ஹோல்கர் அரங்கம்
| அரங்கத் தகவல் | |
|---|---|
| அமைவிடம் | ரேசு கோர்சு சாலை, இந்தோர், இந்தோர் மாவட்டம், மத்தியப் பிரதேசம், இந்தியா |
| ஆள்கூறுகள் | 22°43′27″N 75°52′46″E / 22.72417°N 75.87944°E |
| உள்ளக வாரியம் | மத்தியப் பிரதேசத் துடுப்பாட்ட அணி, மத்தியப் பிரதேசப் பெண்கள் துடுப்பாட்ட அணி |
| இருக்கைகள் | 30,000 |
| உரிமையாளர் | மத்தியப் பிரதேசத் துடுப்பாட்டக் கழகம் |
| இயக்குநர் | மத்தியப் பிரதேசத் துடுப்பாட்டக் கழகம் |
| குத்தகையாளர் | இந்தியத் துடுப்பாட்ட அணி இந்தியப் பெண்கள் துடுப்பாட்ட அணி கொச்சி இட்டசுக்கேர்சு கேரளா பஞ்சாப் கிங்ஸ் |
| பன்னாட்டுத் தகவல் | |
| முதல் தேர்வு | 8–11 அக்டோபர் 2016: |
| கடைசித் தேர்வு | 1–3 மார்ச் 2023: |
| முதல் ஒநாப | 15 ஏப்ரல் 2006: |
| கடைசி ஒநாப | 24 செப்டம்பர் 2023: |
| முதல் இ20ப | 22 திசம்பர் 2017: |
| கடைசி இ20ப | 14 சனவரி 2024: |
| முதல் மஒநாப | 1 அக்டோபர் 2025: |
| கடைசி மஒநாப | 25 அக்டோபர் 2025: |
| 25 அக்டோபர் 2025 இல் உள்ள தரவு மூலம்: கிரிக்கின்ஃபோ | |
ஹோல்கர் துடுப்பாட்ட அரங்கம் இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் அமைந்துள்ளது. இது மத்தியப் பிரதேச துடுப்பாட்டச் சங்கத்திற்குச் சொந்தமானது. இந்தச் சங்கத்தினால் பாராமரிக்கப்படுவதுடன் அதன் தலைமையகமாகச் செயல்படுகிறது. இது மத்தியப் பிரதேச துடுப்பாட்ட அணி, மத்தியப் பிரதேச பெண்கள் அணி ஆகியவற்றின் சொந்த மைதானமாகும்.[1]
இது முன்பு மகாராணி உஷாராஜி அறக்கட்டளை துடுப்பாட்ட மைதானம் என்று அழைக்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டில், மத்தியப் பிரதேச துடுப்பாட்டச் சங்கத்தினால் இந்தூர் மாநிலத்தை ஆட்சி செய்த மராட்டியப் பேரரசின் ஹோல்கர் வம்சத்தின் பெயரால் மறுபெயரிடப்பட்டது.[2] ஹோல்கர் அரங்கத்தின் மைதானம் மிகவும் சிறியது, அதன் மைதான எல்லைகள் 56 மீட்டர் நீளம் மட்டுமே.[3][4] 2006 ஆம் ஆண்டில் இது தனது முதல் பன்னாட்டு ஒருநாள் போட்டியை நடத்தியது.[1] இந்தூர் நகரில் மற்றொரு துடுப்பாட்ட அரங்கமான நேரு அரங்கம் உள்ளது. இது 31 மார்ச் 2001 வரை பன்னாட்டுப் போட்டிகளுக்குப் பயன்படுத்தப்பட்டது.[5]
இது சுமார் 30,000 பார்வையாளர்களைக் கொண்ட இருக்கை வசதியுடன் உள்ள இம்மைதானத்தில் இரவு நேர போட்டிகளுக்கான விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன .[6] வீரேந்தர் சேவாக் இந்த மைதானத்தில் ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகளில் மூன்றாவது அதிகபட்ச ஓட்டங்களானா 219 ஓட்டங்களைப் பதிவு செய்தார்.[7] மத்தியப் பிரதேசத்தின் மற்றொரு பன்னாட்டு மைதானமான குவாலியர் கேப்டன் ரூப் சிங் அரங்கம், இந்தூரின் ஹோல்கர் துடுப்பாட்ட அரங்கத்தை விடச் சற்று சிறியது.[8]
ரஞ்சிக் கோப்பையில் மத்தியப் பிரதேச துடுப்பாட்ட அணியின் பெரும்பாலான சொந்தப் போட்டிகள் இந்த மைதானத்தில் நடைபெறுகிறது. 8 அக்டோபர் 2016 அன்று, இந்தியா நியூசிலாந்திற்கு எதிராக விளையாடியபோது அதன் முதல் தேர்வுப் போட்டி இங்கு நடைபெற்றதன் மூலம் இந்தியாவின் இருபத்திரண்டாவது தேர்வுப் போட்டி மைதானமாக மாறியது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "ESPNcricinfo" (in ஆங்கிலம்). Retrieved 2022-10-04.
- ↑ "Usha Raje is now Holkar cricket stadium". Dainik Bhaskar Online Edition, dated 2010-08-23. Archived from the original on 27 August 2010. Retrieved 2010-08-29.
- ↑ "India Vs Australia 2nd ODI: Holkar Cricket Stadium Indore Pitch Report, Weather Forecast, Stats & Record". My khel.com. Retrieved 2023-09-24.
- ↑ "India vs South Africa, 3rd T20I: Indore Holkar Stadium Pitch Report, Weather Forecast". Retrieved 2023-09-24.
- ↑ "Nehru Stadium. India. Cricket Grounds". ESPNcricinfo. Retrieved 2016-12-23.
- ↑ "Maharani Usha Raje Cricket Stadium in Indore". Archived from the original on 13 January 2010. Retrieved 15 February 2011.
- ↑ "Virender Sehwag scores a double century, breaks Sachin Tendulkar's record". Cricket Country. Archived from the original on 9 January 2012. Retrieved 8 December 2011.
- ↑ "Sachin Tendulkar's knock was slightly better, says MPCA curator : Cricket, News - India Today". Indiatoday.intoday.in. 2011-12-10. Retrieved 2015-08-29.