்தது 30 சதவீதம் குறைக்க வகை செய்தது. இந்த நெறிமுறையானது, கந்தக உமிழ்வுகளை மேலும் குறைப்பது குறித்த 1994-ஆம் ஆண்டு 'ஓசுலோ ஒப்பந்த நெறிமுறையால் மேலும் வலுப்படுத்தப்பட்டது. 1993-ஆம் ஆண்டிற்குள், இந்த உடன்படிக்கையில் பங்கேற்ற பெரும்பாலான நாடுகள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைந்ததாகத் தெரிவித்தன. சில நாடுகள் கந்தக உமிழ்வை அதைவிட அதிக அளவிலும் குறைத்திருந்தன.[1]
கையெழுத்திடுவதற்காகத் திறக்கப்பட்டது - 1985 சூலை 8
நடைமுறைக்கு வந்தது - 1987 செப்டம்பர் 2
பின்னணி
[தொகு]1970 மற்றும் 1980-ஆம் ஆண்டுகளில் தொழிற்சாலைகள், நிலக்கரி மற்றும் எண்ணெய் எரிபொருள் மின் நிலையங்கள், உலோக உருக்காலைகள் போன்றவற்றிலிருந்து அதிக அளவில் கந்தக டையாக்சைடு (SO₂) வளிமண்டலத்தில் வெளியேறியது. இந்த வாயு மழைநீருடன் கலந்து அமில மழை உருவாகக் காரணமானது.
பங்கேற்ற நாடுகள்
[தொகு]அல்பேனியா, ஆத்திரியா, பெலாரசு, பெல்ச்சியம், பல்கேரியா, கனடா, செக் குடியரசு, டென்மார்க், எசுத்தோனியா, பின்லாந்து, பிரான்சு, செருமனி, அங்கேரி, இத்தாலி, இலீக்டன்சுடைன், இலித்துவேனியா, லக்சம்பர்க், நெதர்லாந்து, வடக்கு மாசிடோனியா, நார்வே, உருசியா , சுலோவாக்கியா, சுவீடன், சுவிட்சர்லாந்து, உக்ரைன்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Dai, Xinyuan (2005). "Why Comply? The Domestic Constituency Mechanism". International Organization 59 (2): 363–398. doi:10.1017/S0020818305050125. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-8183. https://archive.org/details/sim_international-organization_spring-2005_59_2/page/363.
வெளி இணைப்புகள்
[தொகு]- "1985 Helsinki Protocol on the Reduction of Sulphur Emissions or their Transboundary Fluxes by at least 30 per cent", unece.org.
- Text.
- Signatures and ratifications.
[[பகுப்பு:மாக்கடோனியக் குடியரசின் ஒ
- கந்தகம்
- காற்று மாசுபாடு
- சுவிட்சர்லாந்தின் ஒப்பந்தங்கள்
- சுவீடனின் ஒப்பந்தங்கள்
- சிலோவாக்கியாவின் ஒப்பந்தங்கள்
- சோவியத் ஒன்றியத்தின் ஒப்பந்தங்கள்
- நோர்வேயின் ஒப்பந்தங்கள்
- நெதர்லாந்தின் ஒப்பந்தங்கள்
- அல்பேனியாவின் ஒப்பந்தங்கள்
- ஆஸ்திரியாவின் ஒப்பந்தங்கள்
- பெல்ஜியமின் ஒப்பந்தங்கள்
- கனடாவின் ஒப்பந்தங்கள்
- செக் குடியரசின் ஒப்பந்தங்கள்
- செக்கோசிலோவாக்கியாவின் ஒப்பந்தங்கள்
- டென்மார்க்கின் ஒப்பந்தங்கள்
- எசுத்தோனியாவின் ஒப்பந்தங்கள்
- பின்லாந்தின் ஒப்பந்தங்கள்
- பிரான்சின் ஒப்பந்தங்கள்
- மேற்கு செருமனியின் ஒப்பந்தங்கள்
- இடாய்ச்சு மக்களாட்சிக் குடியரசின் ஒப்பந்தங்கள்
- இத்தாலியின் ஒப்பந்தங்கள்
- லீக்கின்ஸ்டைனின் ஒப்பந்தங்கள்
- லிதுவேனியாவின் ஒப்பந்தங்கள்
- லக்சம்பர்க்கின் ஒப்பந்தங்கள்