ஹேருகர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஹேருகர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஹேருகர் என்பது சக்ரசம்வரின் இன்னொரு பெயரும் ஆகும்

ஹேருகர்கள்(हेरुक) என்பது திபெத்திய பௌத்தத்தில் வணங்கப்படும் உக்கிர மூர்த்திகளை குறிக்கும். இவர்கள் உலக்த்தின் உயிர்கள் உய்ய வேண்டி உக்கிர உருவத்தை கொண்டுள்ளனர். ஹேருகர்கள் சூன்யத்தனமையின் உருவகமாக கருதப்படுபவர்கள்

சொற்பொருளாக்கம்[தொகு]

ஹேருகர் என்பதை ஹே + ருக(रुक) என்ற இருசொற்கள் இணைந்து ஹேருகர் என ஆகியிருக்கலாம் என கருதப்படுகிறது. ருக - என்றால் அளவில்லாத என்று பொருள்.

எட்டு ஹேருகர்கள்[தொகு]

கீழ்க்காணும் எட்டு ஹேருகர்கள் திபெத்திய பௌத்தத்தில் வணங்கப்படுகின்றனர். மேலும் அவர்கள் ஒவ்வொரு குணங்களின் அதிதேவதையாகவும் கருதப்படுகின்றனர்.

  1. யமாந்தகர், உக்கிர மஞ்சுஸ்ரீ, உடலின் அதிதேவதை
  2. ஹயக்ரீவர் உக்கிர அவலோகிதேஷ்வரர், பேச்சின் அதிதேவதை
  3. விஷுத்தர்(बिशुद्ध)/ஸ்ரீ சமயக் உக்கிர வஜ்ரபாணி, மனதின் அதிதேவதை
  4. வஜ்ராம்ருதர்(वज्रामृत) உக்கிர சமந்தபத்திரர், உத்தம குணங்களின் அதிதேவதை
  5. வஜ்ரகீலயர், உக்கிர நிவாரணவிஷ்கம்பின், செயலின் அதிதேவதை
  6. மாதரர் உக்கிர ஆகாயகர்பர், விரைவாற்றலில் அதிதேவதை
  7. லோகஸ்தோத்ரபூஜ-நாதர் உக்கிர ஷிதிகர்பர்(க்ஷிதிகர்பர்), நிவேதனம் மற்றும் துதியின் அதிதேவதை
  8. வஜ்ரமந்திரபிரு(वज्रमन्त्रभिरु) உக்கிர மைத்திரேயர், உக்கிர மந்திரங்களின் அதிதேவதை

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  • Gyatso, Geshe Kelsang. Essence of Vajrayana. New York: Tharpa Publications, 2003 ISBN 0-948006-48-X.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹேருகர்கள்&oldid=2048772" இருந்து மீள்விக்கப்பட்டது