ஹோ சி மின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஹோ ஷி மின் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஓ சி மின்
Hồ Chí Minh
胡志明
தனியுருவப் படம் அண். 1946
வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுத் தலைவர்
பதவியில்
19 பெப்ரவரி 1951 – 2 செப்டம்பர் 1969
முன்னையவர்எவருமில்லை
பின்னவர்எவருமில்லை
வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளர்
பதவியில்
1 நவம்பர் 1956 – 10 செப்டம்பர் 1960
முன்னையவர்டுரோங் சின்
பின்னவர்லே துவான்
வியட்நாம் சனநாயகக் குடியரசின் 1வது அரசுத்தலைவர்
பதவியில்
2 செப்டம்பர் 1945 – 2 செப்டம்பர் 1969
முன்னையவர்புதிய பதவி
பாவோ தாய் (பேரரசராக)
பின்னவர்தோன் டூக் தாங்
வியட்நாம் சனநாயகக் குடியரசின் 1வது பிரதமர்
பதவியில்
2 செப்டம்பர் 1945 – 20 செப்டம்பர் 1955
முன்னையவர்புதிய பதவி
திரான் துரோங் கிம் (வியட்நாம் பேரரசின் பிரதமராக)
பின்னவர்பாம் வான் தோங்
வெளியுறவுத்துறை அமைச்சர்
பதவியில்
28 ஆகத்து 1945 – 2 மார்ச் 1946
பின்னவர்நியூவென் துவோங் தாம்
பதவியில்
28 ஆகத்து 1946 – மார்ச் 1947
முன்னையவர்நியூவென் துவோங் தாம்
பின்னவர்ஓவாங் மின் கியாம்
வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல்குழுவின் உறுப்பினர்
பதவியில்
31 மார்ச் 1935 – 2 செப்டம்பர் 1969
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
நியூவென் சின் குங்

(1890-05-19)19 மே 1890
கிம் லியேன், நியே ஆன் மாகாணம், பிரெஞ்சு இந்தோசீனா
இறப்பு2 செப்டம்பர் 1969(1969-09-02) (அகவை 79)
ஹனோய், வடக்கு வியட்நாம்
தேசியம்வியட்நாமியர்
பிரெஞ்சு
அரசியல் கட்சிதொழிலாழர் அகிலத்தின் பிரெஞ்சுப் பகுதி
(1919-1921)
பிரெஞ்சுக் கம்யூனிசக் கட்சி
(1921-1925)
வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி
(1925-1969)
துணைவர்எவருமில்லை
பிள்ளைகள்எவருமில்லை
பெற்றோர்(s)நியூவென் சின் சாக் (தந்தை)
ஒவாங் தி லோவான் (தாய்)
முன்னாள் கல்லூரிகம்யூனிசப் பல்கலைக்கழகம்
தொழில்அரசியல்வாதி
கையெழுத்து

ஹோ சி மின் (Hồ Chí Minh மே 19, 1890செப்டம்பர் 2, 1969) வியட்நாமின் புரட்சித் தலைவராக இருந்தவர், பின்னர் வடக்கு வியட்நாமின் பிரதமராகவும் (19461955), அதிபராகவும் (19461969) இருந்தவர்.

ஹோ வியட் மின் விடுதலை இயக்கத்தை 1941 இலிருந்து முன்னின்று நடத்தி, 1954 இல் பிரெஞ்சுப் படையினருடன் சண்டையிட்டு வெற்றி பெற்றார். அவ்வெற்றி அவருக்கு கம்யூனிச நாடாக வடக்கு வியட்நாமை அமைக்க உதவியது. வியட்நாம் போரை அவரது இறப்பு வரையில் முன்னின்று நடத்தினார். ஆறு ஆண்டுகளின் பின்னர் வட வியட்நாமின் வெற்றியுடன் போர் முடிவுக்கு வந்ததுடன் இரண்டு வியட்நாம்களும் ஒன்றிணைந்தன. தெற்கு வியட்நாமின் தலைநகராயிருந்த சாய்கோன் (Saigon) நகரம் ஹோவின் நினைவாக ஹோ சி மின் நகரம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

பெயர்[தொகு]

பிறப்பில் இவர் பெயர் நியூவென் சின் சுங் (Nguyen Sinh Cung). ஹோ சி மின் என்பது இவரின் இரகசியப் பெயர். அதாவது 1942-ல் வியட்னாம் விடுதலையடையும் சில ஆண்டுகளுக்கு முன்னர் இவர் ஹோ சி மின் புனைப் பெயர் கொண்டு‍ அழைக்கப்பட்டார். இப்படி பல இரகசியப் பெயர்கள் இவருக்கு இருந்தன. ஜனாதிபதியாக ஆகும் வரை இவர் தலைமறைவில் வாழ்ந்து வந்தார். சுமார் 50 வித்தியாசப்பட்ட இரகசியப் பெயர்கள் உண்டு‍ என நம்பப்படுகிறது‍.

பிறப்பு[தொகு]

ஹோ சி மின் மத்திய வியட்னாமில் அமைந்துள்ள சிறிய மாகாணத்தில் பிறந்திருக்கலாம். பிற்பாடு தனது பிறப்புச் சான்றிதழில் வித்தியாசப்பட்ட தகவலைக் கொண்டு தலைமறைவில் வாழ்ந்து வந்தார். 1894-1903 காலப்பகுதிகளைத் தனது பிறப்பு ஆண்டாகப் பத்திரங்களில் கொடுத்தாலும், அதிகாரப்பூர்வமாக 1890 எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சில ஆய்வாளர்களால் ஒத்துக்கொள்ளபடுவது இல்லை.

அவரின் பிறந்த நாளும்கூட சரிவரத் தெரியவில்லை.பொதுவாக வியட்னாம் உருவாக்கப்பட்ட மே 19 ஆம் தேதி அவரின் பிறந்த நாள் என நம்பப்படுகிறது. கிராமப்புறத்தில் பிறப்புத் தகவல் சேமிப்பு இல்லாதபடியால் ஹோ சி மின் தனது பிறப்புத் தேதி தெரியாதவராக இருந்து இருக்கலாம்.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஹோ சி மின்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹோ_சி_மின்&oldid=3258975" இலிருந்து மீள்விக்கப்பட்டது