ஹேவ்லாக் தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஹேவலாக் தீவு
Havelock Island
உள்ளூர் பெயர்: Havelock Island
புவியியல்
அமைவிடம் வங்காள விரிகுடா
ஆள்கூறுகள் 11°58′20″N 92°59′20″E / 11.97222°N 92.98889°E / 11.97222; 92.98889ஆள்கூற்று: 11°58′20″N 92°59′20″E / 11.97222°N 92.98889°E / 11.97222; 92.98889
தீவுக்கூட்டம் அந்தமான் தீவுகள்
பரப்பளவு 113.93 கிமீ2 (43.99 சதுர மைல்)
நிர்வாகம்
இந்தியா
ஒன்றிய பகுதி அந்தமான் நிக்கோபார் தீவுகள்
மக்கள்
மக்கள்தொகை 5354 (2011)
இனக்குழுக்கள் வங்காளி
அந்தமானின் ஹேவ்லாக் தீவின், நாகர் கடற்கரையில் கதிரவன் மறையும் காட்சி
அந்தமானின்,ஹேவ்லாக் தீவில் சுற்றுலா பயணிகளுடன் ஒரு யானைசவாரி 

ஹேவ்லாக் தீவு (Havelock Island, இந்தி: हैवलॉक द्वीप,பஞ்சாப்பி: ਹੈਵਾਲੌਕ ਦੀਪ, மலையாளம்: ഹെയ്വ്ലോക് ദ്വീപുകള്,  வங்காளி: হেৱলাক দ্ৱীপ), என்பது  அந்தமான் நிக்கோபார் தீவுகளைச் சேர்ந்த 113.93 கி.மீ2, பரப்புடைய ஒரு பெரிய தீவு ஆகும். இது பெரிய அந்தமான் தீவுச்சங்கிலியைச் சேர்ந்த ஒரு தீவு ஆகும். இத்தீவு  போர்ட்பிளேரில் இருந்து 57 கி.மீ வடகிழக்கில் உள்ளது. இத்தீவின் மக்கள் தொகை 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 5,354 ஆகும்.[1]

விளக்கம்[தொகு]

இந்தியாவில் பணிபுரிந்த பிரித்தானிய ஜெனரலான ஹேவ்லாக் என்பவரின் நினைவாக ஹேவ்லாக் தீவு என இத்தீவுக்குப் பெயரிடப்பட்டது. இந்த்தீவின் தற்போதைய மக்களில் பெரும்பாலானவர்கள் இங்கு குடியேற்றப்பட்ட வங்கதேச அகதிகளாவர். இம்மக்கள்  1971 இந்திய பாக்கித்தான் போர்க்காலத்தில் அகதிகளாக வந்தவர்களாவர். இத்தீவில் ஐந்து கிராமங்கள் உள்ளன. அவை கோவிந்தா நகர். விஜய் நகர். ஷியாம் நகர், கிரிஷ்ணா நகர், இராதா நகர் ஆகும். இந்த பகுதி அந்தமான் நிக்கோபார் தீவு ஒன்றிய பகுதியின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒன்றாகும். இத்தீவில் சுற்றுலாதுறையை வளர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. மேற்கு கடற்கரையில் கடற்கரை எண். 7 ஐ கொண்டுள்ள இந்த இராதா நகர் கடற்கரை ஹேவ்லாக் தீவின் புகழ்வாய்ந்த கடற்கரைகளில் ஒன்றாகும். இது ஆசியாவின் சிறந்த கடற்கரை என்று டைம் இதழ் 2004 ஆண்டு குறிப்பிட்டது.[2] இத்தீவின் பிற குறிப்பிடத்தக்க கடற்கரைகள் வடகிழக்கில் உள்ள யானை கடற்கரை, மற்றும் விஜயநகர கடற்கரை, கலபாதர் கடற்கரை போன்றவை ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. [1]
  2. http://www.time.com/time/asia/2004/boa/boa_soul_andaman.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹேவ்லாக்_தீவு&oldid=2369559" இருந்து மீள்விக்கப்பட்டது