1,3-இருகுளோரோபென்சீன்
| பெயர்கள் | |
|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1,3-இருகுளோரோபென்சீன் | |
| வேறு பெயர்கள்
மெட்டா-இருகுளோரோபென்சீன்
| |
| இனங்காட்டிகள் | |
| 541-73-1 | |
| ChemSpider | 13857694 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 10943 |
| |
| UNII | 75W0WNE5FP |
| பண்புகள் | |
| C6H4Cl2 | |
| வாய்ப்பாட்டு எடை | 147.00 g·mol−1 |
| தோற்றம் | Colorless liquid |
| அடர்த்தி | 1.288 கி/செ.மீ3 |
| உருகுநிலை | −22 முதல் −25 °C (−8 முதல் −13 °F; 251 முதல் 248 K) |
| கொதிநிலை | 172 முதல் 173 °C (342 முதல் 343 °F; 445 முதல் 446 K) |
| கரையாது | |
| −83.19·10−6 cm3/mol | |
| தீங்குகள் | |
| தீப்பற்றும் வெப்பநிலை | 65 °C (149 °F; 338 K) |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
1,3-இருகுளோரோபென்சீன் (1,3-Dichlorobenzene) என்பது C6H4Cl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மெட்டா-இருகுளோரோபென்சீன், மெட்டா டைகுளோரோபென்சீன், 1,3-டைகுளோரோபென்சீன் என்ற பெயர்களாலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. அரைல் குளோரைடு வகை சேர்மமாக வகைப்படுத்தப்படும் இச்சேர்மம் இருகுளோரோபென்சீனின் மாற்றியமுமாகும். இருகுளோரோபென்சீனின் மூன்று மாற்றியங்களில் இது மிகக் குறைவாகக் காணப்படுகிறது. தண்ணீரில் கரையாமல் நிறமற்ற திரவமாக உள்ளது. பென்சீனின் குளோரினேற்றத்தின் போது சிறிய அளவில் உடன் விளைபொருளாகத் தோன்றுகிறது. ஆனால் 3-குளோரோ அனிலினின் சாண்ட்மேயர் வினையால் நேரடி முறையிலும் தயாரிக்க இயலும். அதிக வெப்பநிலையில் மற்ற டைகுளோரோபென்சீன்களின் மாற்றியமாதல் வினையிலிருந்தும் ஐசோமரைசேஷனிலிருந்தும் 1,3-இருகுளோரோபென்சீன் உருவாகிறது.[1]
தீங்குகள்
[தொகு]1,3-குளோரோபென்சீன் எரியக்கூடியதாகும். அபாயகரமான சிதைவுப் பொருட்களான கார்பன் மோனாக்சைடு, கார்பன் டை ஆக்சைடு, குளோரின், ஐதரசன் குளோரைடு வாயு ஆகியன இச்சேர்மத்தின் சிதைவால் உருவாகின்றன. மேலும் இது நீர்வாழ் உயிரினங்களுக்கு நீண்டகால விளைவுகளைக் கொண்ட நச்சுத்தன்மை வாய்ந்தது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ U. Beck, E. Löser "Chlorinated Benzenes and other Nucleus-Chlorinated Aromatic Hydrocarbons" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, 2012, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.o06_o03
- ↑ "SAFETY DATA SHEET". Thermo Fisher Scientific. Retrieved 9 February 2021.