உள்ளடக்கத்துக்குச் செல்

1915 சனாக்கலே பாலம்

ஆள்கூறுகள்: 40°20′24″N 26°38′10″E / 40.34000°N 26.63611°E / 40.34000; 26.63611
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1915 சனாக்கலே பாலம்
Çanakkale Bridge
Dardanelles Bridge
2021 சனவரியில் பாலம் கட்டுமானம்
அதிகாரப் பூர்வ பெயர் 1915 சனாக்கலே கோப்ரூசூ
போக்குவரத்து 6 வழித்தடங்கள்
ஒவ்வொரு பக்கத்திலும் பராமரிப்பு நடைபாதைகள் உள்ளன
தாண்டுவது தார்தனெல்லி நீரிணை
இடம் கனக்கலே மாகாணம், துருக்கி
வடிவமைப்பு தொங்கு பாலம்
மொத்த நீளம் 4,608 மீ (15,118 அடி)
அகலம் 45.06 மீ (148 அடி)
உயரம் 334 மீ (1,096 அடி)
அதிகூடிய அகல்வு 2,023 மீ (6,637 அடி)
Clearance below 70 மீ (230 அடி)
கட்டுமானம் தொடங்கிய தேதி மார்ச் 2017[1]
கட்டுமானம் முடிந்த தேதி 26 பெப்ரவரி 2022
திறப்பு நாள் 18 மார்ச்சு 2022; 2 ஆண்டுகள் முன்னர் (2022-03-18)
சுங்கத் தீர்வை ₺200[2]
அமைவு 40°20′24″N 26°38′10″E / 40.34000°N 26.63611°E / 40.34000; 26.63611

1915 சனாக்கலே பாலம் (1915 Çanakkale Bridge, துருக்கியம்: 1915 Çanakkale Köprüsü), அல்லது தார்தனெல்லி பாலம் (Dardanelles Bridge, துருக்கியம்: Çanakkale Boğaz Köprüsü), என்பது வடமேற்குத் துருக்கியில் சனாக்கலே மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு சாலைத் தொங்கு பாலம் ஆகும். இப்பாலம் மர்மாரா கடலுக்குத் தெற்கே கிட்டத்தட்ட 10 கிமீ (6.2 மைல்) தொலைவில் உள்ள தார்தனெல்லி நீரிணையைக் கடந்து செல்கிறது.[1]

சனாக்கலே பாலம் 321-கிலோமீட்டர் நீள (199 மைல்) US$2.8 பில்லியன் செலவில் திட்டமிடப்பட்டுள்ள கினாலி-பலிக்கேசிர் விரைவுச் சாலையின் மையப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இது கிழக்கு திரேசில் உள்ள O-3 மற்றும் O-7 பெருஞ்சாலைகளை அனத்தோலியாவில் உள்ள O-5 பெருஞ்சாலையுடன் இணைக்கிறது. 2,023 மீ (6,637 அடி) நீளம் கொண்ட இந்தப் பாலம் சப்பானில் உள்ள அகாசி கைக்ஜோ பாலத்தைவிட 32 மீ (105 அடி) நீண்டிருப்பதால், உலகின் மிக நீளமான தொங்கு பாலமாக உள்ளது.[3]

இப்பாலத்தை 2022 மார்ச் 18 இல் துருக்கிய அரசுத்தலைவர் ரசிப் தைய்யிப் எர்டோகன் அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார்.[4] இந்தப் பாலம் தார்தனெல்சு நீரிணை மீதுள்ள முதலாவது நிலையான கடக்கும் பாலமும்,[5] துருக்கிய நீரிணைகளின் குறுக்கே உள்ள ஆறாவது பாலமுமாகு. ஏனையவை பொசுபோரசு நீரிணை மீதுள்ள மூன்று பாலங்களும், அதன் கீழ் உள்ள இரண்டு சுரங்கங்களும் ஆகும்.[6]

வரலாறு[தொகு]

2020 மே 16 அன்று, ஐரோப்பியக் கரையில் உள்ள கலிபோலி பக்கத்தில் இரண்டாவது கோபுரம் கட்டி முடிக்கப்பட்டது.[7] 2021 நவம்பர் 13 இற்குள் அனைத்து தட்டுகளும் அமைக்கப்பட்டன.[4] 200 லீரா (€12.20) கட்டணத்தில் 2022 மார்ச் 18 இல் சுங்கச்சாவடிப் பாலம் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது.[8]

குறியீடுகள்[தொகு]

சில குறியீடுகள் இப்பாலத்துடன் தொடர்புடையவை. பெயரில் உள்ள எண் 1915 என்பது, முக்கியமான தாங்குபால வடத்தின் குறுக்குவெட்டுப் புள்ளியின் உயரம் (318 மீ),[9] தொடக்க நாள் (18 மார்ச்) ஆகியவை கலிப்பொலி போரில் கடற்படை நடவடிக்கைகளின் போது 1915 மார்ச் 18 அன்று உதுமானியக் கடற்படையின் வெற்றியுடன் தொடர்புடையது. பாலத்தின் நீளம், 2023 மீட்டர், 2023 இல் துருக்கியக் குடியரசின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கிறது.[3]

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Canakkale 1915 Bridge". Road Traffic Technology இம் மூலத்தில் இருந்து 6 January 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180106174100/http://www.roadtraffic-technology.com/projects/canakkale-1915-bridge/. 
  2. "Cumhurbaşkanı Erdoğan, 1915 Çanakkale Köprüsü'nün geçiş ücretini açıkladı". ntv.com.tr. NTV. 18 March 2022. Archived from the original on 18 March 2022. பார்க்கப்பட்ட நாள் 18 March 2022.
  3. 3.0 3.1 "Groundbreaking ceremony for bridge over Dardanelles to take place on March 18". Hürriyet Daily News. 17 March 2017 இம் மூலத்தில் இருந்து 18 March 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170318134152/http://www.hurriyetdailynews.com/groundbreaking-ceremony-for-bridge-over-dardanelles-to-take-place-on-march-18.aspx?pageID=238&nID=110948&NewsCatID=345. 
  4. 4.0 4.1 "Turkey opens record-breaking bridge between Europe and Asia". CNN. Archived from the original on 20 March 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-03-19.
  5. "Turkey inaugurates 1st bridge over Dardanelles Strait-Xinhua". www.xinhuanet.com. பார்க்கப்பட்ட நாள் 2022-03-20.
  6. "Bosphorus Strait | All About Turkey". www.allaboutturkey.com. பார்க்கப்பட்ட நாள் 2022-03-20.
  7. "Last steel block placed in Çanakkale 1915 Bridge". hurriyetdailynews.com. 16 May 2020. Archived from the original on 20 October 2020. பார்க்கப்பட்ட நாள் 13 July 2020.
  8. "Turkey builds massive bridge linking Europe and Asia". AP NEWS. 2022-03-18. Archived from the original on 18 March 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-03-20.
  9. "1915 Çanakkale Köprüsü'nün 318 metrelik çelik kuleleri tamamlandı". A Haber. Archived from the original on 24 May 2021. பார்க்கப்பட்ட நாள் 24 May 2021.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=1915_சனாக்கலே_பாலம்&oldid=3405520" இலிருந்து மீள்விக்கப்பட்டது