ஹாங் காங் துடுப்பாட்ட அணி
(ஹொங்கொங் துடுப்பாட்ட அணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation
Jump to search
ஹொங்கொங் துடுப்பாட்ட அணி (Hong Kong cricket team) பன்னாட்டுத் துடுப்பாட்டத்தை சீனாவின் ஹொங்கொங் பகுதிக்காகப் பிரதிநிதித்துவப் படுத்தும் துடுப்பாட்ட அணியாகும். ஹொங்கொங் துடுப்பாட்ட அணி 1866 இல் முதலாவது போட்டியில் பங்கு பற்றியது.[1]. பன்னாட்டுத் துடுப்பாட்டுக் கவுன்சிலில் 1969 முதல் உறுப்பினராக உள்ளது[2].
2004 ஆசியக் கிண்ணப் போட்டிகளில் முதன் முறையாக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் ஹொங்கொங் அணி பங்கு பற்றியது[3]. ஐசிசி தரவுகளின் படி இவ்வணியின் தற்போதைய உலக நிலை 25வது ஆகும். தேர்வுத் துடுப்பாட்டங்களில் விளையாடாத நாடுகளில் ஆசிய நாடுகளில் இது மூன்றாவது நிலையில் தற்போது உள்ளது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Chronology of Hong Kong cricket
- ↑ Hong Kong at CricketArchive
- ↑ List of Hong Kong ODIs பரணிடப்பட்டது 2008-10-12 at the வந்தவழி இயந்திரம் at CricketArchive