1973 கானோ வானூர்தி விபத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கானோ வானூர்தி விபத்து
ஜேஒய்-எ.டி.ஒ., விபத்துக்குள்ளான விமானம், இடம் லண்டன் இத்ரோ விமான தளம் 1971 ஆம் ஆண்டு
விபத்து சுருக்கம்
நாள்22 சனவரி 1973
இடம்கானோ, நைசீரியா
பயணிகள்193
ஊழியர்9
காயமுற்றோர்26
உயிரிழப்புகள்176
தப்பியவர்கள்26
வானூர்தி வகைபோயிங் 707-3D3C
இயக்கம்அலியா
வானூர்தி பதிவுJY-ADO

கானோ வானூர்தி விபத்து(Kano Air Disaster) 1973 சனவரி 22,ம் திகதி போயிங் 707-3D3C வகை வானூர்தி நைசீரியா வின் கானோ பன்னாட்டு விமான நிலையத்தில், தரையிறங்க முயன்றபோது மோசமான காலநிலையால் பற்சக்கரம்(Gear) பொறிவடைந்து விபத்துக்குள்ளானதில், 176[1] பேர் கொல்லப்பட்டனர் 26 பேர் காயங்களுடன் உயிர்தப்பினர். இப்பயணத்தின்போது 193 பயணிகள் மற்றும் 9 சிப்பந்திகள் இருந்ததாக மூலத்தகவல் உள்ளது. இது நைசீரியாவின் மிக மோசமான ஆகாயமார்க பேரிடரென்பது குறிப்பிடத்தக்கது.[2]

வானூர்தி[தொகு]

அலியா(Alia) என்ற நிறுவனம்,குத்தகை முறையில் இயக்கிவந்த போயிங் 707 வகை வானூர்தி நைசீரியா ஏர்வேசுக்கு சொந்தமானதாகும். சம்பவத்தன்று சவுதி அரேபியா செட்டாவிலிருந்து,(Jeddah) நைசீரியாவின் லாகோசு நோக்கி, இசுலாம் புனிதப்பயணிகளை[3] அழைத்துக்கொண்டு திரும்பிக்கொண்டிருந்த நேரத்தில் மோசமான வானிலை நிலவி பலத்த காற்று வீசத்தொடங்கியதால், விமான குழுவினர் கானோ விமான தளத்தை நோக்கி திருப்ப முடிவுசெய்ததாக தெரிகிறது. போயிங் 707 வானூர்தி தரையிறக்க முற்பட்டபோது வலதுபக்க இறங்கமைப்பு கால் சரிந்து ஓடுபாதையில் 180° பாகை (degree) திரும்பி சறுக்கி தீப்பிடித்து.

மேற்கோள்கள்[தொகு]

  1. Involving Commercial Passenger Airlines 1920-2011 -Last updated: July 2011
  2. "- நாள்: திங்கள்-சனவரி 22-1973-நேரம்: ca 09:30". Archived from the original on 2013-05-27. பார்க்கப்பட்ட நாள் 2015-10-03. {{cite web}}: horizontal tab character in |title= at position 9 (help)
  3. போயிங்-707 கானோ விபத்து-சனவரி 22-1973

உப இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=1973_கானோ_வானூர்தி_விபத்து&oldid=3618842" இலிருந்து மீள்விக்கப்பட்டது