1,3-பிசு(முப்புளோரோமெத்தில்)பென்சீன்
| பெயர்கள் | |
|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1,3-பிசு(முப்புளோரோமெத்தில்)பென்சீன் | |
| வேறு பெயர்கள்
α,α,α,α′,α′,α′-அறுபுளோரோ-மெட்டா-சைலீன்
| |
| இனங்காட்டிகள் | |
| 402-31-3 | |
| EC number | 206-939-4 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 223106 |
| |
| UNII | F7TWF66P6X |
| பண்புகள் | |
| C8H4F6 | |
| வாய்ப்பாட்டு எடை | 214.11 g·mol−1 |
| தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
| கொதிநிலை | 114–116 °C (237–241 °F; 387–389 K) |
| தீங்குகள் | |
| GHS குறியீடு:[1] | |
விளக்கப்படங்கள்
|
|
குறியீட்டுச் சொல்
|
எச்சரிக்கை |
இடர் அறிக்கைகள்
|
H226, H315, H319, H335, H411 |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
1,3-பிசு(முப்புளோரோமெத்தில்)பென்சீன் (1,3-Bis(trifluoromethyl)benzene) என்பது C8H4F6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு வேதியியல் சேர்மமாகும். கரிமப் புளோரின் சேர்மமான இதை C6H4(CF3)2 என்ற கட்டமைப்பு வாய்ப்பாட்டாலும் அடையாளப்படுத்தலாம். இச்சேர்மம் ஒரே மூலக்கூறு வாய்ப்பாட்டைக் கொண்ட மூன்று மாற்றியங்களில் மிகவும் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்ட ஒன்றாகும். பென்சோடிரைபுளோரைடைப் போலவே 1,3-பிசு(முப்புளோரோமெத்தில்)பென்சீனும் ஐதரசன் புளோரைடை தொடர்புடைய முக்குளோரோமெத்தில்பென்சீன் சேர்மத்துடன் வினைபுரியச் செய்வதன் மூலம் தயாரிக்கப்படுகிறது.[1]
- C6H4(CCl3)2 + 6 HF → C6H4(CF3)2 + 6 HCl
1,3-பிசு(முப்புளோரோமெத்தில்)பென்சீன் புரோமினேற்ற வினைக்கு உட்பட்டு, புரோமோ-3,5-பிசு(முப்புளோரோமெத்தில்)பென்சீனைக் (BrC6H3(CF3)2) கொடுக்கிறது.[2] இது டெட்ராகிசு(3,5-பிசு(முப்புளோரோமெத்தில்)பீனைல்)போரேட்டின் சோடியம் உப்பு, (NaBArF4) போன்ற பிற வினைப்பொருட்களைத் தயாரிக்கப் பயன்படுகிறது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Siegemund, Günter; Schwertfeger, Werner; Feiring, Andrew; Smart, Bruce; Behr, Fred; Vogel, Herward; McKusick, Blaine (2000). "Fluorine Compounds, Organic". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. doi:10.1002/14356007.a11_349. ISBN 978-3-527-30385-4.
- ↑ Leazer, Johnnie L.; Cvetovich, Raymond; Tsay, Fuh-Rong; Dolling, Ulf; Vickery, Thomas; Bachert, Donald (2003). "An Improved Preparation of 3,5-Bis(trifluoromethyl)acetophenone and Safety Considerations in the Preparation of 3,5-Bis(trifluoromethyl)phenyl Grignard Reagent". The Journal of Organic Chemistry 68 (9): 3695–3698. doi:10.1021/jo026903n.
- ↑ M. Brookhart; B. Grant; A. F. Volpe, Jr. (1992). "[(3,5-(CF3)2C6H3)4B]-[H(OEt2)2]+: a convenient reagent for generation and stabilization of cationic, highly electrophilic organometallic complexes". Organometallics 11 (11): 3920–3922. doi:10.1021/om00059a071.