ஹேரி ட்ராட்
ஜார்ஜ் ஹென்றி ஸ்டீவன்ஸ் " ஹாரி " ட்ராட் (George Henry Stevens "Harry" Trott 5 ஆகஸ்ட் 1866 - 9 நவம்பர் 1917) ஒரு முன்னாள் ஆத்திரேலிய துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் 1888 மற்றும் 1898 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பன்முக வீரராக 24 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார். ட்ராட் ஒரு சிறந்த மட்டையாளர், சுழற்பந்து பந்து வீச்சாளர் மற்றும் சிறந்த களத் தடுப்பாளர் என்றாலும், இவர் தலைவராகவே பரவலாக அறியப்படுகிறார். " [1]
ட்ராட் 1888 ஆம் ஆண்டில், இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார், மேலும் மூன்று முறை (1890, 1893 மற்றும் 1896 ஆம் ஆண்டுகளில்) இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஒவ்வொரு தொடரிலும் 1000 க்கும் மேற்பட்ட ஓட்டங்களை எடுத்துள்ளார். 1896 சுற்றுப்பயணத்திற்காக, ட்ராட் தனது அணியினரால் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இங்கிலாந்து தொடரில் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஒன்றை வென்றது மற்றும் தி ஆஷஸை தக்க வைத்துக் கொண்ட போதிலும், ஒரு தலைவராக ட்ராட்டின் திறன் மிகவும் மதிக்கப்பட்டது. 1897-98 ஆம் ஆண்டில் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணி ஆத்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகள் கொண்ட அந்த தொடரினை ஆத்திரேலிய அணி 4 போட்டிகளில் வென்று கைப்பற்றி ஆஷஸ் கோப்பையினை மீண்டும் வென்றது. ஆஸ்திரேலியக் கூட்டமைப்பு ஒரு விவாதத்தில், ட்ரொட்டினை ஒரு "தேசிய நிறுவனம் (அணி தேசத்தின் சொத்து)" என்றும் இவரது குழு இந்தக் கூட்டமைப்பினை விட ஆஸ்திரேலிய இதயங்களுக்காக அதிகம் செய்ததாக" பாராட்டப்பட்டது.[1]
ஒரு கடுமையான உளப் பிறழ்ச்சியால் தனது 31 ஆம் வயதில் தேர்வுத் துடுப்பாட்டத்தில் இருந்து ஓய்வு பெற்றார். 1898 இல் தொடர்ச்சியான வலிப்புத்தாக்கங்களுக்குப் பிறகு, இவர் தூக்கமின்மை, உணர்வின்மை மற்றும் நினைவாற்றல் இழப்பு ஆகியவற்றால் அவதிப்பட்டார். ஒரு வருடத்திற்கும் மேலாக ஒரு மனநல மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டார். இவர் வீடு திரும்பிய பிறகு , இவர் இறுதியில் துடுப்பாட்டத்திற்குத் திரும்பினார், மேலும் தனது மாநிலமான விக்டோரியா மற்றும் தெற்கு மெல்போர்னுக்காக தொடர்ந்து விளையாடினார். ட்ராட் ஓய்வு பெற்ற பிறகு, விக்டோரியாவின் தேர்வாளராக பல ஆண்டுகள் பணியாற்றினார். புற்றுநோயால் 52 ஆம் வயதில் இறந்தார்.
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்
[தொகு]மெல்போர்னின் உள் புறநகர்ப் பகுதியான கோலிங்வுட் நகரில் பிறந்த ட்ராட், கணக்காளர் அடோல்பஸ் ட்ராட் மற்றும் இவரது மனைவி மேரி-ஆன் (நீ ஸ்டீபன்ஸ்) ஆகியோருக்கு பிறந்த எட்டு குழந்தைகளில் மூன்றாவது குழந்தை ஆவார்.[2][3] இவரது தம்பி ஆல்பர்ட்டும் தேர்வுத் துடுப்பாட்ட வீரரானார். மேலும் இவரது சகோதரர்கள் உள்ளூர் துடுப்பாட்டச் சங்கத்திற்காக விளையாடினர். ஹாரி தென் மெல்போர்ன் தூட்ப்பாட்ட அணிக்காக விளையாடத் தேர்வானார்.
1886 ஆம் ஆண்டில் புத்தாண்டு தினத்தில் விக்டோரியாத் துடுப்பாட்ட அணி சார்பாக ஆத்திரேலிய லெவன் அ னிக்கு எதிரான முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். அந்தப் போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 18 ஓட்டங்களை எடுத்தார்.[4] இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இவர் தனது முதல் காலனித்துவ போட்டியில், தெற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்ட் ஓவலில் விளையாடினார்.
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 Robinson (1996), pp. 67–74.
- ↑ Pierce, Peter (1990). "Trott, George Henry Stevens (1866–1917)". Australian Dictionary of Biography, Online Edition. Australian National University. பார்க்கப்பட்ட நாள் 2008-04-08.
- ↑ Haigh (2004), pp. 107–115
- ↑ "Victoria v Australian XI: Other First-Class matches 1885/86". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 2008-04-17.