1936 கேஎல்எம் கிராய்டன் விபத்து
| விபத்து சுருக்கம் | |
|---|---|
| நாள் | 1936, டிசம்பர் 9 |
| சுருக்கம் | புறப்பாட்டின்போது நிகழ்ந்த விபத்து |
| இடம் | கிராய்டன், 51°20′45″N 0°7′21″W / 51.34583°N 0.12250°W |
| பயணிகள் | 13 |
| ஊழியர் | 4 |
| காயமுற்றோர் | 2 |
| உயிரிழப்புகள் | 15 |
| தப்பியவர்கள் | 2 |
| வானூர்தி வகை | Douglas DC-2-115E |
| வானூர்தி பெயர் | "லிஜ்ச்ட்டர்" |
| இயக்கம் | கேஎல்எம் ராயல் டச்சு ஏர்லைன்சு |
| வானூர்தி பதிவு | PH-AKL |
| பறப்பு புறப்பாடு | கிராய்டன் வானூர்தி நிலையம், கிராய்டன், |
| சேருமிடம் | ஆம்ஸ்டர்டம் வானூர்தி நிலையம் ஸ்கைபோல் (AMS/EHAM), ஆம்ஸ்டர்டம், |
1936 கேஎல்எம் கிராய்டன் விபத்து (1936 KLM Croydon accident) எனும் இது, 1936-ஆம் ஆண்டு, டிசம்பர் 9-ஆம் நாளன்று, கேஎல்எம் விமான நிறுவனம் இயக்கிவரும் "டக்ளஸ் டிசி 2-115ஈ" (Douglas DC-2-115E) (பதிவு எண்:PH-AKL) வகையை சார்ந்த "லிஜ்ச்ட்டர்" (Lijster (Turdidae) (தமிழில்: அமெரிக்க பாடும் பறவை) எனும் பெயருடைய வானூர்தி ஒன்று, வழமையாக திட்டமிட்டப்படி, தெற்கு இலண்டனில் உள்ள கிராய்டன் விமான நிலையத்திலிருந்து, நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்டர்டாமுக்கு புறப்படும் தருணத்தில் மூடுபனி காரணமாக விபத்துக்குள்ளான நிகழ்வாகும். இப்பயணத்தின்போது சேவைப் பணியாளர்கள் 4 பேர்களும், பயணிகள் 13 பேர்களுமாக மொத்தம் 17 பேர்கள் இருந்துள்ளனர். இந்தத் திடீர் வானூர்தி விபத்தில், பணியாளர்கள் மூவரும், பயணிகள் 12 பேர்களும் கொல்லப்பட்டு, இருதரப்பிலும் தலா ஒருவரென்று இருவர் காயங்களுடன் உயிர்த்தப்பினார்கள்..[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Accident description". Aviation-safety.net - 1996-2016. Archived from the original on 2014-01-13. Retrieved 2016-09-07.