ஹேமலதா (பாடகி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஹேமலதா
படிமம்:Hemlata.png
ஹேமலதா
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்லதா பட்
பிற பெயர்கள்ஹேமலதா (பாடகி)
பிறப்பு16 ஆகத்து 1954 (1954-08-16) (அகவை 67) ஹைதராபாத், இந்தியா
பிறப்பிடம்ராஜஸ்தான், India
இசை வடிவங்கள்பின்னணி பாடகர், இந்துஸ்தானி பாடகர், பஜனைப் பாடகர்
தொழில்(கள்)பின்னணிப்பபாடகி
இசைக்கருவி(கள்)குரலிசை
இசைத்துறையில்1968–முதல் தற்போது வரை

ஹேமலதா (பிறப்பு: 16 ஆகத்து 1954, ஹைதராபாத்) ஒரு இந்திய இந்தி திரைப்படப் பின்னணி பாடகி ஆவார் [1] 1970 களின் பிற்பகுதியில் இவரது பாடல்கள் மிகவும் பிரபலமாவை. பாரம்பரிய இசையில் நன்கு பயிற்சி பெற்ற இவர். திரைப்படம், இசை நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி போன்றவற்ற தனது நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்..[2]

1977-81 காலகட்டத்தில் இவர் சிறந்த பின்னணிப் பாடகிக்கான பிலிம்பேர் விருதுக்கு ஐந்து முறை பரிந்துரைக்கப்பட்டார். 1977 ல் சிச்சார் என்ற இந்தி திரைப்படத்தில் ரவீந்திர ஜெயின் இசையமைப்பில் கே. ஜே. யேசுதாசுடன் இனைந்து பாடிய து ஜோ மேரே சுர் மெய்ன் என்ற பாடலுக்காக இவருக்கு பிலிம்பேர் விருது வழங்கப் பட்டது.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் பின்னணி[தொகு]

லதா பட் என்ற இயற்பெயர் கொண்ட ஹேமலதா ஹைதராபாத்தில் ஒரு கட்டுப்பாடான மார்வாரி, பிராமண குடும்பத்தில் பிறந்தார். பின்னர் குழந்தை பருவத்தை கல்கத்தாவில்.கழித்தார்.[3]

ஹேமலதாவிற்கு ஏழு வயது இருக்கும் போது கொல்கத்தாவின் ரவிந்திரா விளையாட்டரங்கில் மிகப்பெரிய பார்வையாளர் கூட்டத்தின் முன் நடத்தப்பட்ட பிரம்மாண்ட இசைக் கச்சேரியில் தந்தையின் சீடரான கோபால் மால்லிக் இவரது பாடும் திறமையை அங்கீகரிக்கும் விதமாக பாட வாய்ப்பளித்தார். பின்னா் அவரது தந்தை மும்பை செல்வதற்கு அனுமதி அளித்தார். மும்பை செல்வதற்கு முன் இடைப்பட்ட காலத்தில் இசையமைப்பாளர் ரவீந்திர ஜெயின் இசையில் மேற்படிப்பு படிப்பதற்காக கொல்கத்தா வந்தார். தினமும் குரு பண்டிட் ஜெய்சந்த் பட்டிடம் இசைப் பயிற்சிக்காக அவரது இல்லத்திற்து வந்தார். இசைப்பயிற்சிக்குப் பின் தனது சொந்தமான வங்காள இசையமைப்பை ஹார்மோனியம் கொண்டு உருவாக்குவார். அப்போது 12 வயதான ஹேமலதாவும் அவா்களுடன் இணைந்து பாடுவார். தாயார் அம்பிகா பட்டும் இவாின் இசை ஆா்வத்தை ஊக்கப்படுத்தினார். .

வாழ்க்கை[தொகு]

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

1966 ல், அவரது குடும்பம் மும்பை சென்றடைந்து அங்கு தெற்கு மும்பையின் கிர்கானில் வசிந்து வந்தனர். மும்பையில் வசிக்கும் போது. பிரபல இந்துஸ்தானி தபலா இசைக்கலைஞர் அல்லா ரக்கா கானை சந்தித்தனர். பின்னர் அவரது குடும்பம் மும்பை மாகிமுக்கு இடம் மாறியது. அடுத்து, அவர்கள் உஸ்தாத் ராயிசு கானை சந்திந்து அவரிடம் கஸல் பாடலைக் கற்றறிந்தார்.
இசை இயக்குநர் நௌசத் அலி அழைப்பினை பேரில் அவரை சந்தித்தார். அப்பொழுது அவருடைய குரல் வளத்தால் மிகவும் கவரப்பட்ட நௌசத் அலி அவருக்கு திரைப்படம் சாரா இசையமைப்பு ஒன்றில் பாட வாய்ப்பளித்தால். இதில் திருப்தியடைந்து குரல் முதிர்ச்சியடையும் வரை பொறுத்திருக்க ஆலோசனை வழங்கி அவர் பின்னர் திரைப்படத்தில் பாட வாய்ப்பளிப்பதாகவும் உறுதியளித்தார். பின்னர் நௌசத் அலியிடம் பாட ஐந்து வருடங்கள் பாட ஒப்பந்தம் செய்யப்பட்டார். நௌசத்தின் வழக்கமான பின்னணிப் பாடல் பயிற்சியை தொடங்கிய ஹேமலதா பின்னர் நௌசத் அலியால் பின்னணிப்பாடல் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் என ஊடகச் செய்திகளில் பேசப்பட்டார்.

இசை இயக்குனர் ரோஷன் அழைப்பின் பேரில் 1967 ஆம் ஆண்டு மும்பையின் சண்முகானநதா அரங்கத்தில் நடைபெற்ற ரோஷன் இரவுகள் இன்ற இசைக் கச்சேரியில் பாடினார். அதே வாரத்தில் ரூப் ரூப்பையா திபை்படத்திற்காக காமோஷ் மெயின் புர்ஜோஷ் என்ற தனது முதல் பாடலை உஷா கண்ணா இசையமைப்பில் பாடினார். 1968 ஆம் ஆண்டு ஏன் பூல் ஏக் ஃபூல் என்ற திபை்படத்தின் துஸ பைசே மெயின் ராம் லே லோ என்ற பாடலே முதன் முதலில் ளெியிடப்பட்ட பாடலாகும். 14 ஆவது வயதில் இசை அமைப்பாளர் கய்யாமின் கஸல் பாடல் ஒன்றில் பாட ஹேமலதாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Gurbani fascinates me, says Hemlata" (16 April 1999).
  2. "Music Reviews Ankhiyon Ke Jharokhon Se".
  3. "Hemlata – Interview". மூல முகவரியிலிருந்து 11 அக்டோபர் 2011 அன்று பரணிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹேமலதா_(பாடகி)&oldid=3230100" இருந்து மீள்விக்கப்பட்டது