12 புளூசு
Appearance
12 புளூசு (12 Blues) என்பது மாலத்தீவின் தீவுக்கூட்டத்தில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஒரு தனியார் தீவாகும். மாலேவில் இருந்து 90 மைல் தொலைவில் இருக்கும் இத்தீவை பறக்குக் படகில் 35 நிமிடப் பயணத்தில் அடையலாம். 12 புளூசு தீவில் உணவு மற்றும் தங்கும் விடுதிகளைக் கட்டி, உலகில் முதன்முதலாக மாலத்தீவு அரசாங்கம் விற்பனைக்கு வழங்கியது[1]. 2011 ஆம் ஆண்டு அக்டோபர் 11 இல் மாலத்தீவுக் குடியரசின் குடியரசுத் தலைவர் முகம்மது நசீத் 12 புளூசு கட்டுவதற்குத் தொடக்கமான பூமிபூசையில் கலந்து கொண்டார். இத்தீவில் வெளிநாட்டு முதலீடுகளுக்கு அரசாங்கம் ஆதரவளிக்கும் என்பதை உறுதிப்படுத்துவதாக இவ்வருகை அமைந்தது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "World's first hotel residences in the Maldives available for individual foreign ownership". Singapore: Jones Lang LaSalle. 11 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 30 செப்டெம்பர் 2011.
- ↑ "The President's Office - Press Releases". web.archive.org. 27 செப்டெம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 1 அக்டோபர் 2024.