108 (அவசரகால தொலைபேசி எண்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்நாட்டில் உள்ள ஒரு வண்டி

108 (நூற்று எட்டு; நூற்றெட்டு) என்பது இந்தியாவில் அவசர கால அழைப்புக்கான கட்டணம் இல்லாத இலவசத் தொலைபேசி எண் ஆகும்.

அவசர கால மருத்துவ, காவல் துறை மற்றும் தீ விபத்து உதவிகளுக்கு 108 எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இந்தச் சேவை எல்லா நாட்களிலும் 24 மணி நேரமும் (24 × 7) செயல்படும். இந்தச் சேவை தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், கோவா, குசராத், மத்தியப் பிரதேசம், இராசத்தான், உத்தரகண்ட், அசாம், மேகாலயா ஆகிய இந்திய மாநிலங்களில் செயல்படுகிறது.[1] இத்திட்டமானது தேசிய ஊரக சுகாதாரம் திட்டத்தின் (NHRM) கீழ், முன்னாள் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரான, மருத்துவர் அன்புமணி ராமதாசால் கொண்டுவரப்பட்டது. [2]

செயல்படும் முறை[தொகு]

அவசர கால உதவிக்கு 108ஐ தொடர்பு கொள்ளும் போது, அழைப்பவரிடம் இருந்து கீழ்கண்ட விபரங்கள் கேட்கப்படுகின்றன.

  1. எங்கிருந்து அழைக்கப்படுகிறது.(மாவட்டம்/நகரம்/ஊர்/கிராமம்/சம்பவ இடத்திற்கானத் துல்லியமான விபரம்)
  2. எந்த வகையான அவசர உதவித் தேவைப்படுகிறது.
  3. எத்தனை பேர் காயம்பட்டுள்ளனர் அல்லது பாதிக்கப்பட்டுள்ளனர்
  4. அழைப்பவரின் பெயர் மற்றும் தொலைபேசி எண் - தேவைப்பட்டால் சம்பவ இடத்திற்கான வழி கேட்க.

மேற்கோள்கள்[தொகு]

  1. "emri இணையதளம்". emri. emri. பார்த்த நாள் டிசம்பர் 05, 2011.
  2. "Anbumani Ramadoss, 40 Minister of Health & Family Welfare". The Indian Express (மே 21, 2009)

வெளி இணைப்புகள்[தொகு]