1832 குண்டூர் பஞ்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1832 குண்டூர் பஞ்சம்
நாடு இந்தியா
இடம் குண்டூர், சென்னை மாகாணம்
காலம் 1832 - 1833
Excess mortality 150,000
இறப்பு வீதம் 33%
அவதானிப்புகள் கொள்கை தோல்வி, வறட்சி, அடுத்தடுத்து குறைந்த விளைச்சல்
மக்கள்தொகைக்கு பாதிப்பு இறப்பால் மக்கள் தொகை 33 சதவீதம் குறைந்தது
விளைவுகள் தவலேஸ்வரம் தடுப்பணை கட்டப்பட்டது
முன் 1812-13 மேற்கு இந்தியாவில் பஞ்சம்
பின் 1866 ஒரிசா பஞ்சம்

1832 குண்டூர் பஞ்சம் (Guntur famine of 1832) இந்திய மாநிலமான ஆந்திரப்பிரதேசத்திலுள்ள குண்டூர் நகரத்தைப் பாதித்த ஒரு பெரும் பஞ்சமாகும். பிரித்தானிய இந்தியாவின் நிர்வாகப் பிரிவாக சென்னை மாகாணம் இருந்த 1832-1833 ஆம் ஆண்டு காலத்தில் இப்பஞ்சம் தோன்றியது. சதையில்லாமல் விலா எலும்புகளே தெரிகின்ற நிலையைக் குறிக்கும் தோக்கல கருவு அல்லது நந்தனா கருவு, பெத்த கருவு, தாட்டு கருவு, வலச கருவு, மஸ்தி கருவு, தோப கருவு, என்று உள்ளுரில் இப்பஞ்சம் பல பெயர்களால் அழைக்கப்பட்டது. விதைகள் முளைக்காமல் போனதும், பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியால் விவசாயிகள் மீது விதிக்கப்பட்ட அளவுக்கதிகமான வரிவிதிப்பும் இப்பஞ்சத்திற்குரிய காரணங்களாக அறியப்படுகின்றன. [1]

இறப்புகள்[தொகு]

இப்பஞ்சத்தால் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் பட்டினியால் இறந்தனர். 74,000 காளைகள், 159,000 பால் மாடுகள் மற்றும் 300,000 ஆடுகளும் இப்பஞ்சத்தால் இறந்தன. அடுத்த 15 ஆண்டுகளில் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு இரண்டரை மில்லியன் பிரித்தானிய பவுண்டு அளவைத் தாண்டியது. இப்பஞ்சம் 1833 ஆம் ஆண்டில் தெற்கே உள்ள மெட்ராசு வரை நீண்டது. [2]

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Were Indian Famines 'Natural' Or 'Manmade'? - LSE" (PDF). 16 December 2020 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Famines / by Edward Balfour (1885)". www.payer.de. 16 December 2020 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=1832_குண்டூர்_பஞ்சம்&oldid=3148042" இருந்து மீள்விக்கப்பட்டது