1942 ஆம் ஆண்டு அப்தீன் அரண்மனை சம்பவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெய்ரோவில் உள்ள அப்தீன் அரண்மனை, 1941 இல் படம்

அப்தீன் அரண்மனை சம்பவம் (Abdeen Palace incident) என்பது ஒரு இராணுவ மோதலாகும். இது 1942 பிப்ரவரி 4 அன்று கெய்ரோவில் உள்ள அப்தீன் அரண்மனையில் நடந்தது. இதன் விளைவாக முதலாம் பாரூக் மன்னர் கட்டாயமாக பதவி விலகினார் . இது எகிப்து வரலாற்றில் ஒரு அடையாளமாக கருதப்படுகிறது. [1]

பிப்ரவரி 1942 ல் ஒரு அமைச்சரவை நெருக்கடியைத் தொடர்ந்து, பிரித்தானிய அரசாங்கம், எகிப்தில் உள்ள அதன் தூதர் சர் மைல்ஸ் லாம்ப்சன் மூலம், உசேன் சிர்ரி பாஷாவின் அரசாங்கத்திற்கு பதிலாக ஒரு வாஃப்ட் கட்சி அல்லது வாஃப்ட்-கூட்டணி அரசாங்கம் வேண்டும் என்று பாரூக்கிற்கு அழுத்தம் கொடுத்தது. எகிப்திய அரசியல் கட்சிகளில் பிரபலமான வாஃப்ட் கட்சி, பிரித்தானியபோர் முயற்சிகளுக்கு எகிப்தில் மக்கள் ஆதரவைப் பெறுவதில் மற்ற கட்சிகளை விட மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பியது. பாரூக் மன்னரைச் சுற்றியுள்ள அச்சு நடுகள் சார்பு கூறுகளின் செல்வாக்கை ஒரு வாஃப்ட் அரசாங்கம் பலவீனப்படுத்தும் என்றும் நம்பப்பட்டது. லாம்ப்சன் இறுதியில் பாரூக்கின் மீது இந்த தேர்வை கட்டாயப்படுத்த முடிவு செய்தார். அவர் வாஃப்ட் தலைவரான முஸ்தபா எல்-நஹாஸிடம் ஒரு அரசாங்கத்தை அமைக்கக் கேட்காவிட்டால் தான் விலகுவதாக வலியுறுத்தினார். எகிப்திய மன்னருக்கு அழுத்தம் கொடுப்பதற்காக லம்ப்சன் பிரித்தானைய அமைச்சரவையில் ஆலிவர் லிட்டில்டனின் ஆதரவைப் பெற்றார்.

பிப்ரவரி 4, 1942 இரவு, தளபதி இராபர்ட் ஸ்டோன் கெய்ரோவில் உள்ள அப்தீன் அரண்மனையை துருப்புக்கள் மற்றும் பீரங்களுடன் சுற்றி வளைத்தார். மேலும் லாம்ப்சன் பாரூக்கிடம் சர் வால்டர் மாங்க்டன் தயாரித்த பதவி விலகல் ஆணையை வழங்கினார். பாரூக் சரணடைந்தார். சிறிது காலத்திலேயே நஹாஸ் ஒரு அரசாங்கத்தை அமைத்தார். எவ்வாறாயினும், பாரூக்கிற்கு ஏற்பட்ட அவமானம் மற்றும் ஆங்கிலேயர்களுடன் ஒத்துழைத்து ஆட்சியைப் பெறுவதில் வாஃப்டின் நடவடிக்கைகள், பிரித்தன் மற்றும் வாஃப்ட் ஆகிய இரண்டும் தங்களின் ஆதரவை இழந்தன. 1952 ஆம் ஆண்டு எகிப்திய புரட்சியின் தலைவர்களில் ஒருவரும், எகிப்தின் முதல் அதிபருமான முகம்மது நாகுயிப் தனது நினைவுக் குறிப்புகளில், 10 ஆண்டுகளுக்கு பின்னர் புரட்சிக்கு பங்களித்த நாட்டில் புரட்சிகர, முடியாட்சி எதிர்ப்பு உணர்வின் எழுச்சிக்கு இந்த சம்பவம் ஒரு முக்கிய காரணியாக மேற்கோள் காட்டினார்.

குறிப்புகள்[தொகு]

  1. "Lampson's ultimatum to Faruq, 4 February 1942". 1970-01-01. {{cite web}}: Missing or empty |url= (help)

வெளி இணைப்புகள்[தொகு]