1,2-ஈத்தேன் டைதயோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
1,2-ஈத்தேன் டைதயோல்
1,2-Ethanedithiol
1,2-ஈத்தேன் டைதயோல்
Ball-and-stick model of ethane-1,2-dithiol
Space-filling model of ethane-1,2-dithiol
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
ஈத்தேன்-1,2-டைதயோல்
வேறு பெயர்கள்
இருமெர்காப்டோயீத்தேன்
1,2-ஈத்தேன்ட்டைதயோல்
இனங்காட்டிகள்
540-63-6 Yes check.svgY
ChemSpider 13865015 Yes check.svgY
EC number 208-752-3
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10902
வே.ந.வி.ப எண் KI3325000
UNII 92T634FLAR Yes check.svgY
பண்புகள்
C2H6S2
வாய்ப்பாட்டு எடை 94.19 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 1.123 கி/செ.மீ3
உருகுநிலை
கொதிநிலை 146 °C (295 °F; 419 K) 46 மி.மீ.பாதரசம்
சிறிதளவு கரையும்
மற்ற கரைப்பான்கள்-இல் கரைதிறன் கரிமக் கரைப்பான்களில் நன்கு கரையும்
காடித்தன்மை எண் (pKa) ≈11
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.5589 (D-line, 25 °C)
தீங்குகள்
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H226, H301, H302, H310, H312, H319, H330
P210, P233, P240, P241, P242, P243, P260, P262, P264, P270, P271, P280, P284, P301+310
தீப்பற்றும் வெப்பநிலை 50 °C (122 °F; 323 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

1,2-ஈத்தேன் டைதயோல் (1,2-Ethanedithiol) என்பது C2H4(SH)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமவேதியியல் சேர்மமாகும். [1] இது மிகவும் தனித்துவம் மிக்க வாசனையைக் கொண்டுள்ளது. இவ்வாசனை பலரால் அழுகிய முட்டைக்கோசுடன் ஒப்பிடப்படுகிறது. கரிமத் தொகுப்பு வினைகளில் ஒரு பொதுவான கட்டுமானத் தொகுதியாகவும் உலோக அயனிகளுக்கான ஒரு சிறந்த ஈந்தணைவியாகவும் 1,2-ஈத்தேன் டைதயோல் கருதப்படுகிறது.

1,2- இருகுளோரோயீத்தேனுடன் நீரிய சோடியம் பைசல்பைடைச் சேர்த்து வினைபுரியச் செய்து வர்த்தக முறையில் இச்சேர்மம் தயாரிக்கப்படுகிறது. 1,2- இருபுரோமோயீத்தேனுடன் தயோயூரியாவைச் சேர்த்து வினைபுரியச் செய்து தொடர்ந்து நீராற்பகுத்தல் வினைக்கு உட்படுத்தி ஆய்வகங்களில் 1,2-ஈத்தேன் டைதயோல் தயாரித்துக் கொள்ளப்படுகிறது. [2]

பயன்பாடுகள்[தொகு]

1,2-ஈத்தேன் டைதயோல் ஒரு 1,2-டைதயோலாக ஆல்டிகைடுகள் மற்றும் கீட்டோன்களுடன் வினபுரிந்து, வேதியியல் இடைநிலையாகப் பயன்படும் 1,3-டைதயோலேனைக் கொடுக்கும் என்பதால் கரிம வேதியியலில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. [3]

C2H4(SH)2 + RR'CO → C2H4S2CRR' + H2O
1,2-ஈத்தேன் டைதயோல் சேர்மத்தைப் பயன்படுத்தி கார்பனைல் குழுவை 1,3-டைதயோலேனாக மாற்றி பாதுகாக்கும் வினை

பிற 1,2- மற்றும் 1,3-டைதயோல்கள் இவ்வினையில் பங்கேற்று 1,3-டைதயோலேன்களையும் ஆறு உறுப்பு வளையம் கொண்ட 1,3 டைதயேன்களையும் கொடுக்கின்றன.

எத்திலீன் கிளைக்கால் போன்ற டையால்கள் இவ்வினையை ஒத்த வினைகளில் பங்கேற்று 1,3-டையாக்சோலேன்களையும் 1,3-டையாக்சேன்களையும் கொடுக்கின்றன. ஆல்டிகைடுகளிலிருந்து பெறப்பட்ட டைதயோலேன்கள் மற்றும் டைதயேன்களின் சிறப்பம்சம் என்னவென்றால், இவற்றிலுள்ள மீத்தேன் குழுவை புரோட்டான் நீக்கம் செய்து அதன் விளைவாக கார்பன் எதிர்மின் அயனியை ஆல்கைலேற்றம் செய்ய முடியும்.

1,2-ஈத்தேன் டைதயோல் பொதுவாக பெப்டைடு பிளவு தொகுப்பு வினைகளில் துப்புரவாக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது

மேற்கோள்கள்[தொகு]

  1. Choi, H.; Aldrich, J.v. (1993-07-01). "Comparison of methods for the Fmoc solid-phase synthesis and cleavage of a peptide containing both tryptophan and arginine" (in en). International Journal of Peptide and Protein Research 42 (1): 58–63. doi:10.1111/j.1399-3011.1993.tb00350.x. பன்னாட்டுத் தர தொடர் எண்:1399-3011. பப்மெட்:8103765. 
  2. Speziale, A. J. (1963). "Ethanedithiol". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv4p0401. ; Collective Volume, 4, p. 401
  3. R. E. Conrow "Ethanedithiol" in Encyclopedia of Reagents for Organic Synthesis (Ed: L. Paquette) 2004, J. Wiley & Sons, New York. எஆசு:10.1002/047084289X
"https://ta.wikipedia.org/w/index.php?title=1,2-ஈத்தேன்_டைதயோல்&oldid=3120694" இருந்து மீள்விக்கப்பட்டது