1984 மன்னார் படுகொலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
1984 மன்னார் படுகொலைகள்
1984 மன்னார் படுகொலைகள் is located in இலங்கை
1984 மன்னார் படுகொலைகள்
இடம் மன்னார், இலங்கை
ஆள்கூறுகள் 8°57′58″N 79°52′59″E / 8.96611°N 79.88306°E / 8.96611; 79.88306ஆள்கூற்று: 8°57′58″N 79°52′59″E / 8.96611°N 79.88306°E / 8.96611; 79.88306
நாள் டிசம்பர் 4, 1984 (+6 GMT)
தாக்குதலுக்கு
உள்ளானோர்
தமிழர்
தாக்குதல்
வகை
சூடு
ஆயுதம் துப்பாக்கிகள்
இறப்பு(கள்) 107 - 150
காயமடைந்தோர் தெரியாது
தாக்கியோர் இலங்கை இராணுவம்

1984 மன்னார் படுகொலைகள் 1984 டிசம்பர் 4 அன்று இலங்கையின் வடக்கே மன்னார் நகரில் இலங்கை இராணுவம் 107 க்கும் 150 க்கும் இடைப்பட்ட தமிழ் மக்களைப் படுகொலை செய்த நிகழ்வாகும்.[1]

மூன்று இராணுவ வாகனங்கள் கண்ணிவெடியில் சிக்கியதில் ஒரு இராணுவத்தினர் கொல்லப்பட்டதற்குப் பழி வாங்கு நடவடிக்கையாக இப்படுகொலைகள் இடம்பெற்றன. மன்னார் மத்திய மருத்துவமனை, அஞ்சலகம், கத்தோலிக்க திருச்சபை மடம் ஆகிய இடங்களிலும், மற்றும் நெல் வயல்களில் பணியாற்றிக் கொண்டிருந்த விவசாயிகள், பேருந்துப் பயணிகள் மீது இராணுவம் தாக்குதல்களை மேற்கொண்டது. மன்னார் நகரைச் சுற்றியுள்ள முருங்கன், பரப்பன்கடல் போன்ற கிராமங்களிலும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இத்தாக்குதல்களை அடுத்து அன்றைய இலங்கை அரசுத்தலைவர் ஜெயவர்தனா விசாரணைக்காக சனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமித்தார். இவ்வாணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்ட கத்தோலிக்க திருச்சபையின் உள்ளூர் மதகுரு மேரி பஸ்டியான் 1985 சனவரியில் கொலை செய்யப்பட்டார். இப்படுகொலைகளுக்கு சாட்சியமளித்த மெதடிஸ்த மறைப்பரப்புனர் ஜோர்ஜ் ஜெயராஜசிங்கம் 1984 டிசம்பரில் கொலை செய்யப்பட்டார்.[2][3]

மேற்கோள்[தொகு]

  1. Brown (edit), Cynthia (1995). Playing the "Communal Card": Communal Violence and Human Rights. மனித உரிமைகள் கண்காணிப்பகம். ISBN 1-56432-152-5.  பக். 91
  2. Hoole, Ranjan (2001). Sri Lanka: The Arrogance of Power : Myths, Decadence & Murder. யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு. ISBN 955-9447-04-1.  பக். 327
  3. Marks, Thomas (1996). Maoist Insurgency Since Vietnam. Routledge. ISBN 0714646067.  பக். 231
"https://ta.wikipedia.org/w/index.php?title=1984_மன்னார்_படுகொலைகள்&oldid=2222845" இருந்து மீள்விக்கப்பட்டது