உள்ளடக்கத்துக்குச் செல்

1956 அரியலூர் தொடருந்து விபத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரியலூர் இரயில் விபத்து என்பது இந்தியாவில் உள்ள தமிழகத்தில் 1956ல் நடந்த முதல் தொடருந்து பெரும் விபத்தாகும்.[1]

விபத்துக்கு உண்டான காரணம்

[தொகு]
  • இது 1956 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் தேதி சென்னைதூத்துக்குடி வரையிலான தொடருந்து 13 பெட்டிகளுடன் தனது பயணத்தை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து துவங்கியது.
  • இந்த இரயிலானது விருத்தாசலம் சந்திப்பில் வந்த போது சேலம் செல்லும் பெட்டி (கேரேஜ்) ஒன்றை விலக்கப்பட்டு 12 பெட்டிகளுடன் மீள் பயணத்தைத் தொடர்ந்தது.[2]
  • அப்போது இரயிலானது விருத்தாசலம்அரியலூர் வரும் வரை கடும் மழை பெய்து கொண்டிருந்தது மேலும் R. S. மாத்தூர் என்ற ஊரில் ரயில் வரும் போது தண்டாள பாதையே நீரில் மூழ்கிய நிலையில் ரயில்வே பணியாளர்கள் உதவியுடன் ரயில் அரைமணி நேரம் தாமதமாக அரியலூர் இரயில் நிலையம் வந்தடைந்தது.
  • அதன் பிறகு அரியலூர்கல்லகம் தொடருந்து நிலையங்களுக்கிடையே உள்ள சில்லக்குடி ரயில் நிலையம் அருகிலான மருதையாற்றில் மழையின் காரணமாக தொடருந்து பாலம் உடைந்து ரயிலின் நீராவி எஞ்சின் மற்றும் 10 ரயில் பெட்டிகள் நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது.[3]
  • மேலும் மருதையாற்றில் மழை வெள்ளம் காரணமாக இரு கரைகளும் தெறியாதபடி தண்ணீர் சென்று கொண்டிருந்தது.
  • அப்போது அதிகாலை 5.30 மணி என்பதால் தண்ணீரின் அளவு பற்றி நீராவி எஞ்சின் ஓட்டுநருக்கு இரயில்வே பாதுகாப்பு பணியாளர்கள் அறிவிப்பு இல்லாததால் இந்த கோர விபத்து நடந்தது என்றும் கூறப்படுகிறது.

உயிரிழப்பு

[தொகு]

இந்த விபத்தின் காரணமாக தொடருந்து எஞ்சினுடன் இணைக்கப்பட்டிருந்த பல பெட்டிகள் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டதால் 142 பயணிகள் மரணமடைந்தனர். 110 பயணிகள் காயமடைந்தனர் மற்றும் 200 பயணிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.[4]

பதவி விலகல்

[தொகு]

இந்த விபத்தின் காரணமாக அப்போதைய இரயில்வே அமைச்சராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி தனது பதவியை விட்டு விலகினார்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. அரியலூர் ரயில் விபத்து
  2. Kumar, Virendra. Committees And Commissions In India Volume 12 : 1974. Concept Publishing Company, 1993, p. 285.
  3. ரயில் விபத்து 1956: கால வெள்ளத்தில் ஒரு பயணம்
  4. "A major train disaster in Tamil Nadu shares the trauma she passed through, all of 57 years later". The Hindu (March 02, 2014)
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-05-06. பார்க்கப்பட்ட நாள் 2014-03-07.

வெளியிணைப்புகள்

[தொகு]