1,4-டைகுளோரோ-2-நைட்ரோபென்சீன்
| பெயர்கள் | |
|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1,4-டைகுளோரோ-2-நைட்ரோபென்சீன் | |
| வேறு பெயர்கள்
நைட்ரோ-பாரா-டைகுளோரோபென்சீன் | |
| இனங்காட்டிகள் | |
| 89-61-2 | |
| ChEMBL | ChEMBL354761 |
| ChemSpider | 21111865 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| ம.பா.த | C503932 |
| பப்கெம் | 6977 |
| வே.ந.வி.ப எண் | CZ5260000 |
| |
| UNII | IY18G50FF4 |
| UN number | 1578 |
| பண்புகள் | |
| C6H3Cl2NO2 | |
| வாய்ப்பாட்டு எடை | 192.00 |
| தோற்றம் | மஞ்சள் செதில்கள் |
| அடர்த்தி | 1.67 |
| உருகுநிலை | 52-54 °செல்சியசு |
| கொதிநிலை | 266-269 °செல்சியசு |
| 95 மி.கி/லி | |
| தீங்குகள் | |
| GHS குறியீடு: | |
விளக்கப்படங்கள் |
|
குறியீட்டுச் சொல் |
அபாயம் |
இடர் அறிக்கைகள் |
H302, H336, H351, H361, H370, H372, H373, H400, H410 |
முன்னெச்சரிக்கை அறிக்கைகள் |
P201, P202, P260, P261, P264, P270, P271, P273, P281, P301+312, P304+340, P307+311, P308+313, P312 |
| தீப்பற்றும் வெப்பநிலை | 135 °C (275 °F; 408 K) |
Autoignition temperature |
465 °C (869 °F; 738 K) |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
1,4-டைகுளோரோ-2-நைட்ரோபென்சீன் (1,4-Dichloro-2-nitrobenzene) என்பது C6H3Cl2NO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற திண்மமான இச்சேர்மம் தண்ணீரில் கரைவதில்லை. டைகுளோரோநைட்ரோபென்சீனின் அறியப்பட்டுள்ள பல மாற்றியன்களில் இதுவும் ஒன்றாகும்.
தயாரிப்பு
[தொகு]1,4-டைகுளோரோபென்சீனை நைட்ரோயேற்றம் செய்து 1,4-டைகுளோரோ-2-நைட்ரோபென்சீன் தயாரிக்கப்படுகிறது. வர்த்தகமுறையிலான பல வழிப்பெறுதிகள் தயாரிப்பதற்கு உதவும் ஒரு முன்னோடிச் சேர்மமாக இச்சேர்மம் கருதப்படுகிறது.
வினைகள்
[தொகு]இச்சேர்மத்தை ஐதரசனேற்றம் செய்வதால் 1,4-டைகுளோரோ அனிலின் உருவாகிறது. நைட்ரோ குழுவுக்கு அடுத்துள்ள குளோரைடுகளை மின்னணு மிகுபொருள்கள் இடப்பெயர்ச்சி செய்கின்றன. அமோனியாவுடன் வினைபுரிவதால் அனிலின் வழிப்பெறுதிகளும், நீரிய காரத்துடன் வினைபுரிவதால் பீனால் வழிப்பெறுதிகளும் உருவாகின்றன. மெத்தாக்சைடுடன் வினைபுரிவதால் அனிசோல் வழிப்பெறுதிகள் கிடைக்கின்றன. 4-குளோரோ-2-நைட்ரோ அனிலின், 4-குளோரோ-2-நைட்ரோபீனால், 4-குளோரோ-2-நைட்ரோ அனிசோல்[1] என்பவை முறையே மேற்கூறப்பட்ட அச்சேர்மங்களாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gerald Booth (2007). "Nitro Compounds, Aromatic" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry Wiley-VCH, Weinheim, 2005.