1696 ஆம் ஆண்டில் தொல்லுயிரியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1696 ஆம் ஆண்டில் தொல்லுயிரியல் (1696 in paleontology) என்ற இக்கட்டுரை 1696 ஆம் ஆண்டிலும் அதற்கு முன்னதாகவும் நிகழ்ந்த அல்லது வெளியிடப்பட்ட தொல்லுயிரியல் தொடர்பான குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகள் மற்றும் நிகழ்வுகளை பதிவு செய்கிறது. விலங்கு மற்றும் தாவர புதைபடிவங்களை ஆராய்வதன் மூலம் பூமியில் வரலாற்றுக்கு முந்தைய வாழ்க்கை வடிவங்களை ஆய்வு செய்யும் துறை தொல்லுயிரியல் அல்லது புதைபடிவ ஆய்வியல் எனப்படுகிறது. விலங்குகளின் காலடித் தடங்கள், நிலத்திலுள்ள வளைகள், மட்கிய உடல் பாகங்கள், புதைபடிவ மலம் மற்றும் இரசாயன எச்சங்கள் பற்றிய ஆய்வுகளும் இத்துறையில் அடங்கும். மனிதர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் புதைபடிவங்களை எதிர்கொண்டு வருகின்றனர். ஒரு விஞ்ஞானமாக இத்துறையை முறைப்படுத்தப்படுவதற்கு முன்னும் பின்னும் தொல்லுயிரியல் ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது.

டைனோசர் எலும்பின் முதல் விவரக்இ குறிப்பை வெளியிட்ட இராபர்ட் பிளாட்டு அவர் பிறந்த கிராமமான கென்ட் நகரில் உள்ள போர்டனில் இறந்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Farlow, James Orville; Brett-Surmann, M. K. (1999). The Complete Dinosaur. Bloomington, Indiana: Indiana University Press. பக். 5. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780253213136. இணையக் கணினி நூலக மையம்:37107117.