உள்ளடக்கத்துக்குச் செல்

1970 உலகக்கோப்பை காற்பந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1970 பீஃபா உலகக்கோப்பை
FIFA World Cup
Copa Mundial de Fútbol
México '70
சுற்றுப்போட்டி விவரங்கள்
இடம்பெறும் நாடுமெக்சிக்கோ
நாட்கள்31 மே – 21 சூன்
அணிகள்16 (5 கூட்டமைப்புகளில் இருந்து)
அரங்கு(கள்)5 (5 நகரங்களில்)
இறுதி நிலைகள்
வாகையாளர் பிரேசில் (3-ஆம் தடவை)
இரண்டாம் இடம் இத்தாலி
மூன்றாம் இடம் மேற்கு செருமனி
நான்காம் இடம் உருகுவை
போட்டித் தரவுகள்
விளையாடிய ஆட்டங்கள்32
எடுக்கப்பட்ட இலக்குகள்95 (2.97 /ஆட்டம்)
அதிக இலக்குகள் எடுத்தவர்(கள்) கெர்ட் முல்லர் (10 இலக்குகள்)
சிறந்த ஆட்டக்காரர் பெலே
சிறந்த இளம் ஆட்டக்காரர் தியோபிலோ கூபிலாசு
சிறந்த இலக்குக்காப்பாளர் இலதீசுலாவோ மசுர்கேவிச்
நேர்நடத்தை விருது பெரு
1966
1974

1970 பீஃபா உலகக்கோப்பை (1970 FIFA World Cup) என்பது பன்னாட்டுக் கால்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பின் (பீஃபா) உறுப்பு சங்கங்களின் தேசிய அணிகளால் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் பன்னாட்டு ஆண்கள் கால்பந்து வாகையும், 9-ஆவது பீஃபா உலகக் கோப்பைப் போட்டியுமாகும். மெக்சிக்கோவில் மே 31 முதல் சூன் 21 வரை நடைபெற்ற இப்போட்டிகள், ஐரோப்பா மற்றும் தென்னமெரிக்காவிற்கு வெளியே நடத்தப்பட்ட முதல் உலகக் கோப்பை போட்டியாகவும், வட அமெரிக்காவில் நடத்தப்பட்ட முதல் போட்டியாகவும் அமைந்தது. மக்கள் வசிக்கும் ஆறு கண்டங்களிலிருந்தும் 75 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகள் இப்போட்டியில் பங்கேற்றன, இதன் தகுதிச் சுற்றுகள் மே 1968-இல் தொடங்கின. இந்தச் செயல்முறையிலிருந்து பதினான்கு அணிகள் தகுதி பெற்று, போட்டியை நடத்தும் நாடான மெக்சிக்கோ, நடப்பு வாகையாளரான இங்கிலாந்து ஆகியவற்றுடன் 16 அணிகள் கொண்ட இறுதிப் போட்டியில் இணைந்தன. எல் சால்வடோர், இசுரேல், மொரோக்கோ ஆகிய நாடுகள் இறுதிச் சுற்றில் தங்களது முதல் பங்கேற்பை மேற்கொண்டன.

போட்டியின் இறுதி ஆட்டத்தில், மற்றொரு இருமுறை பீஃபா வாகையாளரும் (ஐரோப்பிய யூரோ 1968 வெற்றியாளருமான) இத்தாலியை பிரேசில் 4-1 என்ற இலக்குக் கணக்கில் வென்றது. மேலும், அரையிறுதியில் மற்றொரு இருமுறை வாகையாளரும் தென் அமெரிக்க வாகையாளருமான உருகுவையை 3-1 என்ற இலக்குக் கணக்கிலும், குழுச் சுற்றில் நடப்பு வாகையாளரான இங்கிலாந்தை 1-0 என்ற கணக்கிலும் பிரேசில் வென்றது. அதே சமயம், காலிறுதியில் மேற்கு செருமனியிடம் இங்கிலாந்து தோற்கடிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டது. இதுவே வெற்றி பெற்ற அணி, ஐரோப்பிய, தென்னமெரிக்க வாகையாளர்களையும், போட்டியின் நடப்பு வாகையாளரையும் தோற்கடித்தது ஒரே ஒரு முறை ஆகும்.

