1,3-இரு தையீட்டேன்
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1,3-இரு தையீட்டேன் | |
| முறையான ஐயூபிஏசி பெயர்
1,3-இரு தையாவளையபியூட்டேன் | |
| இனங்காட்டிகள் | |
| 287-53-6 | |
| ChemSpider | 119906 |
| யேமல் -3D படிமங்கள் | Image Image |
| பப்கெம் | 136129 |
| |
| பண்புகள் | |
| C2H4S2 | |
| வாய்ப்பாட்டு எடை | 92.18 கி/மோல் |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
1,3-இரு தையீட்டேன் (1,3-Dithietane) என்பது C2H4S2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு பல்லினவளைய கரிமச் சேர்மமாகும். நிறமற்றும் படிகவடிவிலும் காணப்படும் இச்சேர்மம் விரும்பத்தகாத சுவை கொண்ட திண்மமாக அறியப்படுகிறது. பிசு(குளோரோமெத்தில்)சல்பாக்சைடுடன் சோடியம் சல்பைடை வினைபுரியச் செய்து 1,3-இருதையீட்டேன் 1- ஆக்சைடு முதலில் தயாரிக்கப்படுகிறது. தொடர்ந்து இதை டெட்ரா ஐதரோபியூரான்-போரேன் ஒடுக்க வினைக்கு உட்படுத்தி முதன் முதலில் 1976 ஆம் ஆண்டு 1,3-இருதையீட்டேன் தயாரிக்கப்பட்டது. [1][2]

செபோடிடன் என்ற எதிர் உயிரியும் போசுதையீட்டேன் என்ற களைக்கொல்லியும் 1,3-இருதையீட்டேன் வேதி வினைக்குழுவைக் கொண்ட சேர்மங்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Block, E; Corey, ER; Penn, RE; Renken, TL; Sherwin, PF (1976). "1,3-Dithietane". J. Am. Chem. Soc. 98 (18): 5715–5717. doi:10.1021/ja00434a061.
- ↑ Block, E; Corey, ER; Penn, RE; Renken, TL; Sherwin, PF; Bock, H; Hirabayashi, T; Mohmand, S et al. (1982). "Synthesis and Thermal Decomposition of 1,3-Dithietane and its S-Oxides". J. Am. Chem. Soc. 104 (11): 3119–3130. doi:10.1021/ja00375a030. https://archive.org/details/american-chemical-society-journal_1982-06-02_104_11/page/3119.