1817-1824 காலரா உலகத்தொற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதல் காலரா உலகத்தொற்று
நோய்காலரா
முதல் தொற்றுகல்கத்தா, பிரித்தானிய இந்தியா
நாட்கள்1817-1824
இறப்புகள்
அறியப்படவில்லை; பேங்காக்கில் 30,000 ; பிரித்தானிய இந்தியாவில் 1-2 மில்லியன்

முதல் காலரா உலகத் தொற்று (1817-1824) (முதல் வாந்திபேதி உலகத்தொற்று) என்றும் முதல் ஆசிய காலரா உலக தொற்று அல்லது ஆசிய காலரா என்றழைக்கப்படும் உலக தொற்றானது இந்தியாவின் கல்கத்தா நகரில் தொடங்கி பின்னர் தென் கிழக்கு ஆசியாவில் இருந்து மத்திய கிழக்கு நாடுகள் கிழக்கு ஆப்பிரிக்கா மத்திய தரைக்கடல் பகுதியில் வரை பரவியது.[1][2] இதற்கு முன்னர் பல முறை இந்தியா முழுவதும் பரவி இருந்தாலும் இந்த முறை இதன் பரவல் உலகம் முழுவதும் இருந்தது சீனாவிலிருந்து மத்தியதரைக்கடல் பகுதி வரை பரவியிருந்தது. இந்த உலகத்தில் லட்சக்கணக்கான மக்கள் இறந்தனர் இவர்களுள் பலர் ஆங்கிலேய படை வீரர்கள் ஆவர் இதனால் இந்த தொற்று ஐரோப்பியர்களின் கவனத்தைப் பெற்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டிலும் ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் பலமுறை ஏற்பட்ட இந்தத் காலரா பரவலில் இதுவே முதலாவதாகும். இந்த முதல் அவ்வளவு தோற்று கிட்டத்தட்ட ஆசியாவின் அனைத்து நாடுகளையும் பாதித்தது.

தோற்றமும் துவக்ககாலப் பரவலும்[தொகு]

காலரா கங்கையாற்றின் பிற்பகுதிக்கு உரித்தான ஒரு உள்ளூர் தொற்று நோயாக இருந்தது.[1] திருவிழாச் சமயங்களில் பக்தர்கள் அடிக்கடி நோய்த்தொற்றுக்கு உள்ளாகி பின்னர் தங்கள் சொந்த ஊர் செல்லும் பொழுது அந்தந்த ஊர்களில் நோய் பரவல் ஏற்பட்டு பின்னர் அடங்கும். முதல் காலரா உலகத் தொற்றும் இதேபோன்றுதான் தொடங்கியது. இந்த நோய்ப் பரவல் 1817 ஆம் ஆண்டு செசோர்(Jessore) என்ற நகரத்தில் தொடங்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.[3] சில நோய் தொற்றியலாளர்களும் மருத்துவ வரலாற்று ஆய்வாளர்களும் இந்தத் தொற்று கங்கை ஆற்றின் முற்பகுதியில் நடைபெற்ற கும்பமேளா என்னும் இந்து சமய நிகழ்வின் மூலம் உலகம் முழுவதும் பரவி இருக்கலாம் என்று கூறுகின்றனர்.[4] 1817-இல் இந்த காலரா கங்கைச் சமவெளிக்கு அப்பாலும் பரவத்தொடங்கியது. செப்டம்பர் மாதம் கல்கத்தா நகரம் வரையும் அதன் பின்னர் துணைக்கண்டம் முழுவதும் வேகமாகப் பரவியது. 1818-இல் நாட்டின் மேற்குக்கரையில் பம்பாய் வரை இந்த நோய் பரவல் இருந்தது.

