1929 இம்பீரியல் எயார்வேசு டபிள்யூ 10 விபத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
1929 இம்பீரியல் எயார்வேசு டபிள்யூ 10 விபத்து
A Handley Page W.8, விபத்தானது இதுபோன்ற வானூர்தி
விபத்து தொகுப்பு
நாள்1929 சூன் 17
Siteஆங்கிலக் கால்வாய், நிலக்கூம்பு பகுதி
50°45′00″N 1°07′0″E / 50.75000°N 1.11667°E / 50.75000; 1.11667ஆள்கூறுகள்: 50°45′00″N 1°07′0″E / 50.75000°N 1.11667°E / 50.75000; 1.11667
பயணிகள்11
சிப்பந்திகள்2
காயம்6
உயிரிழந்தோர்7
உயிர் தப்பியோர்6
விமான வகைHandley Page W.10
விமானப் பெயர்ஒட்டாவா பெருநகரம்(City of Ottawa)
இயக்குனர்இம்பீரியல் எயார்வேய்ஸ்
Tail numberஜி-இபிஎம்டி
புறப்பாடுகிராய்டன் விமான தளம், ஐக்கிய இராச்சியம்
1வது தரிப்புலே பவுர்கேட், பாரிசு, பிரான்சு
2வது தரிப்புபாஸ்லே விமான தளம் (Basle Airport), சுவிச்சர்லாந்து
வந்தடையும் இடம்சூரிச் விமான நிலையம், சுவிச்சர்லாந்து

இம்பீரியல் எயார்வேசு டபிள்யூ 10 (Imperial Airways Handley Page W.10; பதிவு:ஜி-இபிஎம்டி [G-EBMT]) எனப்படும் வானூர்தி, 1929 ஆம் வருடம், சூன் 17-ம் திகதி,[1] ஆங்கிலக் கால்வாய் நிலக்கூம்பு பகுதியில் இயந்திர செயலிழப்பு காரணமாக விபத்துக்குள்ளானதில் 7 பேர் கொல்லப்பட்டனர். இந்த வானூர்தி சம்பவத்தின்போது சர்வதேச திட்டமிடல்படி, ஐக்கிய இராச்சியம் கிராய்டன் விமான தளத்திலிருந்து, சுவிச்சர்லாந்து சூரிச் விமான தளம் நோக்கி பரந்ததாக அறியப்படுகிறது. இவ்விபத்தின்போது, 2 சிப்பந்திகளுடன் 11 பயணிகள் பயணித்ததாகவும், அதில் 7 பேர்கள் கொல்லப்பட்டு எஞ்சிய 6 பேர்கள் காயங்களோடு உயிர் தப்பியதாக மூலதகவல் உள்ளது.[2]

வானூர்தி விவரம்[தொகு]

விபத்துக்குள்ளான "ஒட்டோவா பெருநகர்" (City of Ottawa) என்ற பெயரிடப்பட்ட இந்த வானூர்தி, ஹான்ட்லே பேஜ் டபிள்யூ 10 (Handley Page W.10) வகையைச் சேர்ந்ததாகும். 1925 ஆம் ஆண்டு திசம்பர் 25 இல் இம்பீரியல் எயார்வேசு நிறுவனம் வெளியிட்டு இயக்கிவந்த இவ் வானூர்தி, ஜி-இபிஎம்டி (G-EBMT) என்று பதியப் பெற்றது.[3]

பாதிக்கப்பட்டவர்கள்[தொகு]

இறப்புக்கள் தேசியம் -[4]

தேசியம் குழுவினர் பயணிகள் பலியானோர் காயமுற்றோர்
இங்கிலாந்து ஆங்கிலேர் 2 6 3 5
ஐக்கிய அமெரிக்கா அமெரிக்கர் 2 1 1
ஆத்திரேலியா அவுஸ்திரேலியர் 1 1
கனடா கனடியர் 1 1
பிரான்சு பிரான்சியர் 1 1
மொத்தம் 2 11 7 6

உசாத்துணை[தொகு]

உப இணைப்பு[தொகு]