இந்த வெற்றியானது பிரேசிலுக்கு மூன்றாவது உலகக் கோப்பை பட்டத்தை வழங்கியதுடன், இது யூல்சு ரிமெட் வெற்றிக்கிண்ணத்தை நிரந்தரமாக வைத்திருக்க அவர்களுக்கு அனுமதித்தது, மேலும் 1974 இல் ஒரு புதிய வெற்றிக்கிண்ணம் அறிமுகப்படுத்தப்பட்டது. கார்லோசு அல்பேர்ட்டோ தலைமையில் வெற்றி பெற்ற பிரேசில் அணி, பெலே, கேர்சன், சயிர்சின்யோ, ரிவெலினோ, தசுதாவோ போன்ற பெரும் வீரர்களைக் கொண்டிருந்தது.[1][2][3] பிரேசில் அணி அனைத்து ஆறு ஆட்டங்களிலும் வெற்றிகளைப் பெற்றனர், அத்துடன் அனைத்துத் தகுதிப் போட்டிகளிலும் வெற்றி பெற்றனர்.[4]

உயரமான இடங்கள், அதிக வெப்பநிலை போன்ற பிரச்சனைகள் இருந்தபோதிலும்,[5] போட்டிகள் பெரும்பாலும் தாக்குதல் ஆட்டத்தையே வெளிப்படுத்தின. இது ஒரு ஆட்டத்திற்கு சராசரியாக இலக்குகள் என்ற சாதனையை உருவாக்கியது, இது அதன் பிறகு நடந்த எந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளாலும் முறியடிக்கப்படவில்லை.[6][7][8] செயற்கைக்கோள் தகவல் தொடர்புகளில் ஏற்பட்ட முன்னேற்றங்களால், 1970 இறுதிப் போட்டிகள் பீஃபா உலகக் கோப்பைக்கு அதிகூடிய தொலைக்காட்சி பார்வையாளர்களை ஈர்த்து சாதனை ஏற்படுத்தப்பட்டது. ஆட்டங்கள் உலகம் முழுவதும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன[9] சில சமயங்களில், முதல் முறையாக வண்ணத்திலும் ஒளிபரப்பப்பட்டன.[10][11]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Story of the 1970 World Cup". பிபிசி. 12 May 2010.
  2. "Brazil's 1970 winning team voted best of all time". ராய்ட்டர்ஸ். 9 July 2007. https://www.reuters.com/article/us-soccer-world-best-idUSL0988846220070709.
  3. "The Boys from Brazil: On the trail of football's dream team". The Independent. 10 April 2010 இம் மூலத்தில் இருந்து 2 April 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190402182149/https://www.independent.co.uk/sport/football/international/the-boys-from-brazil-on-the-trail-of-footballs-dream-team-806939.html.
  4. "Netherlands' perfect winning streak can match historic feat of Brazil 1970". Goal.com. 7 July 2010. Archived from the original on 9 March 2014. Retrieved 7 July 2013.
  5. "Soccer play in Mexico stirs altitude controversy". Free-Lance Star. Associated Press (Fredericksburg, VA): p. 6. 2 June 1970. https://news.google.com/newspapers?id=0qBWAAAAIBAJ&pg=4552%2C3687609.
  6. "Castrol index tournament legends". Castrol Performance Index. Archived from the original on 17 June 2013. Retrieved 7 July 2013.
  7. "Perfect farewell to Pelé's last appearance in a World Cup". Brasil 2014: World Cup Portal. Archived from the original on 14 November 2013. Retrieved 7 July 2013.
  8. "World Championship – Jules Rimet 1970 Cup Technical study" (PDF). FIFA. Archived from the original (PDF) on 6 January 2010.
  9. Dunmore, Tom (2011). Historical Dictionary of Soccer. Scarecrow Press. p. 13.
  10. "1970 FIFA World Cup Mexico". FIFA. Archived from the original on 13 September 2008.
  11. "40 years since first World Cup in colour". TVlicensing.co.uk.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=1970_உலகக்கோப்பை_காற்பந்து&oldid=4582325" இலிருந்து மீள்விக்கப்பட்டது