இந்தியாவைத் தாண்டிய பரவல்[தொகு]

முதல் காலரா உலகத்தொற்றின் போது காலராவின் பரவல்

1820-இல் சியாமில் இந்த நோய் கண்டறியப்பட்டது. 1820 மே மாதம் இது பாங்காக்கு, மணிலா வரையிலும் 1821-இல் சாவகம், ஓமன், சீனாவில் அன்காய் பகுதி வரையிலும் பரவியிருந்தது. 1822-இல் சப்பான், பெர்சியக் குடாவில் பாக்தாது, சிரியா ஆகிய பகுதிகளிலும் 1823-இல் காலரா சான்சிபார், மொரீசியசு வரையிலும் பரவியது.[1] 1824-இல் நோய்ப் பரவல் நின்றது. 1823-1824இல் நிலவிய குளிர் பாக்டீரியாக்களைக் கொன்றிருக்கலாம் என சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.[1] ஆங்கிலத் தரைப்படை, கடற்படையின் நகர்வுகள் இந்த நோயின் உலகத் தொற்றுக்கு காரணமாக இருந்திருக்கும் என நம்பப்படுகிறது. இந்து யாத்திரிகர்கள் நாட்டுக்குள் ஏற்பட்ட பரவலுக்கு காரணமாக இருந்தாலும் ஆங்கிலப் படைகளால் இந்தியாவைத் தாண்டி நேபாளம், ஆப்கானித்தானம்ஆகிய இடங்களுக்கு இந்நோய் பரவியது. கடற்படைக் கப்பல்களும் பயணியர் கப்பல்களும் இந்தியப் பெருங்கடலின் கரைகளில் உள்ள ஆப்பிரிக்கா, இந்தோனேசியா, சீனா, சப்பான் ஆகிய நாடுகளுக்கப் பரவக் காரணமாக இருந்தன.[5]

மொத்த இறப்புகள்[தொகு]

இந்த உலகத் தொற்றால் ஏற்பட்ட இறப்புகளின் மொத்த எண்ணிக்கை அறியப்படவில்லை. ஆங்காங்கே நோய்த் தொற்று ஏற்பட்ட இடத்தில் உள்ள ஆய்வாளர்கள் இறப்பு எண்ணிக்கையை கணித்திருக்கின்றனர். எடுத்துக்காட்டாக, பாங்காக்கில் 30,000 பேர் இறந்திருக்கலாம் என ஒரு கணிப்பு கூறுகிறது.

இந்தியாவில் ஆண்டுக்கு 12.5 இலட்சம் பேர் என்ற வகையில் மொத்தம் ஏறத்தாழ 87.5 இலட்சம் பேர் இறந்திருக்கக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.[6] எனினும் இந்ந எண்ணிக்கை அதிகம் என டேவிட் அர்ணால்டு என்பார் கூறியுள்ளார். இவரது கணிப்பின் படி 10 முதல் 20 இலட்சம் பேர் இறந்திருக்கக் கூடும்.[7]

மேற்கோள்கள்[தொகு]

{{references/>

  1. 1.0 1.1 1.2 1.3 Hays, J. N. (2005). Epidemics and Pandemics: Their Impacts on Human History. ABC-CLIO. p. 193. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85109-658-2.
  2. "Cholera's seven pandemics". Canadian Broadcasting Corporation. December 2, 2008. http://www.cbc.ca/news/technology/cholera-s-seven-pandemics-1.758504. பார்த்த நாள்: 2008-12-11. "The first known pandemic of cholera originated in the Ganges River delta in India. The disease broke out near Calcutta and spread through the rest of the country. By the early 1820s, colonization and trade had carried the disease to Southeast Asia, central Asia, the Middle East, eastern Africa, and the Mediterranean coast. The death toll from this outbreak is not known, but based on the 10,000 recorded deaths among British troops, researchers estimate that hundreds of thousands across India succumbed to the disease. In 1820, 100,000 people died on the Indonesian island of Java alone. By 1823, cholera had disappeared from most of the world, except around the Bay of Bengal." 
  3. Dhiman Barua, William B. Greenough III, Cholera. p. 6
  4. Susan R. Holman, Beholden: Religion, Global Health, and Human Rights. p. 37
  5. McNeill, William H., Plagues and People, p. 268.
  6. Moreau de Jonnès, Alexandre (1831). Rapport au Conseil Supérieur de Santé sur le choléra-morbus pestilentiel ... (in பிரெஞ்சு). University of Lausanne: Chez les Frères Reycend et Comp. pp. 75–76.
  7. Arnold, David (1993). Colonizing the Body: State Medicine and Epidemic Disease in Nineteenth-Century India. University of California Press. pp. 161–163. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-08295-3.
"https://ta.wikipedia.org/w/index.php?title=1817-1824_காலரா_உலகத்தொற்று&oldid=3659534" இலிருந்து மீள்விக்கப்பட்டது