18. 05. 2009
| 18.05.2009 | |
|---|---|
| இயக்கம் | கே. கணேசன் |
| கதை | கே. கணேசன் |
| இசை | இளையராஜா |
| நடிப்பு | சுபாஷ் சந்திரபோஸ் தன்யா |
| விநியோகம் | எஸ்.எஸ்.கே. கிரியேசன்ஸ் |
| வெளியீடு | 18 மே 2018 |
| ஓட்டம் | 130 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
18.05.2009 ( 18 மே 2009 என வாசிக்கப்பட்டது) என்பது 2018 ஆம் ஆண்டு கே. கணேசன் எழுதி இயக்கிய இந்திய தமிழ்ப் போர் நாடகத் திரைப்படமாகும். இந்த படமானது ஈழப் போரின் இரத்தக்களரியான முடிவைப் பற்றியது ஆகும். "மே 18, 2009 அன்று இலங்கை இராணுவத்தால் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களின் ஆசீர்வாதங்கள் தனக்கு உண்டு" என்று கே. கணேசன் நம்புவதாக கூறினார். [1] [2] இந்த படத்தின் மூலம் தன்யா நடிகையாக அறிமுகமானார். படத்தில் அவர் ஒரு பத்திரிகையாளராக நடித்தார். [3] [4]
இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். [5]
நடிகர்கள்
[தொகு]- சுபாஷ் சந்திர போஸ்
- தமிழ்ச்செல்வியாக தன்யா
இசை
[தொகு]- "எத்தனை எத்தனை கொடுமை" - இளையராஜா
வெளியீடு
[தொகு]இந்த படம் 18 மே 2018 அன்று வெளியிடப்பட்டது.[1] படத்தில் நிருவாணமாக நடித்ததற்காக நடிகை தன்யாவுக்கு கொலை மிரட்டல்கள் வந்தன. [6] மாலை மலர் எழுதிய விமர்சனத்தில் இயக்குனரின் நோக்கம், நடிகர்களின் நடிப்பு, படத்தின் பின்னணி இசை ஆகியவற்றைப் பாராட்டினார்.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Film on Sri Lankan Army's Tamil genocide waging war with censors". The New Indian Express. 23 May 2018. Retrieved 2018-12-13.
- ↑ "Waging a war with the censors". சினிமா எக்ஸ்பிரஸ். 22 May 2018.
- ↑ "A difficult debut". சினிமா எக்ஸ்பிரஸ். 23 May 2018. Retrieved 2018-12-13.
- ↑ "'18.05.2009' - படம் எப்படி இருக்கு?". Rajendra Prasath. Filmibeat. 24 July 2018. Retrieved 5 January 2021.
- ↑ Ganeshan, K. (2018-05-18), 18.05.2009 (Drama), SSK Creations, retrieved 2022-02-23
- ↑ "നഗ്നയായി അഭിനയിച്ചതിന് തമിഴ് നടിക്ക് നേരെ വധഭീഷണി". ManoramaOnline (in மலையாளம்).
- ↑ "18.05.2009". maalaimalar.com. 18 May 2018.