1-நாப்தலீன் தயோல்
| பெயர்கள் | |
|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
நாப்தலீன்-1-தயோல் | |
| வேறு பெயர்கள்
1-மெர்கேப்டோநாப்தலீன், 1-நாப்தைல் மெர்கேப்டன் | |
| இனங்காட்டிகள் | |
| 529-36-2 | |
| ChemSpider | 61557 |
| EC number | 208-462-7 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 68259 |
| |
| UNII | 9A78CP495H |
| பண்புகள் | |
| C10H8S | |
| வாய்ப்பாட்டு எடை | 160.23 g·mol−1 |
| தோற்றம் | நிறமற்ற எண்ணெய் |
| அடர்த்தி | 1.158 கிராம்/மில்லிலிட்டர்ர் |
| உருகுநிலை | 15 °C (59 °F; 288 K) |
| கொதிநிலை | 285 °C (545 °F; 558 K) |
| தீங்குகள் | |
| GHS குறியீடு: | |
விளக்கப்படங்கள் |
|
குறியீட்டுச் சொல் |
எச்சரிக்கை |
இடர் அறிக்கைகள் |
H302 |
முன்னெச்சரிக்கை அறிக்கைகள் |
P264, P270, P301+312, P330, P501 |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
1-நாப்தலீன் தயோல் (1-Naphthalenethiol) என்பது C10H7SH. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் கந்தகச் சேர்மமாகும். வெண்மை நிறத்தில் திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம் நாப்தலீனின் மோனோதயோல்களில் ஒன்றாக அறியப்படுகிறது. 2-நாப்தலீன் தயோல் என்பது நாப்தலீனின் மற்றொரு மோனோதயோல் ஆகும்.
தயாரிப்பு
[தொகு]நாப்தலீன்-1-சல்போனைல் குளோரைடை வெள்ளீயம்/ஐதரோகுளோரைடு முன்னிலையில் ஒடுக்குதல் வினைக்கு உட்படுத்தி 1-நாப்தலீன் தயோல் தயாரித்தல் நடைமுறையில் பின்பற்றப்படும் தயாரிப்பு முறையாகும்.[1] பலேடியம் வினையூக்கியின் முன்னிலையில் 1-புரோமோநாப்தலீனை சிலில்தயோலேட்டுடன் சேர்த்து வினைபுரியச் செய்து தொடர்ந்து சிலாதயோயீத்தரை நீராற்பகுப்புக்கு உட்படுத்தியும் 1-நாப்தலீன் தயோல் தயாரிக்கப்படுகிறது.[2] முதலில் 1-புரோமோநாப்தலீனிலிருந்து பெறப்படும் கிரிக்கனார்டு வினைக் காரணியிலிருந்து இது பெறப்பட்டது.[3] இவ்வினைக்காரணியுடன் கந்தகத்தைச் சேர்த்து சூடுபடுத்தி தொடர்ந்து அமிலமாக்கல் வினையின் மூலம் சேர்மம் பெறப்பட்டது. 1-நாப்தலீன்சல்போனிக் அமிலத்துடன் முப்பீனைல்பாசுபீனைச் சேர்த்து அயோடின் வினையூக்க ஒடுக்க வினை மூலமாகவும் இதைத் தயாரிக்கலாம்.[4]
வினைகள்
[தொகு]டெட்ராமெத்திலீன்டையமீன் முன்னிலையில் 1-நாப்தலீன் தயோல் பியூட்டைல் இலித்தியத்துடன் வினைபுரிந்து 2-இலித்தியம் வழிப்பெறுதியைக் கொடுக்கிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 Still, Ian WJ; Natividad-Preyra, Rosanne; Toste, F Dean (1999). "A versatile synthetic route to 1,5-dithiocins from o-mercapto aromatic aldehydes". Canadian Journal of Chemistry 77: 113–121. doi:10.1139/v98-230. https://archive.org/details/sim_canadian-journal-of-chemistry_1999-01_77_1/page/113.
- ↑ Rane, Anil M.; Miranda, Edgar I.; Soderquist, John A. (1994). "Potassium Triisopropylsilanethiolate: Vinyl and Aryl Sulfides Through Pd-Catalyzed Cross Coupling". Tetrahed. Lett. 35 (20): 3225–6. doi:10.1016/S0040-4039(00)76870-5. https://archive.org/details/sim_tetrahedron-letters_1994-05-16_35_20/page/3225.
- ↑ Taboury, F. (1908). "Contribution to the Study of Sulphur and Selenium Compounds of the Aromatic Series". Annales de Chimie et de Physique 15: 5–66.
- ↑ Oae Shigeru; Togo Hideo (1983). "Reduction of Sulfonic Acids and Related Organosulfur Compounds with the Triphenylphosphine-Iodine System". Bulletin of the Chemical Society of Japan 56 (12): 3801–3812. doi:10.1246/bcsj.56.3802. https://archive.org/details/sim_bulletin-of-the-chemical-society-of-japan_1983-12_56_12/page/3801.