ஹ. ராமகிருஷ்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எச். ராமகிருஷ்ணன் (H. Ramakrishnan) என்பவர் 40 ஆண்டுகால அனுபவம் வாய்ந்த ஊடகவியலாளர், புகழ் பெற்ற செய்தி வாசிப்பாளர்,கர்நாடக இசைப்பாடகர் மற்றும் 'கொன்னக்கோல்' இசைக்கலையில் வல்லுநர் ஆவார்.

இவர்,தேசியத்தொலைக்காட்சி நிறுவனமான தூர்தர்ஷனின் மாநில அலைவரிசை,மாநில செய்தித்தாள் தகவல் மையம்,மற்றும் காட்சி மற்றும் விளம்பரத் துறை இயக்குநரகத்திலும் பல்வேறு பதவிகளில் பணி புரிந்துள்ளார். தன்னுடைய தனிப்பட்ட , தெளிவான குரல் வளத்தினால் இன்றும் தமிழக மக்களால் சிறந்த செய்தி வாசிப்பாளராக நினைவு கூரப்படுகிறார்.[1]

போலியோ பாதிப்பு[தொகு]

இரண்டரை வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டு இரண்டு கால்களும் செயலிழந்த நிலையில் இருந்ததால் தன் வாழ்வின் ஒவ்வொரு படிகளிலும் போராட்டங்களை எதிர் கொண்டார்.

உள்ளுர் பள்ளியில் அவர் சேர அனுமதி கிட்டவில்லை.பின் தனது தாய்வழிப் பாட்டனாரின் உதவியுடன் வேறு ஊருக்குச் சென்று கல்வி பயின்றார்.

யுபிஎஸ்சி தேர்வில் வென்ற பிறகும் செய்தி வாசிப்பாளர் ,மொழி பெயர்ப்பாளர் அல்லது செய்தியாளராகப் பணியில் சேர விழைந்த போது இவரது உடல் ரீதியான குறைபாட்டைக் காரணமாகக் காட்டப்பட்டு நிராகரிக்கப்பட்டார்.

போலியோ பாதிப்பினால் 85 சதவீதம் வரை இயக்கக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்த போதும் பொது இடங்களிலும், பேருந்துகளிலும் தவழ்ந்து நடமாடி வந்தார்.

பின்னர் சைட் கார் ஸ்கூட்டர் பயன்படுத்தினார். அதன் பின்னர், பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தால் தயாரிக்கப்ட்ட, இவருக்கென்றே பிரத்தியேகமான வசதிகளுடன் கூடிய , கை பிரேக் வசதியுடன் கூடிய ஆட்டோ ரிக்ஷாவைப் பயன்படுத்தினார்.

இவரது பணிக்காலத்தில் கான்பிடன்ஷியல் ரிபோர்ட் எனப்படும் அறிக்கையில் இவரது மேலதிகாரி இவரை உடல் ரீதியான குறைபாடு உடையவர்' என்று குறிப்பிட்ட போது, ஹ.ராமகிருஷ்ணன் அப்போதைய குடியரசுத்தலைவர் வி.வி.கிரி அவர்களைச் சந்தித்து முறையிட்டார்.

வி.வி.கிரி அவர்கள், உடனடியாக,'உடல் ஊனமுற்றவர்களின் உடல் ரீதியான குறையைக் கான்பிடன்ஷியல் ரிபோர்ட்டில் கருத்தில் கொள்ளக்கூடாது' என உத்தரவிட்டார்.

இதழியல்-செய்தித்துறை[தொகு]

தமிழில் நேரடி அலைவரிசையில் செய்திகளை வழங்கிய முதல் செய்தியாளராக விளங்கினார்.

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர்கள் திரு.மு.கருணாநிதி, செல்வி.ஜெ. ஜெயலலிதா,மற்றும் முன்னாள் குடியரசுத்தலைவர் திரு.ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் போன்றோரைத் திறம்பட நேர்காணல் செய்துள்ளார்.

இவர் ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து ராக்கெட் ஏவப்படுதல்,முக்கிய நபர்களை நேர்காணல் செய்தல் முதலியவற்றிற்கு நுண்ஒலிவாங்கி எனப்படும் மைக்ரோபோனைக் கையாண்டுhttps://www.revolvy.com/main/index.php?s=H.%20Ramakrishnan பாராட்டைப் பெற்றார்.

தூர்தர்ஷன் சேனலுக்காக , தொழிலதிபர்கள் என்.மகாலிங்கம், எம்.ஏ.எம்.ராமசாமி, இசைக்கலைஞர்கள் செம்மங்குடி சீனிவாச ஐயர், பி.கே.பட்டம்மாள், நடிகர்கள் ஜெமினி கணேசன் தெங்கை சீனிவாசன், பிரேம் நசீர் பாலச்சந்திர மேனன்,திக்குரி சுகுமாரன் நாயர், மது மற்று்ம் செய்தி ஆசிரியர்கள் தினமலர் கிருஷ்ண மூர்த்தி, துக்ளக் சோ ராமசாமி, தினத்தந்தி சிவந்தி ஆதித்தன் போன்றோரையும் பேட்டி கண்டுள்ளார்.

 செய்தி வாசிப்பு:
  ஹ.ராமகிருஷ்ணணுக்கு பள்ளிப்பருவம் முதற்கொண்டே செய்த் வாசிப்பில் அதீத ஆர்வம் இருந்தது.தனது ஆர்வத்தைத் தெரிவித்து புகழ்பெற்ற செய்தி வாசிப்பாளர்' மெல்வில்லி டி மெல்லோ' வுக்கு 

கடிதம் எழுதினார்.மெல்லோ அவர்கள் கல்லுாரிப் படிப்பை முடித்த பின்னர் அகில இந்திய வானொலிக்கு விண்ணப்பிக்குமாறு பதில் அனுப்பினார்.

