ஹொங்கொங் இந்தியர்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஹொங்கொங் இந்தியர் என்போர் ஹொங்கொங்கில் நிரந்தர வதிவுரிமைப் பெற்று வசிக்கும் இந்தியர்களாவர். ஹொங்கொங் நிரந்தர வதிவுரிமை பெற்று வசிக்கும் இந்தியர்களாக கிட்டத்தட்ட 40,000 பேருக்கும் அதிகமானோர் உள்ளனர். இவர்கள் ஹொங்கொங்கை பிரித்தானியா கைப்பற்றியக் காலத்தில் இருந்தே இவர்களின் வரலாறும் ஹொங்கொங்கில் பதிவாகின்றது.
வரலாறு
[தொகு]முதலாம் அபின் போர் முடிந்து ஹொங்கொங் தீவுக்குள் நுழைந்த பிரித்தானியப் படைகள் 1841 ஆம் ஆண்டு ஹொங்கொங் தீவில் பிரித்தானியக் கொடியை உயர்த்தியது. அந்த கொடியேற்ற நிகழ்வின் பொழுது இந்தியப் படையணிகளும் இருந்துள்ளன. (சீக்கியப் படையணிகள்) பிரித்தானியாவின் ஆக்கிரமிப்பிற்குள் இந்தியா உற்பட்டிருந்தக் காலத்தில்; பிரித்தானியாவின் போர் நடவடிக்கைகளுக்கு, இந்தியாவில் "பட்டான்" எனும் ஒரு படையணியை உருவாக்கி அதனை பிரித்தானியா தனது படை நடவடிக்கைகளிற்கு ஈடுப்படுத்தியது. அவ்வாறு பிரித்தானியாவின் சீனாவிற்கு எதிரானப் போரின் போதும் அது இந்திய பட்டான் படையணியை ஈடுப்படுத்தியது. ஹொங்கொங் வரலாற்றிலும் அதன் முன்னேற்றத்திலும் இந்தியரின் பங்கு அளப்பரியது. ஹொங்கொங் வரலாற்றின் முதல் காவல் துறையினராக (Hong Kong Police) பிரித்தானியக் காவல் துறையினருடன் இந்தியர்களும் (அதிகமானோர் சீக்கியர்) காவல் துறையினராக கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர். தற்போதும் ஒரு சில சீக்கியர்கள் காவல் துறை அதிகாரிகளாக இருக்கின்றனர். ஹார்னம் சிங் (Harnam Singh) என்பவர் உயர் சிவில் பணியாளராகவும் ஹொங்கொங் வரலாற்றில் தடம் பதித்தவராவர். ஹொங்கொங் பல்கலைக் கழகம் (University of Hong Kong) எச். என். மோடி (Sir H.N. Mody) என்பவரின் முயற்சியால் உருவானதாகும். அவரது பெயரிலேயே மோடி பாதை (Mody Road) ஒரு பாதையும் உள்ளது. இன்னும் "ரத்தண்ஜி" எனும் பெயரில் பிரசித்திப்பெற்ற மருத்தவக் கட்டிடத்திற்கு அடி கல் நாட்டியவரும் ஒரு இந்தியரே ஆகும்.
இந்தியர் பாக்கிஸ்தானியர்
[தொகு]இன்று ஹொங்கொங்கில் இந்தியர் பாக்கிஸ்தானியர் என இரு நாட்டவர்களாக அடையாளப்படுத்தப்படுவோர். ஹொங்கொங் எனும் நாடு உருவாக்கத்தின் போது ஒரே நாட்டவர்களாக இந்தியர்களாக அறியப்பட்டவர்களே ஆகும். இந்தியாவில் இருந்து பாக்கிஸ்தான் பிரிந்ததால், இங்கு ஒன்றாய், ஒரே படையணியின் பணிப்புரிந்தவர்களும் இன்று இரண்டு வெவ்வேறு நாட்டவர்களாக அடையாளப்படுத்தப்படுகின்றனர்.
இந்தியர் பாக்கிஸ்தானியர் உறவு
[தொகு]இந்தியர்களும் பாக்கிஸ்தானியர்களும் தமது அரசியல் கொள்கையின் படி வேறுபட்டவர்களாகவும் முரண்பட்டவர்களாகவும் காட்டப்பட்டாலும்; ஹொங்கொங்கில் இவர்களின் உறவு வேறு எந்த நாட்டவரிடமான உறவையும் விட மிக நெருக்கமானது. எண்ணற்ற இந்திய பாக்கிஸ்தானிய கலப்பு திருமணம் முடித்தோரைக் காணலாம். குறிப்பாக இந்திய முஸ்லீம்களிடமும், பாக்கிஸ்தானியரிடமும் நூறுவிதமான உறவைக் காணலாம்.
உணவகங்கள் வணிக நிலையங்கள்
[தொகு]இந்திய உணவகமானாலும், பாக்கிஸ்தானிய உணவகமானாலும் இரண்டிலுமே இந்திய பாக்கிஸ்தான் உணவகம் என்றே விளம்பரப் பலகைகள் இருக்கும். இவர்களின் உறவு என்பது தேசிய முகமூடிக்கப்பால் மிகவும் நெருக்கமானது. ஒரு இந்திய தமிழர் ஒருவரின் உணவகத்தின் பெயர் லாவூர் என்றும், இன்னொரு இந்தியத் தமிழரின் உணவகத்தின் பெயர் இஸ்லாமாபாத் என்றும் பெயரிடப்பட்டிருக்கின்றது. இவ்வாறு உணவகம் தவிர்ந்த வணிக நிலையங்களிலும் இவர்களிடையே ஆன ஒற்றுமையைப் பார்க்கலாம்.
மேற்கோள்கள்
[தொகு]