ஹோமி ஜஹாங்கிர் பாபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஹோமி ஜஹாங்கிர் பாபா ( 30 அக்டோபர் 1909 - 24 சனவாி 1966 ) இந்திய அணுசக்தியின் தந்தை என்று போற்றிப் புகழப்படுபவர் டாக்டர் ஹோமி ஜஹாங்கிர் பாபா ஆவார். இவர் 30 அக்டோபர் 1909 ஆம் ஆண்டு மும்பையில் பாா்சி குடும்பத்தில் பிறந்தார். பாபாவின் தந்தை பெயர் ஜஹாங்கிர் பாபா , இவர் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் படித்தவர். புகழ் பெற்ற டாடா நிறுவனத்தில் பணியபற்றியுள்ளார். தாயார் பெயர் மெஹரன் என்பதாகும். பாபா இரவில் குறைந்த நேரமே துங்குவார் , எதையாவது சிந்தித்து கொண்டே இருப்பார். பாபா இயற்பியல் மற்றும் கணித துறையில் அதிக நாட்டம் கொண்டிருந்தார். தந்தையின் விருப்பத்திற்கு இணங்க பாபா கேம்பிாிட்ஜ் பல்கலைகழகத்தில் 1930 பொறியியல் பட்டம் பெற்றார் . பின்பு தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு 1934 ஆண்டு டாக்டர் பட்டம் பெற்றார். பாபா கேம்பிாிட்ஜ் பல்கலைகழகத்தில் இயற்பியல் ஆசிாியராக பணியாற்றினார். பாபா பெங்களுாில் இந்திய அறிவியல் கழகத்தில் பேராசிாியர் பணியை மேற்கொண்டார். நோபல் பாிசு பெற்ற இந்திய விஞ்ஞானி சா்.சி.வி.இராமன் அவர்கள் தலைவராக இருந்தார். பாபா காஸ்மிக் கதிர்களை பற்றி ஆராய்ச்சி செய்தார். பாபாவின் முயற்சியால் இந்தியாவின் முதல் அணுச்சக்தி ஆராய்ச்சி நிலையம் மும்பைக்கு அருகில் டிராம்பே என்ற இடத்தில் அமைக்கப்பட்டது. பின்னர் இது அணுசக்தி ஆசாய்ச்சி நிலையமாக மாற்றியமைக்கப்பட்டது.இந்தியாவின்முதல் அணுசக்தி நிலையம் தாராப்புாில் நிறுவப்பட்டது. பாபா அவர்கள் இந்திய மற்றும் சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளார்.1954 ஆண்டில் பாபாவின் அணுசக்தி சேவையை பாராட்டி பத்ம புஜன் விருதை அளித்து கெளரவித்தது. 24 ஜனவாி 1966 அன்று விமான விபத்தில் காலமானார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹோமி_ஜஹாங்கிர்_பாபா&oldid=2834573" இருந்து மீள்விக்கப்பட்டது