ஹோஸ்கோட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஹோஸ்கோட்
நகரம்
ஹோஸ்கோட் is located in கருநாடகம்
ஹோஸ்கோட்
ஹோஸ்கோட்
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் ஹோஸ்கோட்டின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 13°04′N 77°48′E / 13.07°N 77.8°E / 13.07; 77.8ஆள்கூற்று: 13°04′N 77°48′E / 13.07°N 77.8°E / 13.07; 77.8
நாடு இந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம் பெங்களூரு ஊரகம்
ஏற்றம்891
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்56,980
மொழிகள்
 • அலுவல்கன்னடம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்562114
தொலைபேசி குறியீடு91-80
வாகனப் பதிவுKA-53
இணையதளம்http://www.hosakotecity.mrc.gov.in

ஹோஸ்கோட் (Hoskote) இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூரு ஊரக மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். இங்கு 23 வார்டுகள் கொண்ட ஹோஸ்கோட் நகராட்சி உள்ளது. ஹோஸ்கோட் நகரம், பெங்களூருக்கு வடகிழக்கே 27 கிமீ தொலைவில், தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது.

வரலாறு[தொகு]

மராத்தியப் பேரரசின் படைகளுக்கும், பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி படைகளுக்கும், முதலாம் ஆங்கிலேய மைசூர் போரின் தொடர்ச்சியாக ஹோஸ்கோட் நகரத்தில் 22-23 ஆகஸ்டு 1768 அன்று போர் நடைபெற்றது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

23 வார்டுகள் கொண்ட ஹோஸ்கோட் நகராட்சியின், 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, மொத்த மக்கள்தொகை 56,980 ஆகும். அதில் ஆண்கள் 29,261 ஆகவும்; பெண்கள் 27,719 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 956 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 86.22%% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 6825 ஆகவுள்ளனர். [1] ஹோஸ்கோட் மக்கள்தொகையில் இந்துக்கள் 74.86% ஆகவும், இசுலாமியர்கள் 22.24% ஆகவும், கிறித்தவர்கள் 2.30% ஆகவும், மற்றவர்கள் 0.60% ஆகவும் உள்ளனர். இங்கு கன்னடம் மற்றும் தமிழ் மொழிகள் பேசப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹோஸ்கோட்&oldid=2672601" இருந்து மீள்விக்கப்பட்டது