144 (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
144
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்ஜி. மணிகண்டன்
தயாரிப்புசி. வி. குமார்,
டி. இ. அபினேஷ் இளங்கோவன்
இசைஷான் ரோல்டன்
நடிப்புசிவா
அசோக் செல்வன்
ஓவியா
ஸ்ருதி ராமகிருஷ்ணன்
ஒளிப்பதிவுஆர். பி. குருதேவ்
படத்தொகுப்புலியோ ஜான் பால்
கலையகம்சி. வி. குமார்,
அபி & அபி பிக்சர்ஸ்
வெளியீடுநவம்பர் 27, 2015
நாடுஇந்தியா
மொழிதமிழ்

144 (திரைப்படம்) (144 (film)) 2015 இல், வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இதை, ஜி மணிகண்டன் இயக்கி சி. வி. குமார், தயாரித்துள்ளார். இப்படத்தில், சிவா, அசோக் செல்வன், ஓவியா மற்றும் ஸ்ருதி ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர்.[1]சுஜாதா எழுதியுள்ள வசந்தகால குற்றங்கள் என்ற புதினத்தை தழுவி இந்த திரைப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

நடிப்பு[தொகு]

தயாரிப்பு[தொகு]

இத் திரைப்படம், தயாரிப்பாளர் சி.வி. குமார் தயாரிப்பில் புதிய இயக்குனரான மணிகண்டன் இயக்கத்தில், சிவா, அசோக் செல்வன், ஓவியா மற்றும் ஸ்ருதி ராமகிருஷ்ணன் ஆகியோரின் நடிப்பில் பிப்ரவரி 2015 இல் படப்பிடிப்பு தொடங்கியது.[2] அசோக் செல்வன் ஒரு சட்டவிரோத கார் ஓட்டுனராக சித்தரித்துக் கொண்ட படப்பிடிப்பு காட்சிகளை மதுரையில் படம் எடுத்தனர்.[3] ஒரு நீண்ட படப்பிடிப்புத் திட்டத்திற்குப் பிறகு, ஏப்ரல் 2015 இல், இந்த படம் முடிவடைந்தது என அறிவிக்கப்பட்டது.[4]

ஒலிப்பதிவு[தொகு]

இத் திரைப்படத்திற்கு, ஷான் ரோல்டன் இசையமத்துள்ளார். இந்த படத்தில், ஆறு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அவை கபிலன், ஷான் ரோல்டன், விவேக், காரைக்குடி மற்றும் பாரதி கணேசன் ஆகியோரால் எழுதப்பட்டது. பிகைண்ட்வுட் தனது விமர்சனத்தில், இந்த இசைத்தொகுப்பிற்கு 5 க்கு 2.5 ஐ மதிப்பிட்டு, "இது நல்ல ஆற்றல் மற்றும் வேடிக்கையான தருணங்களைக் கொண்ட ஒரு இசைத்தொகுப்பாக உள்ளது; ஆனால் ஷான் ரோல்டனிடம் ரசிகர்கள் வைத்திருந்த எதிர்பார்ப்புகள் குறைந்துவிட்டன." என்று விமர்சித்துள்ளது.[5]

விமர்சன வரவேற்பு[தொகு]

தி டைம்ஸ் ஆப் இந்தியாவின் நிருபரான எம். சுகந்த் இந்த படத்திற்கு 5 க்கு 3 மதிப்பீடு அளித்து தனது விமர்சனத்தில், முண்டாசுப்பட்டி, ராஜதந்திரம் போன்று கதை அம்சம் உள்ளதாகவும் மற்றும் விரிவான தொகுப்பு மற்றும் திட்டமிடல் இல்லை என்பதை இப் படம் உணர்த்துகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இது இயக்குனருக்கு முதல் படமாக இருப்பதால் சூது கவ்வும் மற்றும் ராஜதந்திரம் ஆகிய இரண்டு படங்களின் நவீனமயமாக்கல் இல்லை என்பதை நினைவூட்டுகிறது என்று கூறியுள்ளார்."[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mirchi Shiva- Ashok Selvan's '144'Updates - Tamil Movie News". 20 April 2015. பார்க்கப்பட்ட நாள் 5 December 2018.
  2. "Producer CV Kumar kick starts '144'". Archived from the original on 16 பெப்பிரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 5 திசம்பர் 2018.
  3. "from an honest detective to an illegal car racer..." பார்க்கப்பட்ட நாள் 5 December 2018.
  4. "Actor Ashok Selvan is enthused about Savaale Samaali, 144 and another biggie". பார்க்கப்பட்ட நாள் 5 December 2018.
  5. "144 (aka) 144 songs review". பார்க்கப்பட்ட நாள் 5 December 2018.
  6. "144 Movie Review {3.5/5}: Critic Review of 144 by Times of India". பார்க்கப்பட்ட நாள் 5 December 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=144_(திரைப்படம்)&oldid=3914545" இலிருந்து மீள்விக்கப்பட்டது