1477
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1477 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1477 MCDLXXVII |
திருவள்ளுவர் ஆண்டு | 1508 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2230 |
அர்மீனிய நாட்காட்டி | 926 ԹՎ ՋԻԶ |
சீன நாட்காட்டி | 4173-4174 |
எபிரேய நாட்காட்டி | 5236-5237 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1532-1533 1399-1400 4578-4579 |
இரானிய நாட்காட்டி | 855-856 |
இசுலாமிய நாட்காட்டி | 881 – 882 |
சப்பானிய நாட்காட்டி | Bunmei 9 (文明9年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1727 |
யூலியன் நாட்காட்டி | 1477 MCDLXXVII |
கொரிய நாட்காட்டி | 3810 |
1477 (MCDLXXVII) பழைய யூலியன் நாட்காட்டியில் ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
நிகழ்வுகள்
[தொகு]- சனவரி 5 – நான்சி சமரில், பர்கண்டியின் கோமகன் சார்லசு கொல்லப்பட்டான். பர்கண்டிப் போர்கள் முடிவுக்கு வந்தன.
- பெப்ரவரி – ஐசுலாந்தில் பர்தார்புங்கா எரிமலை வெடித்தது.
- பெப்ரவரி 27 – சுவீடன், மற்றும் எசுக்காண்டினாவியாவின் முதலாவது பல்கலைக்கழகம் உப்சாலா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.
- ஆகத்து 19 – பர்கண்டியின் மேரி புனித உரோமைப் பேரரசர் முதலாம் மாக்சிமிலியனைத் திருமணம் செய்தார். இதன் மூலம் பிளம்மிய, பர்கண்டிய நிலங்கள் பிரான்சில் இருந்து பிரிக்கப்பட்டு புனித உரோமைப் பேரரசுடன் இணைக்கப்பட்டன.[1]
- நவம்பர் 18 – இங்கிலாந்தில் முதலாவது நூல் அச்சியந்திரசாலை ஒன்றில் பிரசுரிக்கப்பட்டது. அந்தோனி வுட்வில் என்பவரின் நூலை வில்லியம் காக்சுடன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெசுட்மினிஸ்டரில் வெளியிட்டார்.[2]
- உருசியப் பேரரசர் மூன்றாம் இவான் நவ்கோரத் குடியரசு நோக்கிப் படையெடுத்தான். உருசியக் குடியேற்றம் ஆரம்பமானது.
- மார்க்கோ போலோவின் பயணங்கள் என்ற நூலின் முதல் பதிப்பு வெளியானது.
- மலாக்காவில் மன்சூர் ஷா சுல்தானின் ஆட்சி முடிவடைந்து அலாவுதீன் ரியாட் ஷா சுல்தானின் ஆட்சி ஆரம்பமானது.
பிறப்புகள்
[தொகு]- கியார்கியோன், இத்தாலிய ஓவியர் (இ. 1510)
இறப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Heimann, Heinz-Dieter. Die Habsburger: Dynastie und Kaiserreiche. pp. 38–45. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-406-44754-6.
- ↑ Penguin Pocket On This Day. Penguin Reference Library. 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-14-102715-0.