ஹொரனாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஹொரனாடு
கிராமம்
ஹொரனாடு அன்னபூரணி கோயிலின் மகாதுவாரம் '(பிரதான கதவு)'
ஹொரனாடு அன்னபூரணி கோயிலின் மகாதுவாரம் '(பிரதான கதவு)'
ஹொரனாடு is located in கருநாடகம்
ஹொரனாடு
ஹொரனாடு
Location in Karnataka, India
ஆள்கூறுகள்: 13°16′14″N 75°20′29″E / 13.2705°N 75.3414°E / 13.2705; 75.3414ஆள்கூறுகள்: 13°16′14″N 75°20′29″E / 13.2705°N 75.3414°E / 13.2705; 75.3414
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மவட்டம்சிக்மகளூரு
அரசு
 • நிர்வாகம்கிராம ஊராட்சி
ஏற்றம்831 m (2,726 ft)
மொழிகள்
 • அலுவல்கன்னடம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்577 181
தொலைபேசி இணைப்பு எண்08269
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுஐ.எசு.ஓ 3166-2:ஐ.என்
வாகனப் பதிவுகேஏ-18
இணையதளம்karnataka.gov.in

ஹொரனாடு (Horanadu ) மேலும் ஹொர்னாடு என்றும் அழைக்கப்படும் இது இந்தியாவின் கர்நாடகாவின் சிக்மகளூரு மாவட்டத்தின் கலசா வட்டத்தில் அமைந்துள்ள ஒரு இந்து புனித இடமும், ஒரு பஞ்சாயத்து கிராமமுமாகும். இங்குள்ள |அன்னபூரணி ஆலயத்திலுள்ள தெய்வம் அன்னபூரணியின் சிலை ஆதி சங்கரரால் நிறுவப்பட்டது. அன்னபூரணி தெய்வத்தின் புதிய தெய்வம் 1973 ஆம் ஆண்டில் கோவிலில் புனிதப்படுத்தப்பட்டது. [1] ஹொரனாடு 831 மீ (2,726 அடி) உயரத்தில் உள்ளது [2]

போக்குவரத்து[தொகு]

ஹொரனாட்டின் நிலங்கள்

ஹொரனாடு மலைநாடின் மத்தியில் மங்களூரிலிருந்து 126 கி.மீ தொலைவிலும், பெங்களூரிலிருந்து 316 கி.மீ தூரத்திலும், சிருங்கேரியிலிருந்து தூரம் 75 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. பெங்களூரிலிருந்து ஹொரனாடு வரை ஒவ்வொரு நாளும் நேரடி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பேருந்து சேவைகளை கர்நாடகப் போக்குவரத்துக் கழகமும், சில தனியார் நிறுவனங்களும் வழங்குகின்றன. அருகிலுள்ள விமான நிலையம் மங்களூர் சர்வதேச விமான நிலையமாகும், இது முன்பு பாஜ்பே விமான நிலையம் என்று அழைக்கப்பட்டது. [3] மங்களூருவை கர்கலா மற்றும் கலசா வழியாக சாலை வழியாக அடையலாம்.

கோயில்[தொகு]

ஹொரனாட்டின் பசுமைக் காட்சி

ஹொரானடில் உள்ள அன்னபூரணி கோயிலுக்கு வருகை தரும் ஒவ்வொரு பார்வையாளருக்கும், அவர்களின் மதம், மொழி, சாதி, அல்லது மத வேறுபாடின்றி, மூன்று வேளையும் சைவ உணவு வழங்கப்படுகிறது (பெலே அல்லது பருப்பு வகைகளில் இருந்து தயாரிக்கப்படும் இனிப்பு உட்பட). கோயிலுக்கு வருகை தரும் ஆண் பார்வையாளர்கள் தங்கள் சட்டைகளையும் பனியன்களையும் அகற்றிவிட்டு, தோள்களை ஒரு துண்டு அல்லது சால்வையால் மூடி, கடவுளுக்கு முன்னால் மரியாதை மற்றும் பணிவின் அடையாளமாக இருக்க வேண்டும்.

பிரதான தெய்வம், அன்னபூரணி தங்கத்தால் ஆனது. தெய்வத்தின் ஆசீர்வாதங்களை நாடுகிற ஒருவருக்கு வாழ்க்கையில் உணவுக்கு ஒருபோதும் பற்றாக்குறை இருக்காது என்று நம்பப்படுகிறது. சிவபெருமானுக்கு ஒரு முறை சாபம் ஏற்பட்டதாகவும், அவர் அன்னபூர்ணா தேவியைப் பார்வையிட்டு தேவியின் ஆசீர்வாதங்களைத் தேடியபோது இந்த சாபம் தலைகீழானது என்றும் நம்பப்படுகிறது.

மகா மங்களாரத்தி தொழுகை ஒவ்வொரு நாளும் காலை 9:00 மணி, மதியம் 1:30 மணி மற்றும் இரவு 9:00 மணிக்கு வழங்கப்படும். குங்கும அர்ச்சனை பூசை தினமும் காலை 11:00 மணிக்கும் இரவு 7:00 மணிக்கும் தொடங்குகிறது. [4]

கோயிலுக்கு செல்லும் பாதையானது அடர்ந்த காடுகள் வழியாக செல்கிறது. இந்த் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள ஒரு சிலகோயில்களில் குக்கி சுப்பிரமணியசுவாமி கோயில், தர்மஸ்தலா, சிருங்கேரி, உடுப்பி கிருஷ்ணர் கோயில், கொல்லூர் மூகாம்பிகை கோயில், கலசாவில் உள்ள கலசேசுவரர் கோயில், ஆகியவையும் அடங்கும்.

அருகிலுள்ள இடங்கள்[தொகு]

  • இங்கிருந்து 61 கி.மீ தூரத்தில் சிருங்கேரி என்ற ஒரு பிரபலமான யாத்ரீக இடம் அமைந்துள்ளது.
  • மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள புகழ்பெற்ற மலைத்தொடரான குத்ரேமுக் ஹொரனாட்டிலிருந்து 28 கி.மீ தூரத்தில் உள்ளது..
  • சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட புகழ்பெற்ற கோயிலான கலசேசுவரர் கோயில் இங்கிருந்து 6 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது
  • துங்கா ஆறு, பத்ரா ஆறு மற்றும் நேத்ராவதி ஆகிய 3 புகழ்பெற்ற நதிகளின் பிறப்பிடம் இங்கிருந்து 40 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.
  • அனுமன்குந்தி அருவி இங்கிருந்து 45 கி.மீ. தூரத்தில் உள்ளது.
  • கியதன்மக்கி மலைக் காட்சி இங்கிருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ளது.

அக்டோபர் முதல் ஏப்ரல் வரை ஹொரனாடு செல்ல சிறந்த நேரமாகும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹொரனாடு&oldid=3291536" இருந்து மீள்விக்கப்பட்டது