    சில ஆண்டுகளுக்குப் பிறகு எச். ராமகிருஷ்ணன் அகில இந்திய வானொலியிலும் பின்னர்தூர்தர்ஷனிலும் செய்தி வாசிப்பாளராகச் சேர்ந்து ஏறத்தாழ 25 ஆண்டுகள் பணியாற்றினார்.மத்திய அரசின் தகவல் தொடர்பு மற்றும் ஒலிபரப்புத் துறை -தூர்தர்ஷன் சென்னையின் சீனியர் அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆபிஸர் பதவி வரை உயர்ந்து பணியாற்றிய முதல் மாற்றுத்திறனாளி இவர் ஆவார்.

மற்ற பதவிகள்[தொகு]

இவை தவிர, இந்தியன் வங்கியின் மக்கள் தொடர்பு மேலாளராகவும் பணி புரிந்துள்ளார்.அவ்வங்கியின் பவள விழாவை வெற்றிகரமாகக் கொண்டாடிப்பாராட்டுப் பெற்றார். இருபதாண்டுகால செய்தியாளர் பணி அனுபவத்தின் மூலம் செய்தி எழுதுதல்,செய்தி தொகுத்தல், மனித வள மேலாண்மை, போன்றவற்றில் சீரிய அறிவு பெற்றுள்ளார்.

திரைப்பட நடிப்பு[தொகு]

இரண்டு தமிழ்த்திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கே.பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான 'வானமே எல்லை' திரைப்படத்தில் , தற்கொலை முடிவு எடுத்த இளைஞர்களின் மனத்தை மாற்றும் மாற்றுத்திறனாளியாகத் தோன்றிய இவரின் நடிப்பு மக்களிடையே நல்லதொரு தாக்கத் தை ஏற்படுத்தியது.

இசைத்துறையில் பங்களிப்பு[தொகு]

இவர் பழனி சுப்ரமணியம் பிள்ளையிடம் மிருதங்கம் வாசிக்கக் கற்றார்.பின்னர் காரைக்குடி மணி அவர்களிடம் மிருதங்கம் இசைக்கப் பயின்றார். 'கஞ் சிரா வாசிப்பையும் அறிந்தவர் ஆவார் கொன்னக்கோல் இசைக்கலையில் இவர் வல்லுநராக அறியப்படுகிறார்.{கொன்னக் கோல் என்பது கர்நாடக இசையில் வாய்வழியாக இசைக்கப்படும் ஒரு வகை இசை ஆகும். கொன்னக்கோல் இசைக்கலையில் இவரது சேவையைப் பாராட்டி தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கி சிறப்பித்தது.

கர்நாடக இசையை வளர்ப்பதற்காக 'அரோஹனா' ,ஸ்ரீ பைரவி கான சபா' என்ந இரு அமைப்புகளையும் நிறுவி உள்ளார்.ஸ்ரீ பைரவி கான சபாவில், எஸ்.பி.பாலசுப்ரமணியம்,யு.எஸ். அருண்,அருணா சயீரம் போன்றோரது இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

வழக்கறிஞர் பணி[தொகு]

இளங்கலைச் சட்டப்படிப்பும் இவர் படித்துள்ளார்.சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றுள்ளார். இவர் ,திருவாங்கூர் உயர்நீதி மன்ற நீதிபதி ஹ.ராமகிருஷ்ண ஐயரின் பேரன் ஆவார்.இவர் தம் தந்தை ஹரிஹர ஐயர் அவர்களும் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர்.

வணிகம் சார் பணிகள்:[தொகு]

குடிநீர் சுத்திகரிக்கும் நிலையங்கள்,பால் பதப்படுத்தும் நிறுவனங்கள்,ஆலோசனை சேவை தரும் மையங்கள் போன்றவற்றையும் நிறுவி உள்ளார்.

தொண்டு:[தொகு]

'க்ருபா' என்ற தொண்டு நிறுவனத்தைத் துவக்கி மாற்றுத்திறனாளிகளுக்கான காது கேட்க வைக்கும் கருவிகள்,நடப்பதற்குதவும் குச்சிகள்,முச்சக்கர மிதிவண்டிகள், அளவிகள் போன்றவற்றை வழங்கி உதவி வருகிறார்.

எழுத்துப்பணி[தொகு]

சீரிய வாசிப்பாளரான இவர், இந்து சமயம் பற்றிய இரு நுால்களை எழுதியுள்ளார்.

'தி இந்து' ,'இந்தியன் எக்ஸ்பிரஸ்',தினமணி, கல்கி, துக்ளக் ,சென்னை ஆன்லைன்.காம் போன்ற பத்திரிக்கைகளிலும் பங்களித்துள்ளார்.

குடும்பம்[தொகு]

இவர் வசந்தா என்பவரை மணந்தார். இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்.

மேற்கோள்கள்:

 1. https://yourstory.com/2017/04/h-ramakrishnan/
 2. http://www.hramakrishnan.com/
 3. http://www.thehindu.com/features/friday-review/music/article2752065.ece
 4. www.thebetterindia.com/16449/famous-indians-with-disability/
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹ._ராமகிருஷ்ணன்&oldid=2716160" இருந்து மீள்விக்கப்பட்டது